விண்டோஸ் 7 க்கான தொழில்நுட்ப மேம்படுத்துதலை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியது...

 

 

2009ம் ஆண்டு வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 இயக்குதளம் இன்று உலகில் பாதி கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இலவசமாக  இயக்குதளத்தில் புதிய வசதிகளை செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட்.
இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தங்களின் புதிய பதிப்பாக வர  இருக்கும்  விண்டோஸ் 10 இயக்குதளத்தை நேர்த்தியாக வடிவமைக்க முயன்று வரும் இன் நிறுவனம். தனது விண்டோஸ் 8 பெற்ற கசப்பான விமர்சனங்களை நீக்கும் வண்ணம் பல முயற்சிகள் செய்து வருகிறது.
நம்மில் பலரும் விண்டோஸ் XP யே நல்லா இருக்கே என பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவில் காசு கொடுத்து இயக்குதளம் வாங்குவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது, ஆனால் அந்த மென்பொருள்கள் மீது பில்கேட்சை விட அதிகமாக விமர்சனம் செய்வோம்.​ 7 இல் உள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தொடர்ந்து 2020 வரை தீர்வுகளை அளிப்போம் என மைக்ரோசாப்ட் உறுதியளித்துள்ளது.

உலக நீர் தினம் மார்ச் 22 2016 (WORLD WATER DAY!!!)...

உலக நீர் தினம் மார்ச் 22 2016 (WORLD WATER DAY!!!)

1992ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் செய்யப்பட்ட சிபாரிசையடுத்து மார்ச் 22ம் தேதியை உலக நீர் தினமாக ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 18 வருடங்களாக இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.



உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.

உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்தும் துறை விவசாயமாகும். 85 சதவீதம் விவசாயத்துக்காக நீர் பயன்படுத்தப்படுகின்றது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கைத்தொழில்த்துறை 10 சதவீதத்தைப் பயன்படுத்துகின்றது. எஞ்சிய 5 சதவீதமே வீட்டுப் பாவனைக்குரியது. எனவே, அருமையாக உள்ள வளத்தை மக்கள் தற்போது எவ்வாறு பாவிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே எதிர்கால மக்களின் வாழ்வு அமையுமென குறிப்பிடப்படுகின்றது.


 


எனவே, நீர் எங்கள் உயிருக்கு நேர் என்று நாம் கருதி செயல்பட வேண்டும். ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு பவுண் தங்கம் என எண்ணி நாம் நடந்து கொள்ள வேண்டும். நீர் இன்றேல் பார் இல்லை என்று நாம் கருத வேண்டும். அனைத்து வளங்களுக்கும் தாய்வளம் தண்ணீர். ஊர் வளம் பெற, பார் வளம் பெற நீர் வளம் காப்போம் என இந்த தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்.