❤ஒரு ஜென் கதை❤
நல்லசிவம் பெரிய பணக்காரர். அவருடைய வீட்டில் திரும்பிய திசையெல்லாம் வேலைக்காரர்கள். விரல் சொடுக்கினால் ஓடி வருவார்கள். கேட்டதெல்லாம் உடனே கிடைக்கும்.
ஒருநாள் நல்லசிவம் விரல் சொடுக்கினார். யாரோ ஓடிவந்தார்கள். ‘கடைக்குப் போய் அரைக் கிலோ வெண்டைக்காய் வாங்கிட்டு வா!’ என்றார்.
அந்த வேலைக்காரர் ஓடினார். பை நிறைய வெண்டைக்காயோடு திரும்பிவந்தார்.
நல்லசிவம் அதைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டுச் சீறினார். ‘முட்டாள்! எல்லாம் முத்தல்காய். வெண்டைக்காயை உடைச்சுப் பார்த்து வாங்கணும்னு தெரியாதா?’
அடுத்த நாள் அதே நல்லசிவம். அதே சொடுக்கல். அதே வேலைக்காரர். ‘கடைக்குப் போய் ஒரு தீப்பெட்டி வாங்கிட்டு வா!’
வேலைக்காரர் மறுபடி ஓடினார். ஒரு தீப்பெட்டி வாங்கினார். முந்தின நாள் முதலாளி சொன்னது ஞாபகம் வந்தது. ஒவ்வொரு தீக்குச்சியாகக் கிழித்துப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டார். ‘சபாஷ்’ என்று தனக்குத்தானே ஒரு ஷொட்டு கொடுத்துக்கொண்டு வீடு திரும்பினார்.
ஆனால் இன்றைக்கும் அவருக்குத் திட்டுதான் கிடைத்தது. ‘என்னடா தீப்பெட்டி வாங்கிட்டு வந்திருக்கே? ஒரு குச்சிகூட எரியலை?’
‘தெரியலீங்கய்யா. நான் கொளுத்திப் பார்த்தபோது எல்லாம் ஜோரா எரிஞ்சுதே!’
வாழ்க்கைக்கான பொதுவிதிகள் என்று எவையும் கிடையாது.
இன்றைக்குச் சரியாகத் தோன்றுபவை நாளைக்கு இன்னொரு சூழ்நிலையில் தவறாக மாறிவிடலாம்.
தாய்ப்பாலும் விஷமாகலாம், கள்ளிப்பாலும் உயிரைக் காப்பாற்றலாம், நிலைமையைப் பார்த்து வழியை மாற்றிக்கொள்வதற்குதான் ஆறாம் அறிவு!❤