ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!!

இருக்குங்க..!!
1, ஒரு ஆண் கடுமையா உழைச்சா.. பொண்டாடியை
கண்டுக்கமாட்றான்'னு.. மட்டம் தட்டுவாங்க..!!
2, பொண்டாடியை கவனிச்சுக்கிட்ட ா.. அவளையே சுத்தி வாரான்..
பொண்டாட்டி தாசன்'னு கட்டம் கட்டுவாங்க..!!
3, அது போகட்டும்.. ஒரு பொண்ணை பார்த்து.. அழகா
இருக்கே'னு சொன்னா.. அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுறாங்க..!!
4, கண்டுக்காம போன.. அழகை ரசிக்க தெரியாத ஜடம்..ன்னு
அமுக்கி வைப்பாங்க..!!
5, ஏதாச்சும் அழுதோம்..ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரு'னு
சொல்லுவாங்க..!!
6, திடமா இருந்தா.. நெஞ்சில ஈவு இறக்கம் இல்லாத அரக்கன்'னு
வாருவாங்க..!!
7, பொண்டாடியை கேட்டு முடிவெடுத்தா.. தானா முடிவு
எடுக்க தெரியாத.. முட்டாள்'னு பட்டம் கட்டுவாங்க..!!
8, சரி'னு நாமளே ஒரு முடிவெடுத்தா.. ஆம்பளை'ங்கற
அதிகாரம்..ன்னு திட்டுறாங்க..!!
9, ஏதாவது பிடிச்சத வாங்கிட்டு போய் கொடுத்தா.. என்னத்துக்கு
இப்போ காக்கா பிடிக்கிறிங்க..? அப்படி'னு ஒரு நக்கல்..!!
10, ஒன்னுமே வாங்கிட்டு போகலை'னா.. ஒரு முழம்
பூவு'க்கு கூட.. நான் விதியத்து போய்டேனா..ன்னு மூக்கை
சிந்திட்டு.. விக்கல் வேற..!!
11, ஒரு குறிக்கோளோடு உழைச்சா.. வேலையை
கட்டிக்கிட்டு.. மாரடிக்க வேண்டியது தானே.. எதுக்கு
உங்களுக்கு பொண்டாட்டி.. ன்னு
ஒரு ஏசல்..!!
12, சரி'ன்னு சினிமாவுக்கு அழைச்சிட்டு போனா.. அந்த
ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணும்'ங்க.. எப்படி உழைச்சி
முன்னேறி.. கார் பங்களா வாங்கி இருக்கான்.. பாத்தீங்களா..? ன்னு..
ஒரு பூசல்..!!
13, இதையெல்லாம் கேட்டு.. சகிப்பு தன்மை வந்து..
வாழ்க்கையே வெறுத்து.. தற்கொலை செய்து
கொள்ளலாம்'னு முடிவெடுத்தா.. இத பாரு.. வாழ்வதற்கு பயந்து
கொண்டு.. தற்கொலை செய்ய பாக்குறான்.. பயந்தா கொள்ளி பய..
ன்னு சொல்லுவாங்க..!!
14, சரி'ன்னு இது போல.. பூசல்களை கேட்டும் கேக்காமல்
தன் வழியே ஒரு ஆண் நடந்து போனா.. இதப் பாரு நாம பேசுற
பேச்சுக்கு.. இதே வேற எவனா இருந்தா தூக்குல தொங்குவான்..
இவன் ஒரு மானாங்கெட்ட பய..ன்னு சொல்லுவாங்க..!!
அன்பு நண்பர்களே...
இத பார்த்து நல்லா இருக்கு'னு எழுதினா.. ஆண் ஆதிக்க உலகம்
அப்படி'னு சொல்லுவாங்க..!!
இது தப்பு பெண்கள் நல்லவர்கள்'னு எழுதினா.. உலகம்
தெரியாத பைத்தியகாரன்..ன ்னு
சொல்லுவாங்க..!!
பொதுவா ஆண்களுக்கு பிரச்சினை.. இருந்து கொண்டே
தான் இருக்கு..!!
Subscribe to:
Posts (Atom)