தமிழ் எண்களின் பெயர் விளக்கம்
முனைவர். கா.மீனாட்சிசுந்தரம் விளக்கம்
முனைவர் கா.மீனாட்சிசுந்தரம் எழுதிய “அகராதிக்கப்பால்” எனும் நூலில்
(மங்கை நூலகம் வெளியீடு- 1980-இரண்டாம் பதிப்பு) பக்கம் 92-93 ல் கால்
மற்றும் அரை எனும் எண்களுக்கான விளக்கமளித்துள்ளார்.
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவரவர் கைச்சான் அளவில் எட்டுச் சான் இருப்பர். “எறும்புக்கும் தன் கையால் தன்னுடல் எண் சான்” என்பது பழமொழி .
“அடி முதல் முழங்கால் வரை இரண்டு சான்கள், அதாவது எட்டுச் சான் உடலில்
எட்டில் இரண்டு பங்கு. எட்டில் இரண்டு பின்னத்தைச் சுருக்கினால் நான்கில்
ஒன்றாகிறது. உடனே “கால்” எனப் பெயரிட்டான். அடி முதல் இடுப்பு வரை நான்கு
சான்கள். எட்டில் நான்கு அரையாயிற்று. எனவே இடுப்பை “அரை” என்று
பெயரிட்டான்.” என்று கால் மற்றும் அரை எண்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
தேவநேயப் பாணர் விளக்கம்
தேவநேயப் பாவாணர்
எழுதிய “தமிழ் வரலாறு” எனும் நூலில் (கழகப் பதிப்பு - 1990- இரண்டாம்
பதிப்பு) பக்கம் 176- முதல் 181 வரை ஒன்று முதல் பத்து வரையிலான எண்கள்
மற்றும் நூறு, ஆயிரம், இலக்கம், கோடி ஆகியவைகளுக்கும் விளக்கமளித்துள்ளார்.
ஒன்று
- ஒல் - ஒன் - ஒன்று - ஒல்லுதல் -பொருந்துதல்
- ஒன்று சேர்தல் என்பதால் "ஒன்று" என்றானது.
- ஒல் ஓர் ஒரு (பெயரெச்சம்)
இரண்டு
- ஈர் - இர் - இரது - இரண்டு - ஈர்தல் - ஒன்றை இரண்டாக அறுத்தல்
- ஈர், இர், இரு (பெயரெச்சம்)
மூன்று
- முப்பட்டையான மூக்கின் பெயரினின்று தோன்றியிருக்கலாம்.
- மூசு - மூகு மூ (மூது) மூறு - மூன்று
- மூ (பெயரெச்சம்)
நான்கு
- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்கிற நால்வகை நிலத்தொகைப் பிறப்பு, ஞாலம் நானிலம் எனப்படுதல் காண்க.
- நால் - நால்கு - நான்கு
- நால் - நான்கு
- நால் (பெயரெச்சம்)
ஐந்து
- கை - ஐ (ஐது) - ஐந்து - அஞ்சு
- கை = ஐந்து, கையில் ஐந்து விரல்களிருப்பதால் ஐந்தென்னும் எண்ணைக் குறித்தது. வறட்டி விற்கும் பெண்டிர் ஒவ்வொரு ஐந்தையும் ஒவ்வொரு கை என்பர், கை எனும் சொல்லின் மெய் நீக்கமே ஐ.
- கை - ஐ (பெயரெச்சம்)
ஆறு
- ஆறு = வழி, நெறி மதம், பண்டைத் தமிழகத்தில் ஐந்திணைச் சிறு தெய்வ வணக்கமும், கடவுள் வழிபாடும் சேர்ந்து அறுவகை ஆறாய் இருந்ததினால் ஆறென்னும் மதப் பெயர் ஆறென்னும் எண்ணைக் குறிக்கலாயிற்று.
- ஆறு - அறு (பெயரெச்சம்)
ஏழு
- எழு - எழுவு, எழுவுதல் இசைக் கருவியினின்று ஒலியெழச் செய்தல், இன்னிசை ஏழாதலால் அது எழுதலைக் குறிக்கும் சொல்லினின்று ஏழ் என்னும் எண்ணுப் பெயர் தோன்றிற்று.
- எழு ஏழ் ஏழு
- எழு (பெயரெச்சம்)
எட்டு
- தமிழில் எல்லை என்னுஞ் சொல் இடவரம்பையும் திசையையும் குறிக்கும். எல்லை என்பதற்கு ஒரு பொருள் மறுசொல் எண் என்பதாம். நேர்த்திசை நான்கும், கோணத்திசை நான்குமாகத் திசை எட்டாதலின் திசையைக் குறிக்கும் எண் என்னுஞ் சொல் எட்டு எனும் எண்ணுப் பெயரைத் தோற்றுவித்தது.
- எண் - எட்டு
- எண் (பெயரெச்சம்)
தொண்டு(ஒன்பது)
- தொள் - தொண்டு = தொளை.
- தொண்டு - தொண்டி = தொளை.
- மாந்தன் உடம்பில் ஒன்பது தொளையிருந்தால் தொளைப் பெயர் அதன் தொகைப் பெயராயிற்று. தொண்டு வழக்கற அஃதிருந்த இடத்திற்குத் தொண்பது (90) தொன்பதாகி ஒன்பதாகியது
பத்து
- பல் = பல
- பல் - பது - பத்து - பஃது
நூறு
- நுறு - நூறு = பொடி,
- நுறு - நுறுங்கு - நொறுங்கு
- நூறு (பொடி) எண்ண முடியாதிருப்பதால் அதன் முடியாதிருப்பதால் அதன் முதற் பெருந்தொகையைக் குறித்தது.
- நூறு -நீறு
ஆயிரம்
- அயிர்- நுண் மணல்
- அயிர் அயிரம் ஆயிரம்
- ஆற்று மணலும் கடற்கரை மணலும் ஏராளமாய் இருப்பதால் மணற்பெயரும் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று.
இலக்கம்
- இலக்கு = குறி
- இலக்கு - இலக்கம் = குறி
- எண்குறி, எண், பேரெண்.
கோடி
- குடி - குடுமி = உச்சி, தலையுச்சி, ஆடவர் தலை மயிர்க்கற்றை, பறவைச்சூட்டு, மகுடம், மாடவுச்சி, மலையுச்சி, நுனி, குடு - கொடு,
- கொடுமுடி - மலையுச்சி,
- கொடு - கோடி = நுனிமுனை, கடைசி, எல்லை, முடிமாலை
- கோடம் = எல்லை, கடைக் கோடி எனும் வழக்கை நோக்குக. தெருக்கோடி, விற்கோடி என்பனவும் முனையைக் குறித்தல் காண்க.
- கோடகம் - முடிவகை
- கோடி கடைசி எண்ணாதலால் அப்பெயர் கொண்டது.
வெங்கடாச்சலத்தின் விளக்கம்
மூலம் - தொல்காப்பியமும் கணித வாய்ப்பாடு இலக்கணமும்[1]
- கும்பம் - ஆயிரம் கோடி
- கணிதம் - பத்தாயிரங்கொடி
- தாமரை - கோடானுகோடி
- சங்கம் - பத்துகொடானுகோடி
- வாரணம் - பத்து கோடானுகோடி
- பரதம் - லட்சம் கோடானுகோடி
ஆதாரம்
- முனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்) பக்கம் 134 முதல் 137 வரை.
ஆறுமுக நாவலர்
ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற
வாழ்க்கைக் குறிப்பு
தோற்றம்
ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு ஆண்டு மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் ப.
கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய
அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு
நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள்
நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி
பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார்.
கல்வி
ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும்
தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால்
முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.
யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும்
திறமை பெற்றார். அவரது இருபதாவது வயதில் அப்பாடசாலையில் ஆசிரியராகப்
பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறித்தவ விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னைப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.
பணிகள்
சமயப் பணி
சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ்
வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம்
வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847
ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம்
செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு
ஏற்பட்டது.
வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார்.சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது மத்திய கல்லூரி 3 பவுண் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார்.
அச்சுப் பணி
சைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1849 ஆடி மாதம் சென்னை சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.
தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.
தமிழகப் பணி
இவரது பணி இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார்.
1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை
சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு
அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு
ஆசீர்வதிக்கப்பட்டார்.
குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை
ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித்
தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல
வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார்.
1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.
போலியருட்பா மறுப்பு
இராமலிங்கம்பிள்ளை (வள்ளலார்) தாம் பாடிய பாடல்களைத் திருமுறைகளுடன் ஒப்பிட்டு, சில ஆலய உற்சவங்களிலே திருமுறைகளுக்குப் பதிலாகத் தமது பாடல்களைப் பாடுவதைக் கண்ட நாவலர், போலியருட்பா மறுப்பு எனும் நூலை எழுதி வெளியிட்டார். 1869
ஆனியில் சிதம்பரம் சென்றார். அப்போது சைவாகம விடயமாகவும் சிவதீட்சை
விடயமாகவும் நாவலர் தெரிவித்த சில கருத்துக்களால் மனம் பேதித்திருந்த சில
தீட்சிதர்கள், வள்ளலாரைக் கொண்டு சிதம்பராலயத்தில் 1869 ஆனி உத்தரத்தன்று
ஒரு கூட்டம் கூட்டினார்கள். அங்கு நாவலரைப் பலவாறாகத் நிந்தித்து விட்டு,
நாவலர் தம்மை அடித்ததாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்குத்
தொடுத்தார்கள். இவ்வழக்கில் வழக்காளிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.[சான்று தேவை]
சிதம்பர வழக்கின் பின் நாவலர் தருமபுரி, திருவிடைமருதூர், திருவேட்டக்குடி, காரைக்கால், கோடிக்கரை ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் 1870 பங்குனியில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.
சைவப் பாடசாலை நிறுவல்

நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் உள்ள ஆறுமுக நாவலர் மணிமண்டபம்
1870இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெசுலியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [சான்று தேவை]
அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை
வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால்
இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது.
1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம்,
நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு
சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி,
போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி
முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர்
ஈடுபட்டார்.
ஆறுமுக நாவலரின் உரைத்திறன்
நீதி வெண்பா உரையில்,
நன்றறியாத் தீயோர்க் கிடங்கொடுத்த நல்லோர்க்கும்
துன்று கிளைக்கும் துயர்சேரும்-குன்றிடத்தில்
பின்இரவில் வந்தகரும் பிள்ளைக் கிடங்கொடுத்த
அன்னமுதற் பட்டதுபோ லாம் (-74)
துன்று கிளைக்கும் துயர்சேரும்-குன்றிடத்தில்
பின்இரவில் வந்தகரும் பிள்ளைக் கிடங்கொடுத்த
அன்னமுதற் பட்டதுபோ லாம் (-74)
என்ற பாடற்கதையை நாவலர் பின்வருமாறு விளக்குகின்றார்;-
“எவராலும் ஏற முடியாத ஒரு பெரிய மலைக்குகையில் ஓர் அரச அன்னம் அன்னப்
பட்சிகளோடு வாசம் செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாள் இரவு பெருமழையினால்
வருந்திய ஒரு காக்கை, தான்இருக்க இடம்கேட்டது. மந்திரியாகிய அன்னம்
காக்கைக்கு இடம் கொடுக்கலாகாது என்று சொல்லவும், அரச அன்னம் அதன் சொல்லைக்
கேளாமல் காக்கைக்கு இடம் கொடுத்தது. காக்கை அன்று இரவில் அங்கே தங்கி
எச்சமிட அவ் எச்சத்தில் இருந்து ஆலம் வித்து முளைத்து எழுந்து பெரிய
விருக்ஷமாகி, விழுதுகளை விட்டது. ஒரு வேடன் விழுதுகளைப் பற்றிக் கொண்டு
அம்மலையில் ஏறிக் கண்ணிவைத்து அன்னங்களைப் பிடித்தான்”.
மொழித்திறன் குறித்த நிகழ்ச்சி
ஆறுமுக நாவலர் ஆங்கிலப் புலமையும் வாய்ந்தவர்.வழக்கு ஒன்றில் சாட்சி
அளிக்க வேண்டியிருந்த போது நீதிமன்றத்திற்குத் தமது மாணவர்களுடன்
வந்திருந்தார் ஆறுமுக நாவலர். அக்கால ஆங்கிலேய நீதிபதிகளுக்கு
மொழிபெயர்த்துச் சொல்ல அதிகாரிகள் இருப்பார்கள். ஆறுமுக நாவலர்
ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பிக்க, குறுகிய மனம் கொண்ட நீதிபதி அதை
ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாமல் முணுமுணுத்தபடி தமிழில் கூறச் சொல்லி உத்தரவிட,
ஆறுமுக நாவலர் உடனே, ’எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே
காலேற்று காலோட்டப்புக்குழி’ என்று துவங்கினார். மொழிபெயர்ப்பாளர்
திணறிப்போனார். கோபமுற்ற நீதிபதி ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட நாவலர்
மறுத்து தமிழிலேயே கூறினார். அவரது மாணவர் மொழிபெயர்த்தார். ’சூரியன்
தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர் கடற்கரை ஓரம் காற்று வாங்கச்
சிறுநடைக்குப் புறப்பட்டபோது’ என்பது அவர் கூறியதற்கு அர்த்தம்.
(எல்லி,ஆழிவரம்பு,கால் ஏற்று,காலோட்டம்,புக்குழி எனும் வார்த்தைகளுக்கு
முறையே சூரியன்,கடற்கரை ஓரம்,காற்று வாங்க,சிறுநடை,புறப்பட்டபோது என்று
பொருள்) [1]
சாதிப்பிரசாரம்
சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில்
இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை
வலியுறுத்தினார். "தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது" போன்ற
தீண்டாமைக் கருத்துக்களைத் தனது 'முதலாம் சைவ_வினாவிடை' எனும் நூலில்
வலியுறுத்தியுள்ளார்.
எனினும், மூடத்தனமான சாதிக் கட்டுப்பாடுகள் இருந்த அந்தக் காலத்தில், சாதியிலும் சமயமே அதிகம். சமயத்திலும் சாதியதிகமென்று கொள்வது சுருதி, யுத்தி அனுபவம் மூன்றிற்கும் முழுமையும் விரோதம் என்ற கருத்தையும் கூறியிருக்கிறார் நாவலர்.
நகுலேஸ்வரம்
போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் எனும் பழைமையான சிவபெருமான் திருக்கோயிலை மீண்டும் உருவாக்க முயற்சி செய்தார்.
இறுதி நாட்கள்
நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசைத் தினமான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879ஆம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது. அடுத்த மூன்று தினங்களும் குளிக்க முடியாதிருந்ததால் நாவலரது நித்திய சிவபூசை வேதாரணியத்துச் சைவாசாரியர் ஒருவரால் செய்யப்பட்டது. 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05-12-1879) இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் கட்டளையிட்டு அவைகள் ஓதப்படும்போது சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர், முதலிய புண்ணியத்தலங்களின் விபூதி அணிந்து, உருத்திராட்சம் பூண்டு, கங்காதீர்த்தம் உட்கொண்டு, கைகளைச் சிரசின்மேற் குவித்து, இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
இரட்டுறமொழிதல் அணி
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி
எனப்படும். இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர். ஒரு சொல் பிரிபடாமல்
தனித்துநின்று பல பொருள் தருவது செம்மொழிச் சிலேடை என்றும் , சொற்றொடர் பல
வகையாகப் பிரிக்கப்பட்டுப் பல பொருள்களைத் தருவது பிரிமொழிச் சிலேடை
என்றும் பெயர் பெறும்.
எடுத்துக்காட்டு
திருக்குற்றாலக் குறவஞ்சியில் உள்ள பின்வரும் பாடலில் இவ் அணியைப் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம்.
பல்லவி கண்ணி கொண்டு வாடா-குளுவா கண்ணி கோண்டு வாடா!
மீறும் அலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ் வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போனநாள் ஆறுநாட் கூடி ஒருகொக்குப் பட்டது அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில் சாறாக வைத்தபின் வேதப் பிராமணர் தாமுங் கொண்
டார்சைவர் தாமுங் கொண்டார்தவப் பேறா முனிவரும் ஏற்றுக்கொண் டார்இதைப் பிக்குச் சொல்லாமலே கொக்குப் படுக்கவே (கண்ணி)
விளக்கம்
குற்றாலத்தில் பறவைகள் பெரும் எண்ணிக்கையில் வலசை வந்து மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் சிங்கன் அப்பறவைகளைப் பிடிப்பதற்காகத் தன் நண்பனைக் கண்ணி கொண்டுவரச் சொல்கிறான். இவ்வாறு செய்வதில் தவறில்லை எனச்சொல்லும் வகையில் அமைந்த இப்பாடலின் நேரடிப் பொருள்
பொதுவான அறிவுக்கு ஒவ்வாததாக அமைந்திருந்தாலும் அதன் உள் மறைபொருள்
ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமைந்துள்ளது. இப்பாடல் இவ்வகையில் நயத்துடன்
அமைந்துள்ளது.
- நேரடியான பொருள்
வடிவழகிலே அனைவரையும் மிஞ்சும் இலஞ்சி நகர்க் குறத்தியின் மணாளன், செவ்வேளாகிய குறவன் தனது முதல் வேட்டைக்குச் சென்றான். அம்முறை ஆறு நாட்களுக்குப் பின்னர்தான் அவனுக்கு ஒரு கொக்கு அகப்பட்டது. அதை அவித்து ஒரு சட்டியிலே குழம்பாகச் சமைத்தான். அதனை மறையோதும்
பிராமணர்களும், சைவர்களும் உண்டனர். தவப்பேறுடைய முனிவர்களும் அதை
ஏற்றுக்கொண்டனர். அதனால் மறுப்பேதும் சொல்லாமல் வேட்டையாடுவதற்குக் கண்ணியை
எடுத்துக்கொண்டு வாடா குளுவா!
- உட்பொருள்
முருகன் (குறவன்) சூரனாகிய மாமரத்தைத் (கொக்கைத்) தான் படையெடுத்துச் சென்ற ஆறாவது நாளில் வென்றான். அது சட்டித் திருநாள் எனப்படும். சாறு என்றால் திருவிழா எனும் பொருளும் உண்டு. அச்சட்டித்திருநாளை அனைவரும் கொண்டாடுவர். இவ்வாறான உட்பொருளைக் கவிஞர் சுவைபட உரைத்துள்ளார்.
எடுத்துக்காட்டு உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது.உவமையும் உவமேயமும் தனித்தனித் தொடர்களாக வரும். உவம உருபு வெளிப்பட வருவதில்லை.
உதாரணம்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் தோண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.இங்கு மணற்கேணி தோண்டப்படுவது உவமையாகும். மனிதர் கற்பது உவமேயம் ஆகும். போல என்னும் உவம உருபு வெளிப்பட வரவில்லை.
இல்பொருள் உவமையணி
இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.
இங்கே வலிமையான பாலைவனத்தில் பட்டமரம் தளிர்ப்பது என்பதே அன்பில்லா வாழ்க்கைக்கு உவமையாகக் காட்டப்படுகிறது. வலிமையான பாலைவனத்தில் பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அப்படியொரு நடக்க முடியாத அல்லது இல்லாத ஒரு விடயத்தை உவமையாகக் காட்டுவதே இல்பொருள் உவமையணி
எடுத்துக்காட்டு
அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கைஅதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது.
வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று
இங்கே வலிமையான பாலைவனத்தில் பட்டமரம் தளிர்ப்பது என்பதே அன்பில்லா வாழ்க்கைக்கு உவமையாகக் காட்டப்படுகிறது. வலிமையான பாலைவனத்தில் பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அப்படியொரு நடக்க முடியாத அல்லது இல்லாத ஒரு விடயத்தை உவமையாகக் காட்டுவதே இல்பொருள் உவமையணி
வேற்றுமை அணி
தமிழ் இலக்கணத்தில் வேற்றுமை அணி என்பது இரு பொருள்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையைக் கூறி, பின் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது ஆகும்.
எடுத்துக்காட்டு
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் 'திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள் மறுவாற்றும் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து தேய்வர் ஒரு மாசுறின்'இச்செய்யுளில் சான்றோருக்கும் திங்களுக்கும் முதலில் ஒற்றுமை கூறிப் பின்னர் வேற்றுமைப் படுத்தியுள்ளது.
வஞ்சப்புகழ்ச்சியணி
வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.
கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)
’காதம்’ என்பது பழங்காலத் தமிழ் அளவுமுறை. ஒரு காதம் = சுமார் ஆறே முக்கால் கிலோமீட்டர்
எடுத்துக்காட்டுகள்
புகழ்வது போல் இகழ்தல்
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
மேவன செய்தொழுக லான்
-
- திருக்குறள் - திருவள்ளுவர்
கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)
இகழ்வது போல் புகழ்தல்
பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே
-
- புறநானூறு பாடியவர்: கபிலர்
விகடராமன் குதிரை
முன்னே கடிவாளம், மூன்று பேர் தொட்டு இழுக்கப்
பின்னே இருந்து இரண்டு பேர் தள்ள – எந்நேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காத வழி!
பின்னே இருந்து இரண்டு பேர் தள்ள – எந்நேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காத வழி!
-
- நூல்: தனிப்பாடல், பாடியவர்: காளமேகம்
’காதம்’ என்பது பழங்காலத் தமிழ் அளவுமுறை. ஒரு காதம் = சுமார் ஆறே முக்கால் கிலோமீட்டர்
தற்குறிப்பேற்ற அணி
தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.
எ.கா.2:
நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைக் கண்ட புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக கூறுகிறார்.
எ.கா.3:
நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்("அலவன்") தம் வளையில் இருந்து வெளிக்கிட்டு கடல் நாடிச் செல்கின்றன. இதை கண்ட புலவர், மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனை பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கின்றன என்கிறார்.
எடுத்துக்காட்டுகள்
எ.கா.1:போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட சிலப்பதிகாரம்விளக்கம்:
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.
எ.கா.2:
தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால் கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல் கூவினவே கோழிக் குலம். நளவெண்பாவிளக்கம்:
நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைக் கண்ட புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக கூறுகிறார்.
எ.கா.3:
காரிருளில் கானகத்தே காதலியை கைவிட்ட பாதகனை பார்க்கப் படாதேன்றோ - நாதம் அழிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி ஒழிக்கின்ற தென்னோ உரை. நளவெண்பாவிளக்கம்:
நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்("அலவன்") தம் வளையில் இருந்து வெளிக்கிட்டு கடல் நாடிச் செல்கின்றன. இதை கண்ட புலவர், மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனை பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கின்றன என்கிறார்.
உருவக அணி
உருவக அணி என்பது
உவமையாக உள்ள
பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இது
என
உறுதிப் படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று
என்ற
உணர்வு
தோன்ற
இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவது ஆகும்.
இது
உவமை அணியின்
மறுதலை.
விதி:
"உவமையும்
பொருளும்
வேற்றுமை
ஒழிவித்து
ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்".
எடுத்துக்காட்டு
இதுதான் அது.
அவளின்
முகம்தான் சந்திரன்.
- பச்சை மாமலை போல் மேனி - இது உவமை அணி.
- மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி
இதில்
கண்ணனை
மை,
மாமலை,
மறிகடல் என
உருவகிக்கப் படுகிறது. மை
போன்ற
மேனி
என்று
சொல்லியிருந்தால் இது
ஒரு
உவமையணி. ஆனால் மையோ என்னும் போது
அவன்
மேனிதான் மை
என்று
சொல்லியாயிற்று. இது
உருவக
அணி.
எடுத்துக் காட்டுகள்
·
உவமை
அணி
- மதிமுகம் (மதி
போன்ற
முகம்)
·
உருவக
அணி
- முகமதி
(முகம்தான் மதி)
·
உவமை
அணி
- புலி
போன்ற
வீரன்
வந்தான்
·
உருவக
அணி
- புலி
வந்தான்
·
உவமை
அணி
- மலர்க்கை (மலர்
போன்ற
கை)
·
உருவக
அணி
- கைமலர்
(கைகள்தான் மலர்)
·
உவமை
அணி
- வேல்விழி (வேல்
போன்ற
விழி)
·
உருவக
அணி
- விழி
வேல்
(விழிதான் வேல்)
Subscribe to:
Posts (Atom)