தமிழர்










தமிழர் (Tamils, Tamilians) என்பவர் ஒரு தேசிய இனம். தமிழர்களின் தாய் மொழி தமிழ். தமிழர்கள் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். 1800-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950-களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டுப் பெருமளவு ஈழத்தமிழர்கள் அசுத்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, யேர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 68 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.


மொத்த மக்கள்தொகை: 77 மில்லியன்
அதிக மக்கள் உள்ள இடம்: இந்தியா: 61.5 மில்லியன் (6.32%)
இலங்கை: 2.7 மில்லியன் (18%)
மலேசியா: 1.06 மில்லியன்
தென்னாபிரிக்கா: 250 000
கனடா: 250 000
ஐக்கிய இராச்சியம்: 250 000 [4]
ஐக்கிய அமெரிக்கா: 100 000
பிரான்சு: 100 000
ரீயூனியன்: ?
சிங்கப்பூர்: 90,000
மொரிசியசு: 31,000

மொழி: தமிழ்
சமயம்/சமயம் அற்றோர்: இந்து, கிறித்தவம், இசுலாம், சமணம், பெளத்தம், இறைமறுப்பு, அறியாமைக் கொள்கை, மனிதநேயம், உலகாயதம், சமய சார்பின்மை
தொடர்புடைய இனக்குழுக்கள்: திராவிடர்
ஈழத்தமிழர்
மலையாளிகள்
தெலுங்கர்கள்
கன்னடர்கள்
தமிழகப் பழங்குடிகள்

தமிழ் அறிவோம்

தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. நம் முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,

எழுத்து
சொல்
பொருள்
யாப்பு
அணி
அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.


1 எழுத்து
1.1 முதலெழுத்து
1.2 சார்பெழுத்துகள்
2 எழுத்து குறித்த இலக்கணச் செய்தி
3 சொல்
4 பொருள்
5 யாப்பு
5.1 யாப்பின் உறுப்புகள்
5.2 யாப்பின் அடிப்படையில் பா வகைகள்
6 அணி