ஆளறிந்து அட்வைஸ் பண்ணு!


ஆளறிந்து அட்வைஸ் பண்ணு!
அட்வைஸ் செய்யும்போது யாருக்கு செய்கிறோம் என்பது முக்கியம். மிகவும் முரட்டுத்தனமாக இருப்பவர்களை 'பட்டு திருந்தட்டும்' என்று விட்டுவிடுவதுதான் நல்லது. இதை விளக்கும் ஒரு குட்டிக்கதை...
மழை சுழற்றியடித்துக்கொண்டிருந்த ஒரு நாளில், மரத்தடியில் ஒதுங்கியது ஒரு பெரிய குரங்கு. மரத்தில் கூடுகட்டியிருந்த ஒரு குருவி, மழையில் நனையும் குரங்கைப் பார்த்து வருந்தியது. அது குரங்கிடம் ''நான் சுறுசுறுப்பாக செயல்பட்டு கூடு கட்டியதால், இன்று மழையில் நனையாமல் சௌகரியமாக இருக்கிறேன். நீயும் சிரமத்தை பார்க்காமல் உழைத்து உனக்கான இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடாதா..!'' என்று கேட்டது. ஏற்கெனவே கஷ்டத்தில் இருந்த குரங்கு, 'குருவி எல்லாம் அட்வைஸ் பண்ணுதே' என்று மிகவும் கடுப்பானது.
``ஊசி மூஞ்சி மூடா... எனக்கா புத்தி சொல்கிறாய்! எனக்கு கூடு கட்டத் தெரியாது. ஆனால், கட்டிய கூட்டைக் கலைக்கத் தெரியும்'' என்ற குரங்கு, குருவிக்கூட்டை நாசம் செய்துவிட்டது. அட்வைஸ் செய்து அவதியில் சிக்கிய குருவி, ``இனிமேலாவது வாயைப் பொத்திக்கிட்டு இரு" என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டது.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!
* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.
* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.
* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.
* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.
* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.
* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.
* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.
* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.
* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்
* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.
* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.
* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.
* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.
* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.
* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.
* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.
* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.
* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.
* தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.
* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

தாமிரபரணியை உறிஞ்ச வரும் பெப்சி ஆலை:

 
Indian constitution's photo.


தாமிரபரணியை உறிஞ்ச வரும் பெப்சி ஆலை:
15லட்சம் லிட்டர் தண்ணீரை தாரை வார்க்க திட்டம்
(படித்ததும் அவசியம் பகிரவும் )
திருநெல்வேலி:நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் ஜீவாதாரத்தை உறிஞ்சி தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் பெப்சி ஆலை துவங்கப்படுவதற்கு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர், விவசாய தேவைக்குமான ஒரே ஆதாரமாக தாமிரபரணி நதி உள்ளது. இந்த ஆற்றை நம்பித்தான் ஆண்டுக்கு இரண்டு போகம் நெல்சாகுபடி மற்ற உணவு உற்பத்தியும் நடக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பொய்த்துவரும் மழையினால் தாமிரபரணி ஆற்றின் நீர் நிலையும் குறைந்து வருகிறது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் தேதியன்று கார் நெல் சாகுபடிக்கு ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் முடியும் தருவாயிலும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இரண்டு மாவட்டங்களிலும் நடக்கவேண்டிய ஒரு லட்சம் ஏக்கர் பரப்பிலான நெல் சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் கண்ணீரும் கம்பலையுமாக தவிப்பில் உள்ளனர். இந்தசூழலில்தான் விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போல ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில், சுமார் 36 ஏக்கர் நிலம் பெப்சி குளிர்பான நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
கங்கைகொண்டானில் ஏற்கனவே கோககோலா நிறுவனம் இங்கு துவக்கப்படும்போது பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.அதையும் மீறி நிறுவனம் துவக்கப்பட்டது. அந்த நிறுவனம் சுற்றுப்பட்ட கிராமங்களுக்கு செய்துதருவதாக உறுதியளித்த எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை.
கேரள உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் பெப்சி நிறுவனத்தை துவக்க ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக தமிழகத்திற்குள் வந்தது. ஆரம்பத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நிலம் கேட்டார்கள். ஆனால் அங்கு தி.மு.க.,வின் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டத்தை கைவிட்டனர். தற்போது சத்தமில்லாமல் கங்கைகொண்டானில் 36 ஏக்கர் நிலத்தை வாங்கி பூமிபூஜை போட்டுள்ளனர்.
இந்த நிறு
வனங்களுக்கு ஆயிரம் லிட்டர் தாமிரபரணி தண்ணீரை வெறும் 37 ரூபாய்க்கு வழங்குகின்றனர். அதாவது ஒரு லிட்டர் தண்ணீரை 37 பைசாவுக்கு வாங்கி, ஒரு லிட்டர் அக்வாபினா குடிநீர் பாட்டிலை 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக ஒரு ஏக்கர் நிலம் வெறும் ஏழு லட்சம் ரூபாய் வீதம் 36 ஏக்கர் நிலம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.