
இந்த இதழ் (29-10-2015) சிநேகிதியில் வழி சொல்கிறார் மாண்டிசோரி விஜயா
1. முதலில் அவர்களே ஸ்பூனில் எடுத்து சாப்பிடப் பழக்குங்கள். ஷூ அண்ட் சாக்ஸை அதனுடைய ரேக்கில் இருந்து எடுத்துகொண்டு வர சொல்லிக் கொடுங்கள். இதுதான் சரியான குழந்தை வளர்ப்பு முறையும்கூட.
2. பொதுவாக குழந்தைகள் ஒரு விஷயத்தை தனக்குத்தானே அணிந்து கொள்வதைவிட சுலபமா கழட்ட கத்துக்கும். உதாரணத்துக்கு டிரெஸ், ஷூ, டை, ரிப்பன் போன்றவற்றை நம்மைவிட வேகமாக அவர்கள் கழற்றி விடுவார்கள். இந்த சமயங்களில் சின்ன சிரிப்போடு அவர்களை லைட்டாக என்கரேஜ் செய்யுங்கள். ரொம்ப என்கரேஜ் செய்து விடாதீர்கள். அவர்களது வளர்ச்சி கன்ட்ரோல் ஆகிவிடலாம்.
3. உன்னோட ஸ்கூல் பேகில் நீயே புக்ஸ், பென்சில் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொண்டால் தான் ‘நீ குட் கேர்ள்’ என்று சொல்லுங்கள். இந்த குட் கேர்ள், குட் பாய் மந்திரத்துக்கு குழந்தைகள் அழகாக கட்டுப்படுவார்கள்.
4. சில பொடிசுகள் அம்மா செய்து தராத வேலையை அப்பாவிடம் செய்து வாங்கிக் கொள்ளும். அதேபோல் அப்பா செய்யாததை அம்மாவிடம் சாதித்துக் கொள்ளும். இந்த டைப் பிள்ளைகளை, ‘அம்மா லன்ச் பாக்ஸை பேக்ல வைப்பேனாம். நீங்க வாட்டர் பாட்டிலை வைப்பீங்களாம்’ என்று அவர்கள் அறியாமலேயே அவர்களை வேலை செய்யப் பழக்க வேண்டும்.
5. குழந்தைகள் தானாகவே ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டுமென்றால், அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை வரிசையாக சொல்லிக் கொடுங்கள். காலையில் எழுந்ததும் தானாகவே பல் தேய்த்துக் கொள்வது, பாலை தானாகவே குடிப்பது, அம்மா சோப்புப்போட்டால் தண்ணியை மொண்டு உடம்பில் தானே ஊற்றிக் கொள்வது, அப்பா உடம்பு துடைத்த பிறகு தானே ஜட்டியை போட்டுக் கொள்வது, அம்மா யூனிஃபார்மை எடுத்தால் ஷூவையும் சாக்ஸையும் பிள்ளைகளை எடுக்க வைப்பது என்று வரிசையாக சொல்லிக் கொடுங்கள். பிள்ளைகளுக்கும் இந்த வேலைக்குப் பிறகு இதைச் செய்ய வேண்டும் என்று மனதில் பதியும்.
6. குழந்தைகளுக்கு பெற்றோர்தான் ரோல்மாடல். இந்த விஷயத்திலும் அப்படித்தான். நீங்கள் ஷூவை ரேக்கில் இருந்து எடுக்க மனைவியை கூப்பிடாமல் நீங்களே எடுத்துக் கொண்டீர்களென்றால், குழந்தையும் அதுவே எடுக்கும். ஷூவை தட்டிவிட்டு போட்டீர்களென்றால் குழந்தையும் அதையே ஃபாலோ செய்யும்.