ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்


ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்


கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே  சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!

இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.

இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.

பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.

கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

சிறுகதை நேரம்

சிறுகதை நேரம்


"நீண்ட தொலைவில்இருந்து இரண்டுகுடம் தண்ணீர் எடுத்துவந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்துவிட்டு, அடுத்த இரண்டுகுடம் தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி........

"அந்தநேரம் அவளின் கணவன் மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெயில். பசிவேறு அவனுக்கு.

"வெயிலில் வந்த்தால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் தட்டிவிட்டு விழுந்துவிடுகிறான். இரண்டுகுடம் தண்ணீரும் கொட்டிவிடுகிறது.

அவனுக்கு கடுமையான கோபம் வந்துவிடுகிறது. கொஞ்சமாவது அறிவுவேனாம்? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னும் இரண்டு குடத்தோடு வருகிறாள் மனைவி.

" தூக்கிவந்த குடத்தைக்கூட இறக்கவிடாமல் அவளைத்திட்டுகிறான். "உன்னையெல்லாம் உங்கவீட்டில எப்படித்தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்றபடி கண்டபடி திட்டுகிறான்.

இதைக்கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. " நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டு வற்றேன் தெரியுமா?

கண்ணை எங்க வச்சுக்கிட்டு போனிங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி வார்த்தை பெரிதாகி, அவன் அவளை அறைந்துவிடுகிறான்.

"உடனே அவள் 'இனி ஒரு நிமிஷம்கூட உன்கூட வாழமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளின் அம்மாவீட்டுக்கு சென்றுவிடுகிறாள்......

இது கணவன், மனைவிக்குள் ஒருசின்ன பிரட்சனை எவ்வளவு பெரிய முடிவைஎடுக்கவைத்துவிட்டது என்பதைக்கூறும் கதை.

இந்தக்கதையின் முடிவு இப்படிஇருத்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்ப்போம்.........

அவன் குடம்தடுக்கி விழுந்து, தண்ணீரை கொட்டிவிட்டான். உடனே அவனுக்கு தோன்றியது " அடடா இப்படி கவனிக்காமல் இரண்டுகுட தண்ணீரையும் கொட்டிவிட்டோமே!

"சே! பாவம் அவள். தண்ணீர் எவ்வளவு தூரத்தில்இருந்து கொண்டுவருகிறாள்? முதல்வேலையா அவள்வந்தவுடன் மன்னிப்புகேட்டுவிட்டு நாமேபோய் இரண்டுகுடம் தண்ணீர் எடுத்து கொடுக்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும்போது அவள் தண்ணீரோடு வருகிறாள்.

இவன் ஓடிப்போய் அந்தக்குடங்களை இறக்கியவாறு நடந்ததைச்சொல்லி, "நான் கவனிக்காமல் குடத்தின்மேல் விழுந்து தண்ணீரைக்கொட்டிவிட்டேன். நீ எவ்வளவுதூரத்தில்இருந்து இந்த தண்ணீரைக்கொண்டுவருகிறாயஎன்னை மன்னித்துவிடு. கொடு நான்போய் தண்ணீர் கொண்டுவருகிறேன் என்கிறான்.

உடனே அவள் பதறுகிறாள். " ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர்போனா போகட்டுங்க. நீங்க என்ன வேனும்னா கொட்டிவிட்டீங்க! தெரியாமத்தானே! அங்க தண்ணியவச்சது என்தப்பு. நான் போய் எடுத்துக்கொள்கிறேன்.

நீங்க வாங்க சாப்பிட. நல்ல பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்கிறாள்.(அவள் திட்டியிருந்தால்கூட இவ்வளவு தண்டனை கிடைத்திருக்காது அவனுக்கு).

அவன் அப்படியே நெகிழ்ந்துபோகிறான். அவள்மேல் அவனுக்கு இன்னும் அளவுகடந்த பாசம் உண்டாகிறது உள்ளுக்குள்.

இவ்வளவுதான் நம் வாழ்க்கையும்!கணவனோ, மனைவியோ தெரிந்து யாரும் தப்பு செய்வதில்லை. இருவரில் ஒருவர் ஒருபடிஇறங்கினால், மற்றவர் கண்டிப்பாக பத்துப்படி இறங்கிவருவார்.

நம்மைப்பார்த்துதான் நம்பிள்ளைகள் வளர வேண்டும்.........

புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை!

வாழ்க வளமுடன்

இயற்கை மருத்துவம்-தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்


நீரிழிவு :-

உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. முழு தானியங்கள், அவரை மற்றும் பட்டாணிகள், நட்ஸ் போன்றவற்றிலும் அதிக அளவு மாங்கனீசு அடங்கியுள்ளது.

சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்கும் :-

உடலின் அநேக செயல்பாட்டிற்கு பயன்படும் முக்கிய உலோகமாக காப்பர் விளங்குகிறது. அதிலும் காப்பர் மற்றும் வைட்டமின் சி, சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடைன் மீள் திறனுடன் வைத்திருக்கும். இத்தகைய காப்பர் தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது.

எலும்புகளை உறுதியாக வைக்க உதவி புரியும் :-

தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது, உடலில் பாஸ்பேட் கலப்பதால், எலும்பு உருக்குதலை அது தடுக்கும்.

இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும் :-

போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், உலகத்தில் உள்ள பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பதால், உடலானது ஹீமோகுளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும். இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல், இரத்த சோகையை உண்டாக்கும். ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.

தசைகளையும் நரம்புகளையும் ரிலாஸாகச் செய்யும் :-

எப்போதெல்லாம் தசை பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கொஞ்சம் உணவோடு சேர்த்து தேங்காய் பாலை பருகினால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. மேலும் ஒவ்வொரு நரம்பு அணுக்களுக்கும் வலித் தடுப்பானாக விளங்குவது மக்னீசியத்தின் முக்கியமான அம்சமாகும். உடலில் மக்னீசியம் இல்லையென்றால், கால்சியம் நரம்புகளை ஊக்குவிக்கும். அதனால் நரம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக செயல்படும். அளவுக்கு அதிகமாக நரம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக இருப்பதால், தசைகள் அளவுக்கு அதிகமாக சுருங்குவதற்கு காரணமாக விளங்குகிறது.

உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் :-

உடல் எடையை குறைக்க முற்படுபவர்களுக்கு, கண்டிப்பாக இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும். தேங்காய் பால் வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும். அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான்.

கீல்வாதத்தின் இடர்பாட்டை குறைக்கும் :-

செலினியம் என்பது ஒரு முக்கியமான ஆக்சிஜனேற்றத் தடுப்பான். இத்தகைய செலினியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது. ஆகவே கீல்வாதம் இருப்பவர்கள், இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். குறைந்த அளவு செலினியம் இருப்பவர்களுக்கு, முடக்கு வாதம் ஏற்பட அதிகமான வாய்ப்புள்ளது.

இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த உதவும் :-

இரத்தக் கொதிப்பை எண்ணி கவலைப்படுபவர்கள், பொட்டாசியம் கலந்த உணவை உண்டால், இந்த பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும். இத்தகைய பொட்டாசியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது.

உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பை நிலைநிறுத்த உதவும் :-

தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.

புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் :-

உடம்பில் உள்ள புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புற்றுநோய் அணுக்களின் செயல்பாடுகளை குறைக்கும்

கேரி பேக்


கேரி பேக் ..




காலை நேரம். கொஞ்சம் மருந்தும் காலைச் சிற்றுண்டியும் கடையில் வாங்க வேண்டிய சூழல். ஒரு பெரிய, இரண்டு
 சிறிய பாத்திரங்களோடு புறப்பட்டேன். மருந்துக் கடையில் ‘சிரப்’ ஒரு பாட்டிலும், மூன்று மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டு மருந்துக்கு கை நீட்டினேன், மருந்துப் பாட்டில், மாத்திரையோடு ஒரு கேரி பேக்கை அந்தப் பையன் நீட்டினான்.

இப்பொழுதெல்லாம் கடைகளில் இரண்டு ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினாலும் கூட,”விய்ஷ்க்” என பிய்த்து,
”ப்பூ” என ஊதி ஒரு கேரி பேக்கில் போட்டுக் கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான்.

“தம்பி…. கேரி பேக் வேணாம்” என்றேன்.

“பரவால்ல சார் வாங்கிக்கங்க” என்றான்.

மறுத்து விட்டு மருந்துப் பாட்டில், மாத்திரை மட்டும் வாங்கி பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு திரும்பினேன். திடீரென அந்தப் பையனை திரும்பிப் பார்க்கத் தோன்றியது.

 பார்த்தேன். அருகிலிருந்த பெண்ணிடம் ஏதோ சொல்லி முடித்திருக்க, அந்தப் பெண் கண்கள் சிலிர்க்க சிரித்துக் கொண்டிருந்தார். நான் அவர்களைப் பார்ப்பதை கண்டவுடன், சிரிப்பை நிறுத்தி தங்கள் வேலைகளில் சுறுசுறுப்பாக இருப்பது போல் நகர்ந்தார்கள்.

சிற்றுண்டிக் கடையில் ஆறு இட்லிகள் வேண்டுமென்று கூறி பாத்திரங்களைக் கொடுத்தேன். இட்லிகளை பாத்திரத்தில் போட்டு மூடிவிட்டு, சாம்பார் மற்றும் சட்னிகளை தயாராக வைத்திருந்த பாலித்தீன் மூட்டை முடிச்சுகளாக அள்ளிக் கொடுத்தார்.

அதை மறுத்து விட்டு, என்னிடமிருந்த பாத்திரத்தில் ஊற்றித் தருமாறு கேட்டேன். பணியாளர் மறுத்தார். ஏனென்று கேட்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளாகத் தான் கொடுக்கச் சொல்லி தங்களுக்கு உத்தரவென்று சொல்லிவிட்டு என்னை எளிதில் ஒதுக்கிவிட்டு, அடுத்த வாடிக்கையாளரை கவனிக்க, நான் ஒருவித வெறுமை நிறைந்த கோபத்துடன், பணம் கொடுக்குமிடத்தில் இருந்த நபரிடம் “ஏங்க நா கொண்டுவந்த பாத்திரத்தில் ஊத்தித் தராம, பிளாஸ்டிக் பொட்டலமா தர்றீங்க” என சற்றே எரிச்சலோடு கேட்டேன்.

“யார் சார் இப்பல்லாம் பார்சல் வாங்க பாத்திரம் கொண்டு வர்ராங்க! எல்லாரும் பிஸி, வர்ற வேகத்ல சட்னு, கட்டி வச்சிருக்க சாம்பார், சட்னினு ஈஸியாக வாங்கிட்டு போறாங்க, அது தான் எங்களுக்கும் ரொம்ப ஈஸிங்க” எனச் சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளரிடம் “சார் குடுங்க” என்று என்னை எளிதாகப் புறந்தள்ளினார்.

மனது சுருங்கி வெளியில் வந்தேன், அங்கேயே மேசை மேல் வைத்து பொட்டலங்களைப் பிரித்து சாம்பார், சட்னியை பாத்திரத்தில் ஊற்றலாமா என்று நினைத்தேன், எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பார்களோ என வெட்கப்பட்டது வெட்கங்கெட்ட மனது.

சாலையோரம் இறைபட்டு கிடக்கும் கசங்கிய கேரி பேக்குகள் போல் மனது கசங்கிப் போனது. எந்த நாகரிகம், கேரி பேக்குகளுக்காக மனிதர்களை இப்படி அடிமைப்படுத்தியது.

 நான்கு கடைகளில் நான்கு பொருட்கள் வாங்கினால் நான்கு கேரி பேக்குகள் இலவசமாய்க் கிடைக்க, நமது கைகள் மகிழ்ச்சியோடு வாங்கி ஊஞ்சலாட்டிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது.

வீட்டுக்கு போனவுடன் கசங்கிய அந்த கேரி பேக் குப்பைத்தொட்டி ஓரத்திலோ, சன்னல் வழியாகவோ தூக்கி வீசப்படுகிறது. சில சமயம் பின்னர் பயன்படுமென்று அரிசி மூட்டை சந்திலே சொருகி வைக்கப்பட்டு கிடக்கிறது. சில நாட்களில் அதுவும் வீதிக்கு வருகிறது.

 பெரும்பாலும் அந்த நாள் குப்பை கேரி பேக்கில் மூட்டையாகக் கட்டப்பட்டு வாசலில் குப்பை சேகரிப்பவருக்காக வைக்கப்படுகிறது.

கேரி பேக்குகளுக்கு இணையாக, உபயோகித்தவுடன் தூக்கியெறியும் பிளாஸ்டிக் டம்ளர்களும், பாட்டில்களும், தட்டுகளும் பார்க்கும் இடமெல்லாம் பரவிக் கிடக்கின்றன.

 பயன்படுத்திய பின் தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களில், வெறும் பத்து சதவிகிதம் கூட மறு சுழற்சிக்காக சேகரிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் சாலையோரமும், பயன் படுத்தாமல் கிடக்கும் காலி இடங்களிலும் படர்ந்து பரவிக் கிடக்கின்றன.

காமுகனின் மனதில் ஊறும் வெற்றுக் காமம் போல், மண்ணோடு ஊடுருவிக் கிடக்கிறது. மண்ணில் ஊறிய இந்த பிளாஸ்டிக் சனியன் மண்ணோடு மண்ணாக மட்கிப் போக எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்கும்?

மிக எளிதாக பிளாஸ்டிக்கை மண்ணில் கலக்கச் செய்யும் கொலை பாதகத்தை மனித சமுதாயம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்து கொண்டேயிருக்கிறது.

மழை கொட்டி வெள்ளம் வடிந்த பின் ஒவ்வொரு சாக்கடை பள்ளத்தின் குறுக்கே இருக்கும் குழாய்களிலும் கொத்துக் கொத்தாக பிளாஸ்டிக் குப்பைகள் குட்டிச் சாத்தான்கள் போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மோசமான சாட்சியம் மனித சமூகத்திற்கு மிகப் பெரிய எச்சரிக்கை மணி.

சாக்கடைகள் அடைபட்டு கலங்கிய கழிவுநீர் சர்வ சாதாரணமாய் வீடுகளுக்குள் வருவதை சிறு முகச் சுழிப்போடு நகரத்தில் மன்னிக்கவும் நரகத்தில் வாழும் மனித சமூகம் சகித்து வாழப் பழகிவிட்டது.

அடுத்த பத்து இருபது ஆண்டுகளில் இந்த பிளாஸ்டிக் நகரத்தின் தரை முழுதும் பரவி விடலாம். மழை நீர் மண்ணில் செல்ல வாய்ப்பற்று நிலமெல்லாம் மலடாகிவிடலாம்.

 பெய்யும் நீரும் சாக்கடை அடைப்புகளை மேவி ஆற்றுக்கு ஓடி கடலை எட்டிவிடலாம். நகரத்தின் தாகம் தீர்க்க எங்கிருந்து நீர் கிடைக்கும், 2000 அடி தோண்டுவோமா இல்லை 3000 அடி இல்லையில்லை 10,000 அடி அல்லது பூமிப் பந்தின் மறுபக்கம் வரை தோண்டுவோமா, நம் விஞ்ஞானம் தொண்ட வைக்கலாம்,

ஆனால் விஞ்ஞானத்திற்கு தண்ணீரை சிதைத்து சீரழிக்கத் தெரியும், புதிதாய் ஒரு சொட்டு தண்ணீரை உருவாக்கத் தெரியுமா?

மனைவி கணவனுக்கு எழுதி வைத்துவிட்டு போன சிறு குறிப்பு:

மனைவி கணவனுக்கு எழுதி
வைத்துவிட்டு போன சிறு குறிப்பு:

*நான் எங்க அம்மா வீட்டுக்கு
குழந்தைகளோட போறேன்.*

திரும்பி வர
10 நாளாகும்.
-------------------
நண்பர்களை அழைத்து
கொட்டமடிக்க வேண்டாம்.
போனமுறை
சோஃபா பின்னாலிருந்து
நாலு பாட்டிலும் சிகரெட்
பாக்கெட்டும் எடுத்தேன்.
--------------------------
பாத்ரூம் சோப் கேசில
மொபைல மறந்து வச்சிராதீங்க.
போன முறை தேடி
அலைஞ்சப்ப
அங்க கண்டு எடுத்தேன்..
-------------
மூக்குக்கண்ணாடி
அதன் பாக்சில் வைக்கவும்.
போன முறை
ஃப்ரீட்ஜில் இருந்தது.
-----------------
வேலைக்காரிக்கு
சம்பளம் தந்தாச்சு.
உங்க தாராள
மனச காட்ட வேண்டாம்.
-----------------
காலைல
பக்கத்து வீட்டுக்கு
பேப்பர் போட்டாச்சான்னு daily
அவங்ககிட்ட வழிய வேண்டாம்.

நம்ம பேப்பர்காரன் வேற.
-------------------------
சமையல் கட்டு
பக்கம்
போக
வேணாம்

ஸிங்க்கு
காவி கலருக்கு
மாத்தினீங்கன்னா
சும்மா இருக்க
மாட்டேன்
---------------
சாமி படத்துக்கு
விளக்கேத்துங்க

ரெண்டு ஸ்லோகம்
சொன்னா நாக்கு
வெந்துடாது
------------------------
வாக்கிங் போறப்போ
டீ ஷர்ட்
போட்டுக்கோங்க
ஜிப்பா வேணாம்

ஜிப்பா கலர்ல
Free size சுடிதார்
டாப்ஸ் இருக்கு
அனிதா அன்னிக்கு
சிரிச்சா
---------------------
Food coupon
க்ரெடிட் கார்டு
எங்கிட்ட இருக்கு...

பீரோவ
உருட்ட வேணாம்
-------------------
ரெண்டு Securityக்கும்
நூறு நூறு ரூபா
கொடுத்திருக்கேன்

நீங்க லேட்டா வந்தா Gate தெறக்க
வேண்டாம்னுட்டு
--------------------
பால் ஒரு வாரத்துக்கு
வேண்டாம்னுட்டேன்

அங்க ஸீன் க்ரியேட்
பண்ணாம
வெளில போய்
சாப்பிடுங்க
----------------------
உங்க உள்ளாடைகள்
பீரோவில் வலது புறமும்
குழந்தைகளோடது
இடது புறமும் இருக்கு.

மாத்தி போட்டுட்டு
Uncomfortable லா
இருந்ததுனு ஆஃபீசுல இருந்து
புலம்பாதீங்க.
-----------------
அன்னன்னிக்கு
அவுத்து போடறத
தண்ணில நனச்சு
காயப்போடுங்க.

வளத்தவங்கள
சொல்லனும்
-----------------------
தூங்கி எழுந்த
உடனே பால்கனில
நின்னுகிட்டு
பல் தேய்காதீங்க..
A.M. மா... P.M. மா...
Confirm பண்ணிட்டு
பால்கனிக்கு வாங்க
-----------------------
உங்க
medical report
பர்ஃபெக்ட்டா இருக்கு.

அந்த
லேடி டாக்டரை
பாக்கவேண்டிய
அவசியமில்லை.
-----------------
என் தங்கையின்
பிறந்தநாள்
போன மாசமே
நாம அட்டண்ட்
பண்ணியாச்சு.
முடிஞ்சிடிச்சி.

நடு ராத்திரில
விஷ் பண்றேன்
பேர்வழின்னு
வழிய வேணாம்
---------------
பத்து நாள்
wi-fi cut. password மாத்திட்டேன். நிம்மதியா தூங்குங்க.
------------------
அப்றம்
என் தோழிகள்
எல்லாமே
Out of station. .
------------------
கட்டக் கடேசியா
ஒண்ணு.

ரொம்ப புத்திசாலித்தனமா
நடந்துக்கறதா நினச்சி
ஏதும் பண்ண வேண்டாம்.
நான் எப்ப வேணாலும்
திரும்பி வந்துருவேன்.
சொல்லாம. !!!
-----------------------
இவள பொண்டாட்டியா கட்டுனதுக்கு ரெண்டு போண்டா டீ சாப்பிட்டு தூங்கியிருக்கலாம்

என்னா ஒரு வில்லத்தனம்....
😂😂

ஒரு ஜென் கதை

❤ஒரு ஜென் கதை❤

நல்லசிவம் பெரிய பணக்காரர். அவருடைய வீட்டில் திரும்பிய திசையெல்லாம் வேலைக்காரர்கள். விரல் சொடுக்கினால் ஓடி வருவார்கள். கேட்டதெல்லாம் உடனே கிடைக்கும்.

ஒருநாள் நல்லசிவம் விரல் சொடுக்கினார். யாரோ ஓடிவந்தார்கள். ‘கடைக்குப் போய் அரைக் கிலோ வெண்டைக்காய் வாங்கிட்டு வா!’ என்றார்.

அந்த வேலைக்காரர் ஓடினார். பை நிறைய வெண்டைக்காயோடு திரும்பிவந்தார்.

நல்லசிவம் அதைக் கையில் எடுத்துப் பார்த்துவிட்டுச் சீறினார். ‘முட்டாள்! எல்லாம் முத்தல்காய். வெண்டைக்காயை உடைச்சுப் பார்த்து வாங்கணும்னு தெரியாதா?’

அடுத்த நாள் அதே நல்லசிவம். அதே சொடுக்கல். அதே வேலைக்காரர். ‘கடைக்குப் போய் ஒரு தீப்பெட்டி வாங்கிட்டு வா!’

வேலைக்காரர் மறுபடி ஓடினார். ஒரு தீப்பெட்டி வாங்கினார். முந்தின நாள் முதலாளி சொன்னது ஞாபகம் வந்தது. ஒவ்வொரு தீக்குச்சியாகக் கிழித்துப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டார். ‘சபாஷ்’ என்று தனக்குத்தானே ஒரு ஷொட்டு கொடுத்துக்கொண்டு வீடு திரும்பினார்.

ஆனால் இன்றைக்கும் அவருக்குத் திட்டுதான் கிடைத்தது. ‘என்னடா தீப்பெட்டி வாங்கிட்டு வந்திருக்கே? ஒரு குச்சிகூட எரியலை?’

‘தெரியலீங்கய்யா. நான் கொளுத்திப் பார்த்தபோது எல்லாம் ஜோரா எரிஞ்சுதே!’

வாழ்க்கைக்கான  பொதுவிதிகள் என்று எவையும் கிடையாது.

இன்றைக்குச் சரியாகத் தோன்றுபவை நாளைக்கு இன்னொரு சூழ்நிலையில் தவறாக மாறிவிடலாம்.

 தாய்ப்பாலும் விஷமாகலாம், கள்ளிப்பாலும் உயிரைக் காப்பாற்றலாம், நிலைமையைப் பார்த்து வழியை மாற்றிக்கொள்வதற்குதான் ஆறாம் அறிவு!❤

நட்சத்திர காயத்ரி மந்திரம்






எந்த பிரச்சினைனையும் தீர்க்கும் நட்சத்திர காயத்ரி மந்திரம். உங்கள் ஜாதகப்படி நீங்கள் என்ன நட்சத்திரமோ அந்த நட்சத்திரத்திற்குரிய நட்சத்திர காயத்ரி மந்திரம் சொல்லுங்கள். 1 மண்டலம் தினமும் (அதிகாலை) தொடர்ந்து சொல்லிவர கைமேல் பலன் கிடைக்கும்... தினமும் குறைந்தது 9 முறையாவது உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து  சொல்லுங்கள். நீங்கள் இன்பங்கள் நிறைய பெற்று, வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

1) அஸ்வினி

 ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

2) பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்

3) கிருத்திகை

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

4) ரோஹிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

5) மிருகசீரிடம்

ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

6) திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

7) புனர்பூசம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

8) பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

9) ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

10)  மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்

11) பூரம்

ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

12) உத்திரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

13) அஸ்தம்

 ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ

ஹஸ்தா ப்ரசோதயாத்

14) சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

15)  சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

16) விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்

17) அனுஷம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

18) கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

19) மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

20) பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

21) உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

22) திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

23) அவிட்டம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

24)  சதயம்

ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

25) பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

26) உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

27)  ரேவதி

ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்