உலகின் விலை குறைந்த ஸ்மார்ட் போன்.



உலகின் விலை குறைந்த ஸ்மார்ட் போன்:
RINGING BELLS என்ற இந்திய நிறுவனம், ரூ.251 க்கு இந்த SMART  போனை அறிமுகம்.இந்த ஸ்மார்ட்போனுக்கு "ப்ரீடம் 251" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த குறைந்த விலை ஸ்மார்ட் போனை www.freedom251.com என்ற இணையதளத்தின் மூலம் பெறலாம்.
ப்ரீடம் 251 ல் சிறப் :
DISPLAY: 960x540 பிக்செல் திறன் கொண்ட 4 இன்ச் திரை.
MEMORY: 1GB RAM, 8GB INTERNAL MEMORY, 32 GB EXPANDABLE .
CAMERA: 3.2 MP . 0.3 FRONT CAMERA.
BATTERY: 1450 எம் ஏஹச் பேட்டரி.
* ஒரு வருட உத்தரவாதம். இதில் குறைபாடுகள் ஏற்பட்டால் சரி செய்வதற்காக நாடு முழுவதும் 650 சேவை மையங்களை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது.

எனது கிறுக்கல்கள்..........


பங்குச் சந்தையில் ஜெயிக்க வாரன் பஃபெட்(Warren Buffet) சொன்ன எளிய உத்திகள்

பங்குச் சந்தையில் ஜெயிக்க வாரன் பஃபெட்(Warren Buffet) சொன்ன எளிய உத்திகள் : 

Investment Strategies from Warren Buffet;

Warren Buffet ஒரு long term trader. அவர் என்ன மாதிரியான கம்பெனியின் பங்குகளை வாங்குகிறார் என்று பார்ப்போமா?

IT Software companies,fibre obtics, biotech கம்பெனிகளில் முதலீடு செய்திருப்பார் என்றால் சுத்தமாக இல்லை. அவர் பார்வையில் இந்த கம்பெனிகள் எல்லாம் Sexy. அவர் விரும்புவதோ girl next door.
அவர் உத்திகளில் மிக முக்கியமானது new economy அல்லது cutting edge of technology கம்பெனிகளில் முதலீடு செய்தால் முதலில் முதலீடு செய்கிற முதலீட்டாளர்களுக்கு அதிகமான பலன் கிடைக்காது. எதெல்லாம் பரபரப்பாக இருக்கிற தொழிலாக இருக்கிறதோ அதெல்லாம் நீண்டகால அடிப்படையில் பார்த்தால் பலன் உள்ளதாகவே இல்லை என்கிறார். ஐந்து வருடங்க்குக்கான பலனை எதிர்பார்த்து முதலீடு செய்யாதீர்கள். 10 அல்லது 20 வருடங்களுக்கானதை யோசியுங்கள் என்கிறார்.

அவர் முதலீடு செய்த கம்பெனிகள் அமெரிக்காவில் என்ன என்ன உற்பத்தியில் ஈடுபட்டவை தெரியுமா?

செங்கல், பெயின்ட், கார்ப்பெட், மரசாமான்கள் – இந்தகம்பெனிகளில் முதலீடு செய்தார். சீனாவில் ஒரு சமையல் எண்ணெய் தயாரிக்கிற கம்பெனியின் பங்குகளில் அந்த கம்பெனியின் பங்குகள் பாதாளத்தில் வீழ்ந்தபோது முதலீடு செய்தார். Underwear கம்பெனியில் பணத்தைப் போட்டார்.

தொண்ணூறுகளில் வந்த .com கம்பெனிகளில் பணம் போட மறுத்து விட்டார். அப்போது எல்லா முதலீட்டாளர்களுக்கும் .com ஜூரம் பிடித்திருந்த்து. அவர் சொன்னது அங்கே assets எங்கே உள்ளது. அவைகள் மிகக் குறைந்த காலத்துக்கு வெற்றிகரமாக இயங்கும் என்றார்.

அவரின் வாதப்படி, அந்தக் கம்பெனிகளின் வருவாய் எந்த எந்த வழிகளில் வரும் என்று என்னால் கணிக்கவே இயலாது. எது என்னால் கணிக்க இயலாதோ அதில் முதலீடு செய்யமாட்டேன். இந்த discipline மிக முக்கியம். இதை குலைக்கும்படியாக , தூண்டக்கூடிய நிகழ்வுகள் பங்குச்சந்தையில் நடக்கும். அப்போதெல்லாம் ‘செயலின்மை’தான். கம்மென்று இருப்பது. மனக்கட்டுப்பாடு அவசியம்.

தினம் தினம் வியாபாரம் செய்பவன் கொழுத்த லாபம் பார்க்க இயலாது என்கிறார் Warren Buffet.

கடைசியில் சிறந்த Performer யார் என்று பார்த்தால் அவர் Sexy Companies என்று சொன்னவை அல்ல. Boring companies என்று வர்ணிக்கப்பட்ட செங்கல், பெயின்ட், கார்ப்பெட்,Underwear கம்பெனிகளே

முயலும் ஆமையும் கதையை அவர் ஞாபகப் படுத்துகிறார். மெதுவாக என்றாலும் ஆமை ஜெயிக்கும் என்கிறார். நாம் அத்தகைய நிறுவனங்களை அடையாளம் கண்டு கொள்வதெப்படி?

· உங்களுக்கு சரிவர விபரம் தெரியாத business ல் முதலீடு செய்யாதீர்கள்.

· ஆதிகாலத்து business செய்கிற கம்பெனிகள் (உதாரணத்திற்கு செங்கல், பெயின்ட், கார்ப்பெட்,Underwear இதுபோன்று நிறைய business செய்கிற கம்பெனிகள்) பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். ஞாபகம் இருக்கட்டும். இது மட்டுமே போதுமானது ஆகாது. இந்தப் பட்டியல் முதல் சுற்றுக்கு தகுதியானது.

· Great Company என்று பெயர் எடுக்க நீண்டகாலம் பிடிக்கிறது. முதல் வருடம் நன்றாக லாபம் காட்டிவிட்டு அப்புறம் கீழே இறங்குகிறவை நிறைய உண்டு

இவை முதல் சுற்றுக்கான பட்டியல். இதன் பின்பு இவற்றிலிருந்து நீக்கப் பட வேண்டியவைகள் உண்டு. எப்படி நீக்குவது? நிறைய விஷயங்கள் உண்டு.

அதற்கு முன்னால் இன்னொரு விஷயம்...

ஒரு trader ரொம்ப active ஆக இருக்கிறார். பங்குகளை வாங்குகிறார் பங்குகளை விற்கிறார் என்றால் அவர் லாபம் சம்பாதிக்கிறார் என்று அர்த்தமில்லை. Achievement ஐயும் activities ஐயும் குழப்பிக் கொள்ளாதீர்கள். அவர் busy ஆக இருக்கிறார் என்றே அர்த்தம்.

Trading பண்றேன் என்பதற்காகவே trading பண்ற கூட்டத்தில் நீங்களும் சேர்ந்து விடாதீர்கள் என்கிறார் Warren Buffet .

நீங்களே முடிவு செய்யுங்கள். யார் பேச்சைக் கேட்டு முடிவு செய்யாதீர்கள். நீங்களே முடிவு செய்ய உழைப்பு தேவைப்படுகிறது. சட்டென்று முடிவு எடுத்து வாங்கி, சட்டென்று விற்று...இது வேண்டாம் என்கிறார்.

Mutual fund –ல் முதலீடு செய்தால் அதற்கு transaction cost என்றெல்லாம் உண்டு. நீண்ட காலத்துக்கு பங்குகளை வைத்திருக்க நீங்களே முதலீடு செய்யுங்கள் என்கிறார்.

நிறைய கேள்வி கேளுங்கள்

Prospectus படியுங்கள் நிறைய கேள்வி கேளுங்கள்.

உங்களுக்கு சந்தேகம் வருகிறமாதிரி இருந்தால் முதலீடு செய்யாதீர்கள். ஏனெனில் பணம் போனால் போனதுதான். ஆனால் வாய்ப்பு போனால் பங்குச் சந்தையில் மறுபடியும் கண்டிப்பாக வரும். அங்கே அலைகள் Greed மற்றும் Fear இந்த இரண்டினால் மறுபடி மறுபடி வரும்.

குறுகிய கால பலன்களை கணிக்கிற ரிப்போர்ட்ஸ் எல்லாமே எதிர்காலத்தைப் பற்றிச் சொல்வதில்லை. எவன் ஒருவன் கணிக்கிறானோ அவனைப் பற்றிய விவரங்களே' என்கிறார்.

Short term forecasts of stock or Bond prices are uselss. he says they tell more aBout the forecaster not aBout the future.

அவர் சொல்கிற காரணம் எதுவெனில் இந்த reports எல்லாமே பங்குகள் எப்படி போகிறது என்பதன் அடிப்படையில். ஆனால் அந்த கம்பெனியின் business எப்படி கடந்த காலங்களில் perform செய்தது என்ற விவரங்கள் வேண்டும். அதன் அடிப்படையில் முடிவெடு. அது அரைமணிக்கொரு முறை மாறிக்கொண்டிருக்கிற share price மாதிரி business இருக்கவே இருக்காது.

அப்படி மாறிக் கொண்டிருக்கிற புள்ளி விவரங்களை வைத்து தயாரிக்கப் படுகிற reort பிரயோஜனமில்லை என்கிறார் Warren Buffet.

முதலீட்டு முடிவு எடுப்பதில் பங்கின் சந்தை விலை மிக மிக குறைந்த அளவிலான பங்கு வகிக்கிறது. மற்றவை அந்த கம்பெனியின் business performance அடிப்படையிலேயே இருக்கவேண்டும்.