முதன்முதலில் -நாகரீகத்தை தோற்றுவித்தவன் தமிழன்.


முதன்முதலில்
-நாகரீகத்தை தோற்றுவித்தவன் தமிழன்.
- மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவன் தமிழன்.
- மொழிக்கு இலக்கணம் வகுத்தவன் தமிழன்.
- அரசாட்சிமுறை வழங்கியவன் தமிழன்.
- நீர் தேக்கத்தை(DAM) அமைத்தவன் தமிழன்.
-விவசாயம் செய்தவன் தமிழன்.
- கப்பல் போக்குவரத்தை தொடங்கியவன் தமிழன்.
- வணிகமுறையை கொண்டு வந்தவன் தமிழன்.
- இயற்கையை கடவுளாக வணங்கியவன் தமிழன்.
- அறநெறி நூல்களை உலகிற்கு வழங்கியவன் தமிழன்.
- செடி கொடிக்காக செல்வத்தை அழித்தவன் தமிழன்.
- பெண்ணுக்கு மதிப்பளித்தவன் தமிழன்.
- தாயை தெய்வமாக்கியவன் தமிழன்.
- நட்பை கற்புபோல் காத்தவன் தமிழன்.
-' நீதிக்காக உயிர் நீத்தவன் தமிழன்.
- கலைகளை வளர்த்தவன் தமிழன்.
- எகிப்து பிரமிடுகளை கட்டியவன் தமிழன்.
- ஒற்றைக்கல்லிலும் சிற்பம் செதுக்கியவன் தமிழன்.
- எதிரிகளையும் மன்னித்தவன் தமிழன்.
- வீரத்தை உலகிற்கு கற்றுக்கொடுத்தவன் தமிழன்.
- பெண்களுக்கும் வீரத்தை ஊட்டி வளர்த்தவன் தமிழன்.
- உலகின் பெரும் நிலப்பரப்பை ஆண்டவன் தமிழன்.
- துரோகத்தால் மட்டுமே வீழந்தவன் தமிழன்.

எப்போதும் ஜெயிக்க சில டிப்ஸ்:-

எப்போதும் ஜெயிக்க சில டிப்ஸ்:-
1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள்
எவ்வளவு சுவையாக இருந்தாலும்
உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும்
பரவாயில்லை. விருப்பமான
துறைகளில் நடக்கும்
பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும்
முக்கியம். அதில் எந்த சமரசமும்
செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக்
கட்டி விடுங்கள். வேண்டாத
செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால்
எழுந்து விடுங்கள். ஒருநாளின்
அலுவல்களை முன்
கூட்டியே திட்டமிடுங்கள்.
7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள்
சொல்லாமலே சர்க்கரை,
உப்பு ஆகியவற்றை கணிசமாகக்
குறைத்து விடுங்கள். முடிந்தால்
தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும்
காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள்.
பேசுகையில் கண்களைப் பார்த்துப்
பேசுங்கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும்
உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
11. வாரம்
மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ,
கட்டுரையோ, பிழையில்லாமல்
எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய
சிறப்பம்சங்களையே பேசுங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களையும்
அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின்
தவறுகளை மன்னி யுங்கள்.
ஒரு போதும் மறக்காதீர்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள்
முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக்
கடந்து,
பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள்
தகுதிகளையும் தவறுகளையும்
பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள்
மேல் உங்களுக்கு இருக்கும்
அக்கறையை உணர்த்துங்கள்.

திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும்...

திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும்...
*காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி கொடுத்தால் போதும்,
இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.
* பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன்,
என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!
*பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் ,இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!
* சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?
* தோட்டத்தில் நீ நின்றிருந்த போது
உன்னை உரசிச் சென்ற வண்டு , மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று !!!
* மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,
இதோ மின்னல் தென்படுகிறது,..
அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!
* என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கரை என்றேன் ,
என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.
* உன் குரல் கேட்காத நாட்களில்,
நான் கேட்ட எதுவும் என் நினைவில் இருப்பதில்லை ..!!
* என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை
அன்பு செலுத்தினால் போதும் அன்பே..