அட்சயப்பாத்திரம்

அட்சயப்பாத்திரம்
அரிசியின் வகைகளும் அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மை தீமைகளும்.
கருங்குருவை- விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.
மாப்பிள்ளை சம்பா- இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும்.
கைகுத்தல் புழுங்கல் அரிசி- low glycemic தன்மை கொண்டது. அது இரத்ததில், சர்க்கரை அளவினை மெதுவாக ஏற்றி சர்க்கரை நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் (hyper glycemia) தடுக்கும். குழந்தைகள், வாத இருப்பவர்கள், அரும்பத்தியம் இருப்பவர்களுக்கு உதவும்.
புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான்.
காட்டுயானம்- ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும். டைப் 2 சக்கரை வியாதி நோயாளிகளுக்கு உகந்தது.
அன்னமழகி- மிகவும் இனிப்பு சுவையுள்ள‌ அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியது. உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.
இலுப்பைப் பூச்சம்பா- பித்தத்தினால் விளையும் சிற்சில ரோகம், சிரஸ்தாபம், உபசர்க்கதாகம், உஷ்ணம் ஆகியவற்றை உண்டாக்கும்.
கல்லுண்டைச்சம்பா- இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்.
காடைச்சம்பா- இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.
காளான் சம்பா- உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.
கிச்சிலிச்சம்பா- பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.
குறுஞ்சம்பா- பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.
கைவரை சம்பா- உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இதில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்.
சீதாபோகம்- உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.
புழுகுச்சம்பா- இந்த அரிசியை உண்பவர்களுக்கு வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.
மணக்கத்தை- தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.
மணிச்சம்பா- அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.
மல்லிகை சம்பா- நாவிற்கு மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.
மிளகு சம்பா- உடலுக்கு சுகத்தை தரும். பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.
மைச்சம்பா-வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம்,வாந்தி போன்றவற்றை போக்கும்.
வளைத்தடிச் சம்பா- வாத, பித்த தொந்தரவு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், கரப்பான் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.
வாலான் அரிசி- மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், கொழுமையும் உண்டாக்கும்.
மூங்கில் அரிசி- மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்.
பழைய அரிசி- பாலர், முதியோர்களுக்கு மிகவும் உகந்தது. பசியும், உடலுக்கு குளிர்ச்சியும் உண்டாகும். சில நோயும், கபமும் குறையும்.
கார் அரிசியை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.
குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.
குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.
சீரகச் சம்பா சிறுவாத நோய்களைக் குணமாக்கும், இனிப்புள்ளது. சாப்பிட தூண்டும்.
கோரைச் சம்பா அரிசி வாதப்பித்த நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும். குளிர்ச்சி தரும். உட்சூடு, நமைச்சல், அதிமூத்திரம் இவைகளை நீக்கும்
ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும்.

நாம் அறிந்ததை பிறரையும் அறிய செய்வோம்..........

நாம் அறிந்ததை பிறரையும் அறிய செய்வோம்..........
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! -
இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி
ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால்
அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி
செய்தால், வலி குறைகிறது. இது எப்படி
ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும்
அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள
பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள்
தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில
முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால்,
நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில
நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு
காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை
செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’
என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால்,
உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்?
வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை
கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி
குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி
நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம்.
அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால்,
அசிடிட்டியால் துன்பப்படுகிறோம்.
மருந்தில்லாமல் தலைவலியை எப்படி
போக்குவது? நம் உடலின் அனைத்து
உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு
புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.
படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை
குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும்.
கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப்
பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில்
காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில்
உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை
விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம்
கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம்
கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம்
கொடுக்கும் போது, மூச்சை உள்ளே
இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை
வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு
முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன்
நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால்,
மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம்
கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து
முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ்
புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம்
கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ்,
தும்மல், இருமல் இவை வெகுவாக
குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு
வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும்,
பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும்
இருமுறைகள் காலையிலும், மாலையிலும்
செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை
மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்
றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக
குறைகிறது.
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி,
வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும்
நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில்
ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும்
இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில்
எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய
அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி
உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள்
அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press &
Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது
அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு
உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும்
போது வலி தெரியும். இரு கைகளிலும்
அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல்
மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு,
“ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை.
இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அதிகமான வாயு வெளியேறுகிறது.
மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு,
இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24
என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும்
உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு
கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின்,
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம்
கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால்,
கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து
வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில்
இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை
குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி
கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள
இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு
விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம்
சுற்றும் திசையில், 14 முறையும்,
எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும்.
இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது,
கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக
குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி
நிவாரணம் கிடைக்கிறது.