மனதில் கொள்




மனதில் கொள்

ஒருவரிடத்தில் அன்பு குறையும் பொழுது, அவரின் தவறுகள் பெரியதாக தெரியும்!!!

எண்ணம்போல் தான் வாழ்க்கை!! நல்ல எண்ணமே நல்ல வாழ்க்கையை தரும்!!!.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைக்க வேண்டும்!!!

மற்றவர்களை திருத்துவது நம் வேலை அல்ல, நாம் சரியாக இருப்போம்!!! 

எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்!!!

அதிகாலை விழிப்பும்,உடற்பயிற்சியும் ஆயுளை அதிகரிக்கும்!!!

அலட்சியமும் சோம்பலும் கூடாது!!! 

நம்மால்  முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவியையும் சந்தோசத்தையும் கொடுக்க வேண்டும்!!! 

கோபம் அறிவை அழிக்கும்!!!

எதுவும் நிரந்தரமில்லை, எல்லாம் சில காலம்தான்!!!

வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம்!!!

நம்மால் முடியாதது யாராலும் முடியாது!! யாராலும் முடியாதது நம்மால் முடியும்!!!

மனிதனால் மனதில் நினைத்தால், எதுவும் சாத்தியமே!!!

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்!! நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்!!!

மற்றவர்கள் இல்லாத பொழுது, அவர்களை பற்றிய புறம் பேசுவது நல்ல பழக்கம் கிடையாது!!!

எதுவும் நிரந்தரமில்லாத உலகில், இருக்கும் வரை நாமும் சந்தோசமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷ படுத்துவோம்!!!

மூலிகைகள் ஒரு சிறிய பார்வை

மூலிகைகள் ஒரு சிறிய பார்வைsalemtamil

இலுப்பை :-

இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகும்.

இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து தடவி செந்நீர் ஒற்றடம் கொடுக்க இடுப்பு வலி தீரும்.

10 கிராம் பூவை 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர தாது பெருகும்.

இம்பூறல்:-

இலைச்சாற்றைத் தடவி வர சுர வேகத்தில் காணும் உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் தீரும்.

வேரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து, அதனுடன் சிறிதளவு அரிசி மாவு கலந்து அடை செய்து காலை, மாலை சாப்பிட அனைத்து கப நோய்களும் தீரும்.

உசில்:-

உசிலம் இலையைப் பொடி செய்து எண்ணெய் முழுக்கின் போது தேய்த்துக் குளிக்க உடல் குளிர்ச்சி பெறும்.

இதன் வேர்ப்பட்டை, வெங்காயம், கரியாக்கிய வசம்பு வகைக்கு 10 கிராம் எடுத்து நீரிலிட்டு காய்ச்சி குடிநீராக்கி வேளைக்கு 1-2 தேக்கரண்டி 3 வேளை கொடுக்க குழந்தைகளின் அள்ளு மாந்தம் குணமாகும்.

ஒதியன்:-

ஒதியன் மரப்பட்டைக் குடிநீரால் புண், புரையோடிய புண்கள் இவற்றைக் கழுவலாம்.
ஒதிய மரத்தின் பிசினைப் பொடி செய்து 400 மி.கி. அளவு கொடுக்க இருமல் நோய் குணமாகும்.

உப்பிலாங்கொடி:-

இலையை வதக்கிப் பிழிந்த சாறு – 10 மி.லியை 10 மி.லி தாய்ப்பாலுடன் காலை, மாலை கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் மாந்தம், இரத்தக் கழிச்சல் இவை நீங்கும்.

மாந்தத்தினால் வயிறு உப்பிகாணின் குழந்தைகளின் அரையில் இக்கொடியை கட்ட தீரும்.

ஊசித்தகரை:-

இலையை நீரிலிட்டுக் காய்ச்சி 10 மி.லி வீதம் காலை, மாலை கொடுக்க குழந்தைகள் பல் முளைக்குங்கால் ஏற்படும் காய்ச்சல் தணியும்.
விதையைப் புளித்த மோரில் அரைத்துத் தடவ படை, சிரங்கு, ஆறாப்புண் ஆகியவை குணமாகும்.

எருக்கு :-

இலையை வதக்கி கட்டிகளுக்குக் கட்ட அவை பழுத்து உடையும்
பூ – 1 பங்கு; மிளகு – 1 பங்கு, கிராம்பு – ½ பங்கு சேர்த்து மிளகளவு உருட்டிக் கொடுக்க கடின இரைப்பு உடனே தணியும்.

எழுத்தாணிப் பூண்டு :-

இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி உடம்பில் தடவ சொறி, சிரங்கு இவை குணமாகும்.

வேர் – 5 கிராம் பாலில் அரைத்து கலக்கி வடிகட்டி காலை, மாலை உண்டு வர மார்பகம் வளர்ச்சியுறும்.

ஓமவல்லி / கற்பூரவல்லி :-

இலைச்சாறுடன் கற்கண்டு சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல் தொண்டைச் சதை வளர்ச்சி குணமாகும்.

இலைச்சாறுடன், சர்க்கரை, நல்லெண்ணெய் இவற்றை நன்கு கலந்து நெற்றியில் பற்றிட தலைவலி நீங்கும்.

இலைச்சாறுடன் நல்லெண்ணெய் கூட்டி எரித்துப் பக்குவமாக்கி வடிகட்டி கரும்படை, கரப்பான் இவைகளுக்குப் பூச குணமாகும்.

ஓரிதழ் தாமரை :-

இலையை நாள்தோறும் சிறிதளவு மென்று தின்று பால் அருந்தி வர 40 நாளில் தாது இழப்பு, வெட்டைச்சூடு, பலவீனம் ஆகியவை தீரும்.

இலை, கீழாநெல்லி இலை, யானை நெருஞ்சில் இவை மூன்றையும் 1 பிடி அளவு எடுத்து அரைத்து எருமைத் தயிரில் கலந்து 10 நாட்கள் சாப்பிட நீர்த்தாரை புண், வெள்ளை ஒழுக்கு ஆகியவை தீரும்.

கண்டங்கத்திரி :-

இதன் பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல்வலி தீரும்.
கண்டங்கத்திரி சமூலத்தைக் குடிநீரிட்டுக் குடிக்க உடலின் நீரேற்றம், மூக்கு நீர் பாய்தல், இரைப்பு இவை தீரும்.

கரிசாலை / கரிசலாங்கண்ணி :-

கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை, ஆகியவற்றின் சூரணம் சமன் கலந்து நாள்தோறும் காலை, மாலை ½ தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இளவயதில் தோன்றும் நரை மாறும்.

மஞ்சள் கரிசாலையைக் கறியாகச் செய்து உண்ண உடல் பொன்நிறம் பெறும். அறிவு தெளிவு பெறும்.

ஊமத்தை :-

இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம் ஆகியவை தீரும்.

இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இளஞ்சூட்டில் காதில் விட சீதளத்தால் வந்த காதுவலி தீரும்.

இலையை நீர் விடாது நல்லெண்ணெயில் வதக்கி நாய்க்கடிப் புண்ணில் கட்ட ஆறும்.

கருவேல் :-

கருவேலம்பட்டைக் குடிநீரைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல்லாட்டம் ஆகியவை குணமாகும்.
இலையை அரைத்துப் புண்கள் மீது கட்ட விரைந்து ஆறும்.
    
    


சர்க்காரியா ...



வீராணம் திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பு, 16 கோடி.

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலைப்பார்த்து விட்டு 26 கோடி ரூபாய் என்பது ஒரு பெரியதொகையாக தோன்றாமல் போகலாம்.

இத்திட்டம்மதிப்பீடு செய்யப் பட்ட போது, சென்னை அண்ணாசாலையில் வீட்டோடு சேர்த்து, 1240 சதுர அடி இடத்தைமாறன் ரூ.45,000/- க்கு வாங்கியுள்ளார் என்பதை வைத்து அந்தக் காலத்து பண மதிப்பை புரிந்துகொள்ளுங்கள்.

தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின்நெருங்கிய தொடர்பால், நஷ்டப் படுவது என்றுமேமக்கள் பணமாகத்தான் இருக்கிறது.

முரசொலி மாறனுக்கு சென்னை பச்சையப்பன்கல்லூரியை நடத்தும், பச்சையப்பன் அறக்கட்டளையில்உறுப்பினராக வேண்டுடமென விருப்பம். பச்சையப்பன்அறக்கட்டளையில் உறுப்பினராவது. பச்சையப்பன்ட்ரஸ்ட் என்பது பாரம்பரியமிக்க ஒரு ட்ரஸ்டாகும். இந்தட்ரஸ்டில் உறுப்பினர் ஆவது சமுதாயத்தில் மிகப் பெரியஅந்தஸ்தை பெற்றுக் கொடுக்கும்.

அதனால் எப்படியாவது இந்த அறக்கட்டளையில்உறுப்பினராக வேண்டுமென மாறன் விரும்பினார். 1970ல் பச்சையப்பன் அறக்கட்டளையில் உறுப்பினராகஇருந்த சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்தின்உரிமையாளர் சத்யநாராயணாவின் மருமகன்புருஷோத்தம் என்பவரோடு, மாறன் “வாங்க பழகலாம்”என்று பழகத் தொடங்குகிறார்.

புருஷோத்தமுக்கு மாறனின் நட்பு என்ன கசக்கவாசெய்யும் ? இவர் தொழில் அதிபர். மாறன்,முதலமைச்சரின் மருமகன். அவரும், நெருங்கிப்பழகுகிறார்.
1970 ஜனவரியில், பச்சையப்பன் ட்ரஸ்ட்அறங்காவலராக இருந்த எம்ஏஎம்.முத்தையா செட்டியார்இறக்கிறார். அவர் இறந்தவுடன், மாறன், ‘அண்ணன்எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்’ என்றுஅந்தக் காலியிடத்தில் தான் உறுப்பினராக வேண்டும்என்று தனது விருப்பத்தை புருஷோத்தமிடம்தெரிவிக்கிறார். முதலமைச்சரின் மருமகனை எதிர்த்து,வேறு யாரும் தேர்ந்தெடுக்கப் பட்டு விட முடியுமா என்ன?

மாறனின் பெயரை புருஷோத்தம் முன்மொழிந்து மாறன்பச்சையப்பன் அறக்கட்டளையின் உறுப்பினராகிறார்.பிறகு சிறிது நாட்களிலேயே, அந்த அறக்கட்டளையின்தலைவர் பதவியையும் கைப்பற்றுகிறார் மாறன்.

தலைவர் பதவியை மாறனுக்கு விட்டுக் கொடுத்தபுருஷோத்தம் கைமாறாக எதுவுமே எதிர்ப்பார்க்கமாட்டாரா ? எதிர்ப்பார்த்தார். மாறனிடம், தங்கள்நிறுவனமான சத்தியநாராயணா பிரதர்ஸூக்கு, வீராணம்குழாய்கள் அமைக்கும் உத்தரவை பெற்றுத் தருமாறுகூறுகிறார்.

மாறன், “நான் காண்ட்ராக்ட் வாங்கித் தர்றேன்… பதிலுக்குநீங்கள் என்ன தருவீர்கள்” என்று கேட்கிறார். என்னவேண்டும் என்று கேட்டதற்கு, ஒப்பந்தத்தில் இரண்டரைசதவிகிதத்தை கமிஷனாகத் தர வேண்டும் என்று மாறன்கேட்கிறார்.

உடனே கணக்குப் போடுகிறார்கள். மொத்த திட்டச்செலவு 16 கோடி. அதில் இரண்டரை சதவிகிதம் என்பது40 லட்சம். இந்தத் தொகையை கொடுத்து விடுங்கள்என்று மாறன் கூறவும், புருஷோத்தமும் ஒப்புக்கொள்கிறார்.

பூர்வாங்கப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதல்லவா ?அடுத்த கட்டத்திற்குப் போகிறார்கள். சத்யநாராயணாபிரதர்ஸ், நிறுவனத்திற்கு, பூர்வாங்கமாக ஒப்பந்தம்வழங்கி ஒரு உத்தரவு வேண்டுமென்று கேட்கிறார்கள்.மாறன் மட்டும் சளைத்தவரா என்ன ? சரி உங்களுக்குஅது போல ஒரு உத்தரவு வழங்கப் படும். “அதுக்குமுன்னால பேசிய தொகையை குடுங்க” என்கிறார் மாறன்.

புருஷோத்தமுக்கு வேறு வழி…. தனது மாமனார்சத்தியநாராயணா ரெட்டியிடம் இந்தத் தகவலைதெரிவிக்கிறார். அவர், “இவ்வளவு பெரிய தொகையைமொத்தமாக தர இயலாது. அதனால் கொஞ்சம்குறைத்துக் கொள்ளச் சொல்லி பேசு” என்று கூறுகிறார்.

மாறனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. மொத்தமாக தரஇயலாது. முதலில் 10 அல்லது 15 லட்சம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். மாறனோ, “நான்ஒன்றும் பெரிய தொகையை கேட்டு விடவில். மிககுறைந்த தொகையாகிய 40 லட்சத்தைத் தான்கேட்டுள்ளேன். குடுத்தா குடுங்க…. இல்லன்னா எவ்ளோபேரு, ரெடியா இருக்காங்க தெரியுமா ? “ என்றுகூறுகிறார்.

ஒரு வழியாக, மீதத் தொகைகளை பின்னால் தருவதுஎன்றும், முதல் தவணையாக அட்வான்ஸாக ஒரு தொகைதரப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப் படுகிறது.

ஒப்பந்தப் புள்ளிகள் முடிவடைவதற்கு முன்பாகவே,பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்நிலையிலேயே, புருஷோத்தமும், அவர் மாமனார்சத்யநாராயணா ரெட்டியும், மாறனோடு சேர்ந்துகருணாநிதியின் இருப்பிடத்திற்குச் சென்று, கரன்சிநோட்டுக்களாக, 5 லட்ச ரூபாயை வழங்குகிறார்கள்.

இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.பேசுவதெல்லாம், தமிழ் எங்கள் மூச்சு, இதயத்தின் வீச்சு,உயிரே போச்சு என்றெல்லாம் பேசுவபர்கள், துட்டுவாங்கும் விவகாரத்தில் மட்டும், தெலுங்கு ரெட்டியை தேர்ந்தெடுக்கிறார்கள் பார்த்தீர்களா…. ? பணத்துக்கு நிறமோ, மொழியோ ஏது…. ?

முதல் தவணை தொகை கொடுக்கப் பட்டவுடன்,சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்கு வரிசையாகஅரசுப் பணம் வழங்கப் படுகிறது. அதையொட்டி,பேசிய தொகையை தருமாறு, நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசிடமிருந்துசத்யநாராயணா பிரதர்ஸுக்கு அரசு வழங்கிய மொத்தத்தொகை 3.9 கோடி. புருஷோத்தம், கருணாநிதிக்கு,நேரடியாகவும், மாறன் மூலமாகவும் வழங்கிய தொகை32 லட்சம்.

இந்த தொகையை இவர் கருப்புப் பணத்திலிருந்துவழங்கியுள்ளார், அதனால், இவரும், இக்குற்றத்திற்குஉடந்தையானவர், இவர் வாதத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றெல்லாம் கருணாநிதி தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால், புருஷோத்தமன், தேதி வாரியாக,எந்தெந்த நாட்களில், வங்கியிலிருந்து, எவ்வளவுதொகை எடுக்கப்பட்டு, கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டது என்ற விபரங்களை கமிஷன் முன்பு தாக்கல்செய்தார்.

புருஷோத்தம் தனது சாட்சியத்தில், ஒரு முறைகருணாநிதியிடம் நேரடியாக பணத்தை எடுத்துச் சென்றுகொடுத்ததை இப்படி விவரிக்கிறார்.

“கரன்ஸி நோட்டுக்களாக, 6 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு மாறன் வீட்டுக்குச் சென்றோம். மாறன்கருணாநிதி வீட்டிக்குக் கூட்டிச்சென்றார். பணம்அடங்கிய தோல் பெட்டியை மேசை மீது கருணாநிதிமுன்னிலையில் வைத்தேன். கருணாநிதி பணத்தைஎடுத்துக் கொண்டு காலிப் பெட்டியை திருப்பிக்கொடுத்தார்“

இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருந்த போது, சிவராமன் என்றபொதுப்பணித்துறை அதிகாரி, தாராப்பூர் மற்றும்,சத்யநாராயணா பிரதர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின்ஒப்பந்தப் புள்ளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து,முக்கியமான ஒரு விஷயத்தைச் சொன்னார்.

குழாய்கள்அமைக்கும் போது, அவற்றை சோதனை செய்து பார்க்க, 12 கோடி காலன் தண்ணீர் தேவைப்படும் என்றும் அந்தத்தண்ணீருக்கு ஆகும் செலவாக அரசு, தங்களுக்கு 96லட்சம் வேண்டுமென்றும் கேட்டிருந்தனர்.

தாராப்பூர்நிறுவனமோ, இது போன்ற ஏற்பாட்டிற்கு ஆகும்செலவை அவர்களே ஏற்றுக் கொள்வதாகதெரிவித்திருந்தனர். ஆனால், இதையெல்லாம் யார்காதில் வாங்குவது…. ? இந்த ஆட்சேபணையையும் மீறி,சத்யநாராயணா நிறுவனத்துக்கே வேலை ஆணைவழங்கப் பட்டது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய கணக்காயர் (சிஏஜி)அறிக்கைதான் முதலில், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம்கோடி நஷ்டம் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியது.

அதைப் போலவே, மாநில கணக்காயர் குழு, வீராணம்திட்டத்தை முழுமையாக ஆராய்ந்து, மொத்தம்எவ்வளவு மக்கள் பணம் விரயமாகியுள்ளது என்று ஒருஅறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் படி,கூடுதல் நிதிச் சலுகைகள், மிகையாக கொடுக்கப் பட்டதொகை, தவிர்க்கத் தக்க செலவு, தரக்குறைவானகுழாய்களால் ஏற்பட்ட நஷ்டம், தரக்குறைவானசிமெண்டு பயன்படுத்தியது, சோதனையிடப்படாதகுழாய்களுக்கு சோதனை செய்ததாக வழங்கப் பட்டதொகை, மேற்பார்வை பணிக்கான கூடுதல் செலவு என்றுமொத்தத்தில் 7 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்றுஅறிக்கை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கை மாநில கணக்காயர் சமர்ப்பித்ததால்,அவரை தமிழின விரோதி, ஆரிய கைக்கூலிஎன்றெல்லாம் கருணாநிதியால் ஏச முடியவில்லை.

இந்த ஊழலில், கருணாநிதி மட்டும் தான் பணம்வாங்கினாரா மாறன் வாங்கவேயில்லையா என்ற கேள்விஎழும். மாமா வாங்கினால் என்ன மருமகன் வாங்கினால்என்ன.. இருந்தாலும், அவர் பங்குக்கு ஏதாவது செய்யவேண்டாமா ?

முரசொலி கட்டிடம் கட்டும் பணி, சத்யநாராயணாபிரதர்ஸின் துணை நிறுவனமான மஹாலட்சுமிகன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் படுகிறது.அதற்கான தொகையை மாறன் கொடுத்தார் என்றுஅவசரப்பட்டு முடிவெடுத்து விடாதீர்கள். தங்களிடம்சிக்கியவர்களை பட்டாபட்டி அண்டர்வேரோடுஅனுப்புவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்.

வேலையையும், கட்டுமானப் பொருட்களையும்,இலவசமாகவே மாறன் பெற்றார். இது குறித்து பதில்அளித்த மாறன், மஹாலட்சுமி கன்ஷ்ட்ரக்ஷன் நிறுவனம்,சத்யநாராயணா நிறுவனத்தின் துணை நிறுவனம் என்றவிபரம் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்…..ஊழலின் சாட்சியாக முரசொலிக் கட்டிடம் இன்றும்நிற்கிறது.

காலம் செல்லச் செல்ல, சத்யநாராயணா பிரதர்ஸ்தங்களுக்கு வழங்கப் பட்ட வேலையை செய்துமுடிக்காமல் பணிகள் அப்படியே நின்று போகின்றன.அரைகுறையாக செய்யப் பட்ட பணிகளால்சாலையெங்கும் குழாய்கள் கிடந்தன.

இது குறித்து, கருணாநிதியின் முதன்மைச் செயலாளராகஇருந்த ஆர்.நாகராஜன், தனது சாட்சியத்தில், “1975ம்ஆண்டு அக்டோபர் திங்களில் புருஷோத்தம் என்னைவந்து பார்த்தார். அப்போது நான் மட்டுமே அங்குஇருந்தேன். இந்த நிதி நெருக்கடி எப்படி ஏற்பட்டதுஎன்று கேட்டேன். அவர் சொல்ல தயங்கினார். நான்வற்புறுத்திக் கேட்டேன். வீராணம் திட்டத்தை எங்கள்நிறுவனத்திற்கு வழங்குவதற்காக முதலமைச்சர்கருணாநிதியுடன் முன்னரே செய்து கொண்டஏற்பாட்டின் படி, கமிஷன் தொகையாக 29 லட்சம்தரப்பட்டுள்ளது.

இவ்வளவு பெருந்தொகையைகொடுத்ததால், தம்முடைய தொழில் புழக்கத்துக்காகஇருந்த நடைமுறை மூலதனம் அனைத்தும் முழுவதுமாகதீர்ந்து போய் விட்டது“ என்று சாட்சியம் அளித்துள்ளார்.

ஆக்கவும், அழிக்கவும் வல்லதுதானே அரசு ?

போட்ட திட்டம் வேலை நிறைவேறவில்லை.சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் ஏறக்குறையநொடித்துப் போய் விட்டது. என்ன செய்வது…. ? ஒருநபர் இறந்து விட்டால் பிரேதப் பரிசோதனை செய்து,இரங்கல் கூட்டம் போட வேண்டாமா…. ? அப்புறம்இறந்தவருக்கு என்ன மரியாதை ?

5.6.1974 அன்று, திருவாளர்கள் சத்யநாராயணா பிரதர்ஸ்நிறுவனம் இத்திட்டத்தை நிறைவேற்றும் பணியில்ஆற்றிய சாதனைகள் குறித்து கருணாநிதி தலைமையில்ஒரு கூட்டம் கூட்டப் படுகிறது.

அக்கூட்டத்தில் சத்யநாராயணா நிறுவனம் குறித்துகீழ்கண்ட முடிவுகள் எடுக்கப் படுகின்றன.

“சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்குதேவைப்படுகின்ற நிர்வாக மற்றும் வல்லுனர் அமைப்புஇல்லை. கால அட்டவணைப் படி தொழிற்சாலையைநடத்துவதற்கு போதுமான நிதி வசதிகளும் இல்லை.இப்படிப் பட்ட மாபெரும் திட்டத்நிறைவேற்றுவதற்குரிய திறமை, திருவாளர்சத்தியநாராயணா நிறுவனத்திடம் உண்டு எனக் கூறிஅவர்கள் திறமை மீது அதிக அளவில் நம்பிக்கைவைத்து மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.“

கருணாநிதி என்று பொதுப்பணித் துறைஅமைச்சரானாரோ, அந்த நாள் முதலாகவே ஊழலில்ஈடுபடத் தொடங்கினார். கருணாநிதி முரசொலி மாறன்என்று தமிழகத்தை கொள்ளையடித்த மிகப் பெரும்கொள்ளைக்காரர்களாகவே கருணாநிதியின் குடும்பம்உருவாகியது. ஆக்டோபஸ் போல வளர்ந்து இன்றுதமிழகத்தையே சூறையாடிக் கொண்டிருக்கிறது. முரசொலி மாறன் பெற்றெடுத்த தவப்புதல்வர்கள், அவர்கள் பங்குக்கு,  தமிழகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனை ஊழல்களையும் செய்து விட்டு, அதுவெளிவந்து அம்பலமான பின்னரும், “தமிழர்களே…தமிழர்களே… நீங்கள் என்னை கடலிலே தூக்கிப்போட்டாலும்” என்று தயக்கமின்றிப் பேசுகிறார் கருணாநிதி.

இவர்களிடம் மீண்டும் அதிகாரம் வழங்கப்பட்டால் ?

கணக்கதிகாரம்...

 இன்று ஓர் சிறப்பு தகவல் இதோ :-    
தமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு:

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்

"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

ஓர் பலாப்பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

- கணக்கதிகாரம்

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.
  ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?

வாழ்க்கை எப்படி இருந்தது...

1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...


வாருங்கள் கொஞ்சம் ரிவைன்ட் செய்து பார்ப்போம்...
காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.
.
வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.
.
ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்...
.
ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை...
.
பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்...
.
விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது...
.
மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்...
.
உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்...
.
மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்...
.
வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்...
.
சனிக்கிழமைகளில் சக்திமான் பார்க்க காய்ச்சலென பொய் சொல்லி பள்ளிகளுக்கு விடுமுறை எடுத்தோம்...
.
அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்...
.
ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்...
.
அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது...
.
ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்...
.
ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது...
.
ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது...
.
உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்...
.
தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்... அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்...
.
ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது... அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்...
.
பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்...
.
10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்...
.
யாராவது செல்போன் (சாதாரண 1100)  வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்...
.
நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்...
.
பணக்கார வீட்டு கன்னிப் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்...
.
10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது...
.
போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்...
.
வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன்  சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது...
.
வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்...
.
ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்...
.
10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது...
.
10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது...
.
பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்...
.
கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது...
.
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது...
.
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது...
.
பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்...
.
தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்... பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை...
.
12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது...
.
இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்

உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட  சாத்தியமில்லை... பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை... அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்...

டெங்குதோலுரிக்கும்கட்டுரை !

உண்மையை உரக்க சொல்வோம்
 #டெங்குதோலுரிக்கும்கட்டுரை !
----------------------------------------------------------------



இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செரிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொறு மனிதரும் இதை கட்டாயம் படிக்க வேண்டும்.

டெங்கு காய்சலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

மனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 37.2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொறு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது.

இது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்கைமுறை காரணமாக செல்களின் கழிவுகளை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது.

எனவே கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. சரி இப்பொழுது குழந்தைகளின் பால் புட்டியை எந்த தண்ணீரில் கழுவுவீர்கள் ? சுடு தண்ணீரில் தானே. ஏன் ? அழுக்குகள் நீங்கும், கிருமிகள் அழியும்.

சரி சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். ஏன் ? கிருமிகள் அழியும். கொதிக்கவைத்து குடிப்பது தவறு தான் அதனுள் இப்பொழுது செல்ல வேண்டாம்.

தண்ணீரை சூடு செய்யும் போது அதில் சில பொருட்கள் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். சூடு ஆகும் போது நீரின் Molecules அனைத்தும் நகரத்துவங்கும்.

உணவுப் பொருட்களை சூடு செய்யும் போது அதில் இருந்து மணம் வெளிப்படுவதை நீங்கள் அறிவீர்கள். உணவில் உள்ள மணத்தை சூடு நகர்த்தி வெளி கொணர்ந்தது.

நமது நாட்டில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டு, காரணம் வெப்ப மண்டல நாடு. சூடு பூவின் மணத்தை நகர்த்தி வெளி கொணர்ந்தது.

ஊட்டி போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டா ? என நீங்களே பரிசோதித்து பாருங்கள். பூ அழகாக இருக்கும் மணம் இருக்காது.

வயதான முதியவர் இறந்துவிட்டார் கையை தொட்டு பார்த்தால் ஐஸ் போல் உள்ளது. அசைவுகள் இல்லை. உயிருடன் இருந்த போது சூடு இருந்தது, அசைவு இருந்தது.

சுடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை என்ற பாடல் வரிகளையும் நினைவுப்படுத்துகிறேன். இது போல் இன்னும் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் இருந்து என்ன தெரிகிறது. சூடு ஒரு பொருளை நகர்த்தும் என தெரிகிறது. சூடு இருந்தால் Movement இருக்கும் என தெரிகிறது. இது இயற்கை விதி. சூடு தான் சக்தி ( Energy ).

உடல் தனக்கு தேவையான பொருளை ஒரு போதும் வெளியேற்றாது. அதேப்போல் தனக்கு தேவை இல்லாத பொருளையும் உள்ளே வைத்திருக்காது.

இப்பொழுது நமது உடலில் கழிவுகள் தேங்கி உள்ளனவா. அதற்கு வருவோம். ஒரு பொருளை நகர்த்த என்ன வேண்டும் ? வெப்பம்.

சரி இப்பொழுது உடலில் கழிவுகள் அதிகம் தேங்கிவிட்டது. உடல் என்ன செய்யும் ? நீ எக்கேடோ கெட்டு நாசமாய் போ என விட்டுவிடுமா ? அல்ல.

உடல் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள மாவுச்சத்தை (Glucose) அதிகம் எரித்து வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் என்ன செய்யும் ?

தேங்கி உள்ள கழிவுகளை நகர்த்தி நகர்த்தி இரத்த ஓட்டத்தில் கலக்கச்செய்யும். பின் இந்த கழிவுகள் அனைத்தும் தரம் பிரிக்கப்படும்.

எந்த எந்த கழிவுகளை எந்த வழியாக வெளியேற்றினால் உடலுக்கு தீங்கு நேராது என்று உடல் முடிவு செய்து அதன் வழியாக கழிவுகளை வெளியேற்றிவிடும்.

மூக்கின் வழி சளியாகவும்.
பொருங்குடலின் வழி திடக்கழிவாகவும்.
தோலின் வழி வியர்வையாகவும்.
சிறுநீர்பை வழி சிறுநீராகவும்.

உடல் பாதுகாப்பான முறையில் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது.

இதைத்தான்னய்யா காய்சல் என்கிறோம். நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக தேங்கிய கழிவுகளை உடல் வெப்பத்தை உருவாக்கி வெளியேற்றும் செயலே காய்சல்.

உலகிலேயே மிகச்சிறந்த நண்பன் யார் தெரியுமா ? உங்கள் உடல் தான். நீங்கள் அவனுக்கு கோடி முறை கெடுதல் செய்தாலும் கோடியை தாண்டி உங்களுக்கு நல்லது மட்டுமே செய்வானய்யா. கெடுதலை நினைக்க கூட அவனுக்கு தெரியாது.

அப்பேர்பட்ட இயற்கையின் அற்புதப்படைப்பான, இந்த உடல் வெப்பத்தை உண்டாக்கி கழிவுகளை வெளியேற்றும் போது பலர் என்ன செய்கிறார்கள் ?

அலோபதி சிகிச்சையில் ஊசி போட்டு மாத்திரை எடுக்கிறார்கள். இந்த ஆங்கில மருந்து என்ன செய்கிறது ? கழிவுகளை வெளியேற்ற உடல் சிரமப்பட்டு உருவாக்கிய வெப்பத்தை குறைத்து விடுகிறது.

முதல் முறையாக நீங்கள் செய்த கெடுதலால் உங்கள் நண்பனான உடல் கலங்குகிறான். அவன் தான் உங்கள் நண்பன் ஆயிற்றே விடுவானா. மீண்டும் வெப்பத்தை உருவாக்க முயற்சிப்பான். தொடர்ந்து நீங்கள் ஆங்கில சிகிச்சை எடுத்து. வெப்பத்தை குறைத்து விடுவீர்கள்.

வெப்பம் குறைந்ததால் Movement இருக்காது. Movement இல்லாததால் கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகிறது. மீண்டும் மீண்டும் காய்சலை ஏற்படுத்தி கழிவுகளை வெளியேற்ற முயற்சிப்பான்.

நீங்களும் தொடர்ந்து ஆங்கில சிகிச்சை எடுத்து கழிவுகளை அடக்கி வைத்துவிடுவீர்கள். இப்படி தொடர்ந்து பல வருடங்களாக தேங்கிய கழிவுகள் பல்வேறு நோய்களாக உருவெடுக்கிறது.

பல நாடுகளில் காய்சலுக்கு ஆங்கில மருத்துவர்கள் வைத்தியம் பார்பதில்லை என உங்களுக்கு தெரியுமா ? காய்சலுக்காக வைத்தியம் பார்க்க சென்றால் திட்டி அனுப்பி ஓய்வெடுக்கச் சொல்வார்கள்.

இங்கு உள்ள நிலமையோ தலைகீழ் சொல்லவே வேண்டாம். ரோட்டில் நடந்துச்செல்பவனை வழி மறித்து ஊசி போடும் நாடு இது.

உடல் தன்னுள் தேங்கிய கழிவுகளை வெளியேற்றும் செயலே காய்சல். இந்த உடல் சுத்திகரிப்பு வேலை நடக்கும் போது அமைதியாக ஓய்வு எடுத்தாலே இரண்டு மூன்று நாட்களில் காய்சல் தானாக சரியாகும்.

சரி இப்பொழுது டெங்கு டங்குங்கராங்களே அதற்கு வருவோம் வாங்க.

ஒரு இடத்தில் குப்பை உள்ளது, அங்கு என்ன இருக்கும் ? பூச்சி, புழுக்கள்.

நாய் அடிபட்டு ரோட்டில் இறந்துள்ளது. அதன் உடலில் என்ன இருக்கும் ? புழுக்கள்.

தானியங்களை காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைத்துவிட்டோம். சிறிது நாள் கழித்து திறந்து பார்த்தால் அதில் என்ன இருக்கும் ? வண்டுகள், பூச்சிகள், புழுக்கள்.

குப்பை மற்றும் நாய் மீது இருந்த புழு பூச்சிகள் சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு இல்லை. இந்த புழு பூச்சிகள் எங்கிருந்து வந்தது ? பக்கத்து ஊரில் இருந்து பேருந்தில் ஏறி வந்ததா ?

காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட தானியத்தில் புழு, வண்டுகள் எங்கிருந்து வந்தது ? சிந்தியுங்கள்.

"இயற்கை விதி என்னவென்றால் எங்கு உணவு உள்ளதோ, அங்கு உயிர்கள் படைக்கப்படும்."

புழு, பூச்சி, வண்டு எல்லாம் எங்கிருந்தும் வரவில்லை. அந்த இடத்திலேயே உற்பத்தி ஆனது என தெரிந்து கொண்டோம்.

ஒரு ஏக்கரில் வொண்டைக்காய் செடி பயிரிடப்பட்டுள்ளது. ஒரு செடியில் அதை உண்ணும் பூச்சி வந்து விட்டது. அந்த பூச்சி பக்கத்து செடியில் உட்கார்ந்து இது நமது உணவுதானா என முகர்ந்து பார்க்கும்.

அடுத்தடுத்த செடியில் பரிசோதித்து. தனது உணவு தான் நிறைய உள்ளது என தெரிந்துகொண்ட உடனே தனது இனத்தை வேகமாக பெருக்க ஆரப்பித்துவிடும்.

ஒவ்வொறு உயிரினமும் தன்னை இப்பூவுலகில் நிலை நிறுத்திக்கொள்ள இறைவன் கொடுத்த அறிவு இது.

மனிதனும் அப்படித்தானே, எனது பொருளாதாரத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும் என நிறுத்திக்கொள்கிறானே.

அடுத்த இயற்கை விதி உணவின் அளவை பொருத்து உயிரினங்கள் பெருகும்.

இயற்கை விதி இரண்டு !

1 - உணவு உள்ள இடத்தில் உயிரினங்கள் படைக்கப்படும்.

2 - உணவின் அளவிற்கு ஏற்ப உயிரினங்கள் பெருகும்.

சரி, புழு பூச்சிகளுக்கு, அந்த குப்பை என்னவாகிறது ? உணவு.

பூழுவிற்கு, நாய் என்னவாகிறது ? உணவு.

வண்டிற்கு, தானியம் என்னவாகிறது ? உணவு.

இந்த இயற்கை விதிகளை அப்படியே உடலுக்குள் பொருத்துங்கள்.

நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக உடலில் கழிவுகள் தேங்குகிறது. இந்த கழிவுகள் கிருமிகள் என சொல்லப்படும் நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது.

"கழிவு, கிருமிகளுக்கு என்னவாகிறது ? உணவு."

கிருமிகளின் உணவாகிய கழிவுகளை நீங்கள் சேர்த்து வைத்ததால் அதை உண்டு அழிக்க கிருமிகள் அங்கு இயற்கையால் படைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது உணவு (கழிவு) உள்ள இடத்தில் உயிர்கள் (கிருமிகள்) படைக்கப்பட்டு விட்டதா ? ஆம்.

எப்படி வெண்டை செடியில் உள்ள பூச்சி, அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கியதோ அதேப்போல், நுண்ணுயிர்கள் அதிக உணவை (கழிவு) கண்டு தனது இனத்தை பெருக்கும்.

இப்பொழுது நீங்கள் இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக காட்டும். அதுதான் அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கிவிட்டதே.

உணவு இல்லை என்றால் மனிதன் என்ன ஆவான் ? இறந்து விடுவான் அல்லவா, அது போல் தான் உணவுகளாகிய கழிவுகள் தீர்ந்த பின் கிருமிகள் அழிந்துவிடும்.

நீங்கள் சேர்த்து வைத்து கழிவு, டெங்கு கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் டெங்கு காய்சல்.

நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, சிக்கன் குனியா கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் சிக்கன் குனியா காய்சல்.

நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, பன்றிக்காய்சல் கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் பன்றிக்காய்சல்.

அவ்வளவுதாங்க.

அனைத்து காய்சலுக்கும் மூல காரணம் கழிவுகளின் தேக்கமே.

இயற்கை விதி எப்படி உள்ளும் வெளியும் பொருந்துகிறது என்று பாருங்கள்.

இதை தான்

அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்று தான்
அறிந்து தான் பார்க்கும் போதே.

என்று சித்தர் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

இறப்புகள் நிகழ்வதற்கு காரணம் இரண்டு

1 - அலோபதி சிகிச்சை.
2 - ஊடகம் ஏற்படுத்திய பயம்.

அனைத்து குற்றமும் நம்முள்ளே வைத்துக்கொண்டு அப்பாவி கொசுவின் மீது பழி போடுகிறோமே. இந்துனூண்டு கொசுவை வைத்தும், கண்ணுக்கு தெரியாத கிருமியை வைத்தும் எத்தனை எந்தனை வியாபாரங்கள்.

கொசு விரட்டிகள் - பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு.

வீதிகளுக்கு கொசு மருந்துகள் - கொசுவை அழிக்கிறேன் என்ற பெயரில் பல்லுயிர் அழிப்பு - Collapse of Biodiversity - இயற்கை வழி விவசாயம் அழிவு - Corporate இரசாயன மருந்து வியாபாரம் - விளைவு மலடாய் போன மண்.

டெங்கு கொசு - டெங்கு காய்சல் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு. என நீண்டு கொண்டே போகிறது பட்டியல்.

கிருமிகள் - Water Filter System வியாபாரம் - இதனால் நோய் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு.

கிருமிகள் - Soap ,Hand Wash, அந்த Wash இந்த Wash கண்ட கண்ட Wash - விளைவு சாவு.

கிருமிகள் - தடுப்பூசி, Vaccination - Corporate Allopathy Business - விளைவு சாவு.

கிருமி வியாபார பட்டியலுக்குள் சென்றால் நிச்சயம் இந்த பதிவு போதாது. இதனுடன் நிறைவு செய்யலாம்.

இவர்களின் நோக்கம். நாங்கள் சொல்வதை சாப்பிடு, நாங்கள் சொல்வதை படி, எங்களுக்கு வேலை செய், எங்கள் பொருட்களை பயன்படுத்து, எங்கள் மருத்துவம் பார், எங்களுக்கு சம்பாதித்து கொடுத்து விரைவில் செத்துப்போ என்பதே.

இந்த உலக வல்லாதிக்க தீய சக்தியை அழிக்க நன்மக்கள் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

இவர்களின் கொட்டத்தை அடக்க ஒரே வழி, நமது முன்னோர்கள் நமக்கு அழகாய் வடிவமைத்துக் கொடுத்த அன்பும், அறமும், பன்பும் செரிந்த தற்சார்பு வாழ்க்கை முறைக்கு திருப்புவது மட்டுமே.

கழிவுகளை உடலில் தேக்கியது யார் குற்றம் ? டெங்கு வருவது வெளியில் உள்ள கொசுவால் அல்ல உங்கள் உடலில் உள்ள குப்பையால் தான் என இப்பொழுது தெரிகிறதா ? புரிகிறதா ?

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா யாருக்கு நோய் எதிர்பு சக்தி அதிகமாக உள்ளதோ அவர்களுக்குத்தான் காய்சல் வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்சல் வர வாய்ப்பே இல்லை.

கொசுக்களினாலோ, கிருமிகளினாலோ நோய் வருவது உண்மையாக இருந்தால் என்றைக்கோ மனித இனம் உரு தெரியாமல் அழிந்து போயிருக்கும்.

உண்மை என்னவென்றால் கிருமிகள், பல்லுயிர்கள் உயிருடன் இருந்தால் தான் நாம் இந்த உலகில் உயிருடன் வாழ முடியும்.

பால் தயிராவது கிருமியால் தான்.
மாவு புளிப்பது கிருமியால் தான்.
சோறு நீராகாரமாவது கிருமியால் தான்.
பல பண்நாட்டு உணவுகள் பக்குவமடைவது கிருமியால் தான்.
குப்பை மட்குவது கிருமியால் தான்.
மண் வளமாவது கிருமியால் தான்.
உண்ட உணவு செரிப்பதே கிருமியால் தான்.
ஏன் முதன் முதலில் உயிர் உருவானதே இந்த கருமியால் தான்.

உண்மை இப்படி இருக்க. கிருமியினால் நோய் வரும் என்பது அண்டப்புளுகு. Corporate Allopathy தனது வியாபாரத்தை பெருக்கவே இந்த புளுகு புளுகுகிறது.

உலக வல்லாதிக்க தீய சக்திகள் தனது மென்பொருள் ஏற்றப்பட்ட சுயமாக சிந்திக்கத் தெரியாத மருத்துவர்களை வைத்து அரசுகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஒன்றும் இல்லாத இந்த கொசுவை வைத்தும், கிருமிகளை வைத்தும் மிகப்பெரும் வியாபார வேட்டையில் ஈடுபடுவது மட்டும் அல்லாமல் மக்களையும் அழித்து வருகிறது.

நாம் நமது உடலை பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் இப்படித்தான் தொடர்ந்து நமது தலையில் மிளகாய் அரைத்து அழிப்பார்கள்.

நாம் கற்க வேண்டிய முதல் கல்வி உடலை பற்றிய கல்வியாக இருக்க வேண்டும். பள்ளிகளில் இதை தனிப்பாடமாகவே கொண்டு வர வேண்டும்.

இயற்கையின் அற்புதப்படைப்பான இப்பூவுடலின் பேராற்றலை புரிந்து கொள்ளாமல், உலக வல்லாதிக்க தீய சக்திகளுக்கு நமது அறிவை பலி கொடுத்தது நம் குற்றமே.

அழிக்க வேண்டியது கொசுவையா ?

நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையையா ?

என நீங்களே முடிவு செய்யுங்கள்.

நல் உள்ளம் படைத்தோர் இந்த கட்டுரையை உலக மக்களுக்கு கொண்டு செல்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி

ஹீலர்.இரா.மதிவாணன்.

ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா???



வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து…”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.
படித்ததில் பிடித்தது பயன் படும் என்று நினைத்தால் மற்றவர்களுக்கு அனுப்பவும்

சிரிக்க மட்டும்

சிரிக்க மட்டும்

மனைவி: உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க ... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!
கணவன்: அதெல்லாம் சும்மாடி ... நம்பாத‌...
மனைவி: ஏன் ... ஏன் அப்படி சொல்றீங்க?
"கணவன்: என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா ... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌ மாப்ள பாக்குறாரு...

________

டாக்டர்: முன் பல் ரெண்டும் எப்படி விழுந்துச்சு...?                நோயாளி: சொல்ல மாட்டேன் டாக்டர்.                                டாக்டர்: ஏன் ?                                            நோயாளி: நடந்ததை வெளில சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லி இருக்கா டாக்டர்.
___________

மனைவி: எந்தக் காரணமும் இல்லாமல் குடிக்கமாட்டேனு சொன்னீங்களே இப்போ எதுக்கு குடிச்சீங்க?           கணவன்: அது ஒண்ணுமில்லைடி... தீபாவளி ராக்கெட் வைக்க பையன் பாட்டில் வேணும்னு கேட்டான் அதான்...       

__________

மனைவி: ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு இருக்கும்?''

கணவன்: ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!''

மனைவி: ''அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?''

கணவன்: ''மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது. ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற?

மனைவி: இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்'னீங் களே..! ஆனா, இந்த மாதிரி யாராவது போகும்போது பேந்தப் பேந்த பாக்குறீங்களே... இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணத்தான்.
__________

கணவன்: (போன் ரிஸீவரை பொத்தியபடி) ''அடியே, அம்மா பாத்ரூமில வழுக்கி விழுந்துட்டாங்களாம்...''

மனைவி: ''வயசான காலத்துல ஓய்ஞ்சு ஒரு இடத்துல உட்கார மாட்டாங்களே, அவங்களுக்கு இது வேண்டியதுதான்!''

கணவன்: ''விழுந்தது எங்கம்மா இல்லடி, உங்கம்மா!''

மனைவி: ''ஐயோ... அவங்க ஓடியாடுறது மேலே எந்த கொள்ளிக் கண்ணுபட்டுச்சோ... பார்த்துகிட்டு நிக்கறீங்களே... போனைக் குடுங்க!''
____________

வாணி: என்னடி உன் செல்போனில் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேய் காலிங்ன்னு வந்துச்சு?

ராணி: அது என் மாமியார்டி.

வாணி: இப்ப என்ன பிசாசு காலிங்னு வருது?

ராணி: அது என் நாத்தனார்டி

வாணி: ஆமா, இது என்ன நாய் குரைக்கும் ரிங்டோன்?       ராணி: என் கணவருக்கு அந்த ரிங்டோன் தான் வச்சிருக்கேன்
__________

போனில்...
''நாங்க உஙக மனைவியை கடத்தி வைச்சுருக்கோம்..ஐந்து லட்சரூபாய் கொடுத்தா விட்டுடறோம்...''
''ஐந்து என்ன பத்துலட்ச ரூபாயே தரேன்..ஆனா திருப்பி மட்டும் அனுப்பிடாதீங்க..'
__________

குரு: என்னங்க, உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக்கிட்டே இருக்குது?

கிரி:என் பொண்டாட்டி, என் மேல ஏதாவது பாத்திரத்தை தூக்கி வீசுவா, என் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன்.ஒரே தமாசு தான் போங்க.

படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்

தீபாவளி பண்டிகை பேருந்து வழித்தட மாற்றங்கள்





அண்ணா நகர் (மேற்கு): செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

சைதாப்பேட்டை சின்னமலை: கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்துக் பணிமனை (சின்னமலை) எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

தாம்பரம் சானடோரியம்: விக்கிரவாண்டி மற்றும் பண்ருட்டி வழியாக செல்லும் பேருந்துகள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

பூவிருந்தவல்லி: ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத் தும் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

கோயம்பேடு: வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூருக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்.

வழித்தட மாற்றங்கள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம் பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்லும். தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்றடைந்து அங்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்துகள் செல்லும். மேற்கண்ட தற்காலிக பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும்.

கார் மற்றும் இதர வாகனங்கள்

வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாகச் சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்.

தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் திரும்பும் வகையில் முக்கிய பகுதிகளிலிருந்து வரும் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் 7,043 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை நெருங்கவுள்ள நிலையில் அரசு பேருந்துகளை சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தியுள்ளோம்.

300 கிமீ தூரத்துக்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26, தாம்பரம் சானடோரியத்தில் 2, பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் 1 என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு மையங்கள் வரும் 13-ம் தேதி முதல் செயல்படும்.

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 044-24794709 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

English:
The public and vehicle operators are requested to plan their journey as per the diversions mentioned below to make their travel hassle free.

I. OUTSTATION BUS STANDS

Andhra Bound Buses
Operation of all Tamilnadu and A.P.S.R.T.C. buses to Andhra Pradesh Via Redhills will depart from Anna Nagar (West) Bus stand of MTC, Chennai.

Operation of Buses Via ECR
Operation of buses to Puducherry, Cuddalore and Chidambaram via ECR will depart from Saidapet Court Bus Stop (Opposite to Saidapet MTC Bus Depot) Chennai.

Operation of Buses Via Vikkravandy, Panrutti
Operation of all buses bound for Kumbakonam and beyond, Thanjavur via Tindivanam, Vikkravandy (including SETC) will depart from Arignar Anna Bus Stand, Tambaram-Sanatorium (MEPZ).

Operation of Buses Via Vellore
Operation of buses to Arcot, Arani, Vellore, Dharmapuri, Krishnagiri, Tirupathur & Hosur via Poonamallee will depart from Poonamalle Bus Stand, Poonamallee.

The reserved passengers of above four sectors on 15.10.2017,16.10.2017 and 17.10.2017 with Boarding point as Koyambedu of the above routes are requested to board the buses at the above mentioned temporary bus stands from 15.10.2017 to 17.10.2017 and also other than reserved passengers of the above routes are requested to board in the buses at the above said places.

Operation of buses from CMBT
Operation of buses to various places other than mentioned above will be operated from CMBT, Koyambedu as usual i.e (Myladuthurai, Nagapattinam, Velankanni, Trichy, Madurai, Tirunelveli, Shencottah, Tuticorin, Thiruchendur, Nagercoil, Kanyakumari, Marthandam,Trivandrum, Karaikudi, Dindigul, Rameswaram, Panrutti, Neyveli, Villupuram, Kallakurichi, Tiruvannamalai, Kancheepuram, Salem, Karur, Erode, Coimbatore, Guruvayur, Kottarakara, Ernakulam & Bangalore).

II. ROUTE DIVERSIONS

Reservation buses from CMBT, Koyambedu is to ply via Maduravoyal, Poonamallee, Nazarathpet, outer ring road, Vandalur instead of Tambaram, Perungalathur.
The reserved passengers with boarding point at Tambaram and Perungalathur are requested to board concerned buses at Urapakkam Temporary bus stop instead of Tambaram and Perungalathur at the boarding time mentioned.

III. CAR AND OTHER VEHICLES
To avoid traffic congestion, during the period from 15.10.2017 to 17.10.2017, car and other light vehicle travellers are requested to avoid the route via Tambaram, Perungalathur by taking diversion via Tirukazhukundam, Chengalpattu / Sriperumbudur, Chengalpattu.

IV. FEEDER SERVICES.

Feeder Services will be operated by MTC to all these Bus Stands.
For enquiry and complaints Telephone Number 044-24794709 may be contacted.

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்


ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்


கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே  சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!

இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.

இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.

பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.

கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

சிறுகதை நேரம்

சிறுகதை நேரம்


"நீண்ட தொலைவில்இருந்து இரண்டுகுடம் தண்ணீர் எடுத்துவந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்துவிட்டு, அடுத்த இரண்டுகுடம் தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி........

"அந்தநேரம் அவளின் கணவன் மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெயில். பசிவேறு அவனுக்கு.

"வெயிலில் வந்த்தால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் தட்டிவிட்டு விழுந்துவிடுகிறான். இரண்டுகுடம் தண்ணீரும் கொட்டிவிடுகிறது.

அவனுக்கு கடுமையான கோபம் வந்துவிடுகிறது. கொஞ்சமாவது அறிவுவேனாம்? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னும் இரண்டு குடத்தோடு வருகிறாள் மனைவி.

" தூக்கிவந்த குடத்தைக்கூட இறக்கவிடாமல் அவளைத்திட்டுகிறான். "உன்னையெல்லாம் உங்கவீட்டில எப்படித்தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்றபடி கண்டபடி திட்டுகிறான்.

இதைக்கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. " நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டு வற்றேன் தெரியுமா?

கண்ணை எங்க வச்சுக்கிட்டு போனிங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி வார்த்தை பெரிதாகி, அவன் அவளை அறைந்துவிடுகிறான்.

"உடனே அவள் 'இனி ஒரு நிமிஷம்கூட உன்கூட வாழமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளின் அம்மாவீட்டுக்கு சென்றுவிடுகிறாள்......

இது கணவன், மனைவிக்குள் ஒருசின்ன பிரட்சனை எவ்வளவு பெரிய முடிவைஎடுக்கவைத்துவிட்டது என்பதைக்கூறும் கதை.

இந்தக்கதையின் முடிவு இப்படிஇருத்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்ப்போம்.........

அவன் குடம்தடுக்கி விழுந்து, தண்ணீரை கொட்டிவிட்டான். உடனே அவனுக்கு தோன்றியது " அடடா இப்படி கவனிக்காமல் இரண்டுகுட தண்ணீரையும் கொட்டிவிட்டோமே!

"சே! பாவம் அவள். தண்ணீர் எவ்வளவு தூரத்தில்இருந்து கொண்டுவருகிறாள்? முதல்வேலையா அவள்வந்தவுடன் மன்னிப்புகேட்டுவிட்டு நாமேபோய் இரண்டுகுடம் தண்ணீர் எடுத்து கொடுக்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும்போது அவள் தண்ணீரோடு வருகிறாள்.

இவன் ஓடிப்போய் அந்தக்குடங்களை இறக்கியவாறு நடந்ததைச்சொல்லி, "நான் கவனிக்காமல் குடத்தின்மேல் விழுந்து தண்ணீரைக்கொட்டிவிட்டேன். நீ எவ்வளவுதூரத்தில்இருந்து இந்த தண்ணீரைக்கொண்டுவருகிறாயஎன்னை மன்னித்துவிடு. கொடு நான்போய் தண்ணீர் கொண்டுவருகிறேன் என்கிறான்.

உடனே அவள் பதறுகிறாள். " ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர்போனா போகட்டுங்க. நீங்க என்ன வேனும்னா கொட்டிவிட்டீங்க! தெரியாமத்தானே! அங்க தண்ணியவச்சது என்தப்பு. நான் போய் எடுத்துக்கொள்கிறேன்.

நீங்க வாங்க சாப்பிட. நல்ல பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்கிறாள்.(அவள் திட்டியிருந்தால்கூட இவ்வளவு தண்டனை கிடைத்திருக்காது அவனுக்கு).

அவன் அப்படியே நெகிழ்ந்துபோகிறான். அவள்மேல் அவனுக்கு இன்னும் அளவுகடந்த பாசம் உண்டாகிறது உள்ளுக்குள்.

இவ்வளவுதான் நம் வாழ்க்கையும்!கணவனோ, மனைவியோ தெரிந்து யாரும் தப்பு செய்வதில்லை. இருவரில் ஒருவர் ஒருபடிஇறங்கினால், மற்றவர் கண்டிப்பாக பத்துப்படி இறங்கிவருவார்.

நம்மைப்பார்த்துதான் நம்பிள்ளைகள் வளர வேண்டும்.........

புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை!

வாழ்க வளமுடன்

இயற்கை மருத்துவம்-தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்


நீரிழிவு :-

உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. முழு தானியங்கள், அவரை மற்றும் பட்டாணிகள், நட்ஸ் போன்றவற்றிலும் அதிக அளவு மாங்கனீசு அடங்கியுள்ளது.

சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்கும் :-

உடலின் அநேக செயல்பாட்டிற்கு பயன்படும் முக்கிய உலோகமாக காப்பர் விளங்குகிறது. அதிலும் காப்பர் மற்றும் வைட்டமின் சி, சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடைன் மீள் திறனுடன் வைத்திருக்கும். இத்தகைய காப்பர் தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது.

எலும்புகளை உறுதியாக வைக்க உதவி புரியும் :-

தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது, உடலில் பாஸ்பேட் கலப்பதால், எலும்பு உருக்குதலை அது தடுக்கும்.

இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும் :-

போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், உலகத்தில் உள்ள பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பதால், உடலானது ஹீமோகுளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும். இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல், இரத்த சோகையை உண்டாக்கும். ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.

தசைகளையும் நரம்புகளையும் ரிலாஸாகச் செய்யும் :-

எப்போதெல்லாம் தசை பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கொஞ்சம் உணவோடு சேர்த்து தேங்காய் பாலை பருகினால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. மேலும் ஒவ்வொரு நரம்பு அணுக்களுக்கும் வலித் தடுப்பானாக விளங்குவது மக்னீசியத்தின் முக்கியமான அம்சமாகும். உடலில் மக்னீசியம் இல்லையென்றால், கால்சியம் நரம்புகளை ஊக்குவிக்கும். அதனால் நரம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக செயல்படும். அளவுக்கு அதிகமாக நரம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக இருப்பதால், தசைகள் அளவுக்கு அதிகமாக சுருங்குவதற்கு காரணமாக விளங்குகிறது.

உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் :-

உடல் எடையை குறைக்க முற்படுபவர்களுக்கு, கண்டிப்பாக இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும். தேங்காய் பால் வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும். அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான்.

கீல்வாதத்தின் இடர்பாட்டை குறைக்கும் :-

செலினியம் என்பது ஒரு முக்கியமான ஆக்சிஜனேற்றத் தடுப்பான். இத்தகைய செலினியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது. ஆகவே கீல்வாதம் இருப்பவர்கள், இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். குறைந்த அளவு செலினியம் இருப்பவர்களுக்கு, முடக்கு வாதம் ஏற்பட அதிகமான வாய்ப்புள்ளது.

இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த உதவும் :-

இரத்தக் கொதிப்பை எண்ணி கவலைப்படுபவர்கள், பொட்டாசியம் கலந்த உணவை உண்டால், இந்த பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும். இத்தகைய பொட்டாசியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது.

உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பை நிலைநிறுத்த உதவும் :-

தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.

புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் :-

உடம்பில் உள்ள புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புற்றுநோய் அணுக்களின் செயல்பாடுகளை குறைக்கும்

கேரி பேக்


கேரி பேக் ..




காலை நேரம். கொஞ்சம் மருந்தும் காலைச் சிற்றுண்டியும் கடையில் வாங்க வேண்டிய சூழல். ஒரு பெரிய, இரண்டு
 சிறிய பாத்திரங்களோடு புறப்பட்டேன். மருந்துக் கடையில் ‘சிரப்’ ஒரு பாட்டிலும், மூன்று மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டு மருந்துக்கு கை நீட்டினேன், மருந்துப் பாட்டில், மாத்திரையோடு ஒரு கேரி பேக்கை அந்தப் பையன் நீட்டினான்.

இப்பொழுதெல்லாம் கடைகளில் இரண்டு ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினாலும் கூட,”விய்ஷ்க்” என பிய்த்து,
”ப்பூ” என ஊதி ஒரு கேரி பேக்கில் போட்டுக் கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான்.

“தம்பி…. கேரி பேக் வேணாம்” என்றேன்.

“பரவால்ல சார் வாங்கிக்கங்க” என்றான்.

மறுத்து விட்டு மருந்துப் பாட்டில், மாத்திரை மட்டும் வாங்கி பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு திரும்பினேன். திடீரென அந்தப் பையனை திரும்பிப் பார்க்கத் தோன்றியது.

 பார்த்தேன். அருகிலிருந்த பெண்ணிடம் ஏதோ சொல்லி முடித்திருக்க, அந்தப் பெண் கண்கள் சிலிர்க்க சிரித்துக் கொண்டிருந்தார். நான் அவர்களைப் பார்ப்பதை கண்டவுடன், சிரிப்பை நிறுத்தி தங்கள் வேலைகளில் சுறுசுறுப்பாக இருப்பது போல் நகர்ந்தார்கள்.

சிற்றுண்டிக் கடையில் ஆறு இட்லிகள் வேண்டுமென்று கூறி பாத்திரங்களைக் கொடுத்தேன். இட்லிகளை பாத்திரத்தில் போட்டு மூடிவிட்டு, சாம்பார் மற்றும் சட்னிகளை தயாராக வைத்திருந்த பாலித்தீன் மூட்டை முடிச்சுகளாக அள்ளிக் கொடுத்தார்.

அதை மறுத்து விட்டு, என்னிடமிருந்த பாத்திரத்தில் ஊற்றித் தருமாறு கேட்டேன். பணியாளர் மறுத்தார். ஏனென்று கேட்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளாகத் தான் கொடுக்கச் சொல்லி தங்களுக்கு உத்தரவென்று சொல்லிவிட்டு என்னை எளிதில் ஒதுக்கிவிட்டு, அடுத்த வாடிக்கையாளரை கவனிக்க, நான் ஒருவித வெறுமை நிறைந்த கோபத்துடன், பணம் கொடுக்குமிடத்தில் இருந்த நபரிடம் “ஏங்க நா கொண்டுவந்த பாத்திரத்தில் ஊத்தித் தராம, பிளாஸ்டிக் பொட்டலமா தர்றீங்க” என சற்றே எரிச்சலோடு கேட்டேன்.

“யார் சார் இப்பல்லாம் பார்சல் வாங்க பாத்திரம் கொண்டு வர்ராங்க! எல்லாரும் பிஸி, வர்ற வேகத்ல சட்னு, கட்டி வச்சிருக்க சாம்பார், சட்னினு ஈஸியாக வாங்கிட்டு போறாங்க, அது தான் எங்களுக்கும் ரொம்ப ஈஸிங்க” எனச் சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளரிடம் “சார் குடுங்க” என்று என்னை எளிதாகப் புறந்தள்ளினார்.

மனது சுருங்கி வெளியில் வந்தேன், அங்கேயே மேசை மேல் வைத்து பொட்டலங்களைப் பிரித்து சாம்பார், சட்னியை பாத்திரத்தில் ஊற்றலாமா என்று நினைத்தேன், எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பார்களோ என வெட்கப்பட்டது வெட்கங்கெட்ட மனது.

சாலையோரம் இறைபட்டு கிடக்கும் கசங்கிய கேரி பேக்குகள் போல் மனது கசங்கிப் போனது. எந்த நாகரிகம், கேரி பேக்குகளுக்காக மனிதர்களை இப்படி அடிமைப்படுத்தியது.

 நான்கு கடைகளில் நான்கு பொருட்கள் வாங்கினால் நான்கு கேரி பேக்குகள் இலவசமாய்க் கிடைக்க, நமது கைகள் மகிழ்ச்சியோடு வாங்கி ஊஞ்சலாட்டிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது.

வீட்டுக்கு போனவுடன் கசங்கிய அந்த கேரி பேக் குப்பைத்தொட்டி ஓரத்திலோ, சன்னல் வழியாகவோ தூக்கி வீசப்படுகிறது. சில சமயம் பின்னர் பயன்படுமென்று அரிசி மூட்டை சந்திலே சொருகி வைக்கப்பட்டு கிடக்கிறது. சில நாட்களில் அதுவும் வீதிக்கு வருகிறது.

 பெரும்பாலும் அந்த நாள் குப்பை கேரி பேக்கில் மூட்டையாகக் கட்டப்பட்டு வாசலில் குப்பை சேகரிப்பவருக்காக வைக்கப்படுகிறது.

கேரி பேக்குகளுக்கு இணையாக, உபயோகித்தவுடன் தூக்கியெறியும் பிளாஸ்டிக் டம்ளர்களும், பாட்டில்களும், தட்டுகளும் பார்க்கும் இடமெல்லாம் பரவிக் கிடக்கின்றன.

 பயன்படுத்திய பின் தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களில், வெறும் பத்து சதவிகிதம் கூட மறு சுழற்சிக்காக சேகரிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் சாலையோரமும், பயன் படுத்தாமல் கிடக்கும் காலி இடங்களிலும் படர்ந்து பரவிக் கிடக்கின்றன.

காமுகனின் மனதில் ஊறும் வெற்றுக் காமம் போல், மண்ணோடு ஊடுருவிக் கிடக்கிறது. மண்ணில் ஊறிய இந்த பிளாஸ்டிக் சனியன் மண்ணோடு மண்ணாக மட்கிப் போக எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்கும்?

மிக எளிதாக பிளாஸ்டிக்கை மண்ணில் கலக்கச் செய்யும் கொலை பாதகத்தை மனித சமுதாயம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்து கொண்டேயிருக்கிறது.

மழை கொட்டி வெள்ளம் வடிந்த பின் ஒவ்வொரு சாக்கடை பள்ளத்தின் குறுக்கே இருக்கும் குழாய்களிலும் கொத்துக் கொத்தாக பிளாஸ்டிக் குப்பைகள் குட்டிச் சாத்தான்கள் போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மோசமான சாட்சியம் மனித சமூகத்திற்கு மிகப் பெரிய எச்சரிக்கை மணி.

சாக்கடைகள் அடைபட்டு கலங்கிய கழிவுநீர் சர்வ சாதாரணமாய் வீடுகளுக்குள் வருவதை சிறு முகச் சுழிப்போடு நகரத்தில் மன்னிக்கவும் நரகத்தில் வாழும் மனித சமூகம் சகித்து வாழப் பழகிவிட்டது.

அடுத்த பத்து இருபது ஆண்டுகளில் இந்த பிளாஸ்டிக் நகரத்தின் தரை முழுதும் பரவி விடலாம். மழை நீர் மண்ணில் செல்ல வாய்ப்பற்று நிலமெல்லாம் மலடாகிவிடலாம்.

 பெய்யும் நீரும் சாக்கடை அடைப்புகளை மேவி ஆற்றுக்கு ஓடி கடலை எட்டிவிடலாம். நகரத்தின் தாகம் தீர்க்க எங்கிருந்து நீர் கிடைக்கும், 2000 அடி தோண்டுவோமா இல்லை 3000 அடி இல்லையில்லை 10,000 அடி அல்லது பூமிப் பந்தின் மறுபக்கம் வரை தோண்டுவோமா, நம் விஞ்ஞானம் தொண்ட வைக்கலாம்,

ஆனால் விஞ்ஞானத்திற்கு தண்ணீரை சிதைத்து சீரழிக்கத் தெரியும், புதிதாய் ஒரு சொட்டு தண்ணீரை உருவாக்கத் தெரியுமா?

மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு குறிப்பு:

மனைவி கணவனுக்கு எழுதி
வைத்துவிட்டு போன சிறு குறிப்பு:

*நான் எங்க அம்மா வீட்டுக்கு
குழந்தைகளோட போறேன்.*

திரும்பி வர
10 நாளாகும்.
-------------------
நண்பர்களை அழைத்து
கொட்டமடிக்க வேண்டாம்.
போனமுறை
சோஃபா பின்னாலிருந்து
நாலு பாட்டிலும் சிகரெட்
பாக்கெட்டும் எடுத்தேன்.
--------------------------
பாத்ரூம் சோப் கேசில
மொபைல மறந்து வச்சிராதீங்க.
போன முறை தேடி
அலைஞ்சப்ப
அங்க கண்டு எடுத்தேன்..
-------------
மூக்குக்கண்ணாடி
அதன் பாக்சில் வைக்கவும்.
போன முறை
ஃப்ரீட்ஜில் இருந்தது.
-----------------
வேலைக்காரிக்கு
சம்பளம் தந்தாச்சு.
உங்க தாராள
மனச காட்ட வேண்டாம்.
-----------------
காலைல
பக்கத்து வீட்டுக்கு
பேப்பர் போட்டாச்சான்னு daily
அவங்ககிட்ட வழிய வேண்டாம்.

நம்ம பேப்பர்காரன் வேற.
-------------------------
சமையல் கட்டு
பக்கம்
போக
வேணாம்

ஸிங்க்கு
காவி கலருக்கு
மாத்தினீங்கன்னா
சும்மா இருக்க
மாட்டேன்
---------------
சாமி படத்துக்கு
விளக்கேத்துங்க

ரெண்டு ஸ்லோகம்
சொன்னா நாக்கு
வெந்துடாது
------------------------
வாக்கிங் போறப்போ
டீ ஷர்ட்
போட்டுக்கோங்க
ஜிப்பா வேணாம்

ஜிப்பா கலர்ல
Free size சுடிதார்
டாப்ஸ் இருக்கு
அனிதா அன்னிக்கு
சிரிச்சா
---------------------
Food coupon
க்ரெடிட் கார்டு
எங்கிட்ட இருக்கு...

பீரோவ
உருட்ட வேணாம்
-------------------
ரெண்டு Securityக்கும்
நூறு நூறு ரூபா
கொடுத்திருக்கேன்

நீங்க லேட்டா வந்தா Gate தெறக்க
வேண்டாம்னுட்டு
--------------------
பால் ஒரு வாரத்துக்கு
வேண்டாம்னுட்டேன்

அங்க ஸீன் க்ரியேட்
பண்ணாம
வெளில போய்
சாப்பிடுங்க
----------------------
உங்க உள்ளாடைகள்
பீரோவில் வலது புறமும்
குழந்தைகளோடது
இடது புறமும் இருக்கு.

மாத்தி போட்டுட்டு
Uncomfortable லா
இருந்ததுனு ஆஃபீசுல இருந்து
புலம்பாதீங்க.
-----------------
அன்னன்னிக்கு
அவுத்து போடறத
தண்ணில நனச்சு
காயப்போடுங்க.

வளத்தவங்கள
சொல்லனும்
-----------------------
தூங்கி எழுந்த
உடனே பால்கனில
நின்னுகிட்டு
பல் தேய்காதீங்க..
A.M. மா... P.M. மா...
Confirm பண்ணிட்டு
பால்கனிக்கு வாங்க
-----------------------
உங்க
medical report
பர்ஃபெக்ட்டா இருக்கு.

அந்த
லேடி டாக்டரை
பாக்கவேண்டிய
அவசியமில்லை.
-----------------
என் தங்கையின்
பிறந்தநாள்
போன மாசமே
நாம அட்டண்ட்
பண்ணியாச்சு.
முடிஞ்சிடிச்சி.

நடு ராத்திரில
விஷ் பண்றேன்
பேர்வழின்னு
வழிய வேணாம்
---------------
பத்து நாள்
wi-fi cut. password மாத்திட்டேன். நிம்மதியா தூங்குங்க.
------------------
அப்றம்
என் தோழிகள்
எல்லாமே
Out of station. .
------------------
கட்டக் கடேசியா
ஒண்ணு.

ரொம்ப புத்திசாலித்தனமா
நடந்துக்கறதா நினச்சி
ஏதும் பண்ண வேண்டாம்.
நான் எப்ப வேணாலும்
திரும்பி வந்துருவேன்.
சொல்லாம. !!!
-----------------------
இவள பொண்டாட்டியா கட்டுனதுக்கு ரெண்டு போண்டா டீ சாப்பிட்டு தூங்கியிருக்கலாம்

என்னா ஒரு வில்லத்தனம்....
😂😂

ஒரு ஜென் கதை

❤ஒரு ஜென் கதை❤

நல்லசிவம் பெரிய பணக்காரர். அவருடைய வீட்டில் திரும்பிய திசையெல்லாம் வேலைக்காரர்கள். விரல் சொடுக்கினால் ஓடி வருவார்கள். கேட்டதெல்லாம் உடனே கிடைக்கும்.

ஒருநாள் நல்லசிவம் விரல் சொடுக்கினார். யாரோ ஓடிவந்தார்கள். ‘கடைக்குப் போய் அரைக் கிலோ வெண்டைக்காய் வாங்கிட்டு வா!’ என்றார்.

அந்த வேலைக்காரர் ஓடினார். பை நிறைய வெண்டைக்காயோடு திரும்பிவந்தார்.

நல்லசிவம் அதைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டுச் சீறினார். ‘முட்டாள்! எல்லாம் முத்தல்காய். வெண்டைக்காயை உடைச்சுப் பார்த்து வாங்கணும்னு தெரியாதா?’

அடுத்த நாள் அதே நல்லசிவம். அதே சொடுக்கல். அதே வேலைக்காரர். ‘கடைக்குப் போய் ஒரு தீப்பெட்டி வாங்கிட்டு வா!’

வேலைக்காரர் மறுபடி ஓடினார். ஒரு தீப்பெட்டி வாங்கினார். முந்தின நாள் முதலாளி சொன்னது ஞாபகம் வந்தது. ஒவ்வொரு தீக்குச்சியாகக் கிழித்துப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டார். ‘சபாஷ்’ என்று தனக்குத்தானே ஒரு ஷொட்டு கொடுத்துக்கொண்டு வீடு திரும்பினார்.

ஆனால் இன்றைக்கும் அவருக்குத் திட்டுதான் கிடைத்தது. ‘என்னடா தீப்பெட்டி வாங்கிட்டு வந்திருக்கே? ஒரு குச்சிகூட எரியலை?’

‘தெரியலீங்கய்யா. நான் கொளுத்திப் பார்த்தபோது எல்லாம் ஜோரா எரிஞ்சுதே!’

வாழ்க்கைக்கான  பொதுவிதிகள் என்று எவையும் கிடையாது.

இன்றைக்குச் சரியாகத் தோன்றுபவை நாளைக்கு இன்னொரு சூழ்நிலையில் தவறாக மாறிவிடலாம்.

 தாய்ப்பாலும் விஷமாகலாம், கள்ளிப்பாலும் உயிரைக் காப்பாற்றலாம், நிலைமையைப் பார்த்து வழியை மாற்றிக்கொள்வதற்குதான் ஆறாம் அறிவு!❤

நட்சத்திர காயத்ரி மந்திரம்






எந்த பிரச்சினைனையும் தீர்க்கும் நட்சத்திர காயத்ரி மந்திரம். உங்கள் ஜாதகப்படி நீங்கள் என்ன நட்சத்திரமோ அந்த நட்சத்திரத்திற்குரிய நட்சத்திர காயத்ரி மந்திரம் சொல்லுங்கள். 1 மண்டலம் தினமும் (அதிகாலை) தொடர்ந்து சொல்லிவர கைமேல் பலன் கிடைக்கும்... தினமும் குறைந்தது 9 முறையாவது உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து  சொல்லுங்கள். நீங்கள் இன்பங்கள் நிறைய பெற்று, வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

1) அஸ்வினி

 ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

2) பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்

3) கிருத்திகை

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

4) ரோஹிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

5) மிருகசீரிடம்

ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

6) திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

7) புனர்பூசம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

8) பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

9) ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

10)  மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்

11) பூரம்

ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

12) உத்திரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

13) அஸ்தம்

 ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ

ஹஸ்தா ப்ரசோதயாத்

14) சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

15)  சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

16) விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்

17) அனுஷம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

18) கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

19) மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

20) பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

21) உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

22) திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

23) அவிட்டம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

24)  சதயம்

ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

25) பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

26) உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

27)  ரேவதி

ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்