சீட்டுக்கவி என்பது 96 வகைச் சிற்றிலக்கியங்களுள்
ஒன்றாகும். இது கவியரசர் ஒருவர் முடியரசர் அல்லது வள்ளல் ஒருவருக்கு
தனக்கோ அல்லது பிறருக்கோ உதவி செய்யுமாறு கேட்டு அனுப்பும் விண்ணப்பக்கவி
ஆகும். இதில் கவிஞரின் புகழும் வள்ளலின் புகழும் பாடப்படும். அருணாசல
கவிராயர் மணலி முத்துக்கிருஷ்ண முதலியாருக்கு அனுப்பிய சீட்டுக்கவி, பாரதியார் எட்டயபுரம் சமீனுக்கு அனுப்பிய சீட்டுக்கவி ஆகியவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
WhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி?
WhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி?
“நான் அனுப்புன மெசேஜ் பார்த்த அப்புறமும் ரிப்ளே பண்ணல நீ!”
என பல மனைவிகள், காதலிகள், முதலாளிகள் கேட்கத் துவங்கி விட்டனர்.
எனவே., ஒரு புதிய வழியின் மூலம் android கைபேசி வைத்திருப்போர் தாங்கள் செய்தியை பார்த்திருந்தாலும் , அனுப்பியவருக்கு நீல நிற குறிகள் தெரியாமல் செய்யல்லாம்.
படி க (1) – உங்கள் கைபேசியில் குறைந்தது android 2.1 அல்லது புதிய android இருக்க வேண்டும்.
படி உ (2) – Settings > Security > ‘Download from Unknown Sources’ என்பதை தேர்வு செய்யவும்.
படி ங (3) – www.whatsapp.com/Android/ என்ற முகவரியில் இருந்து APK கோப்பை தரவிறக்கி நிறுவ வேண்டும்.
படி ச (4) – இப்பொது WhatsApp ஐ திறந்து “Settings > Account > Privacy” என்பதில் “Read Receipts” எனும் தேர்வை நீக்க வேண்டும்.
1. உங்களுக்கு வந்த செய்திக்கான நீல நிற குறி எப்படி அனுப்பியவருக்கு தெரியாதோ.,
2. அதே மாதிரி., நீங்கள் அனுப்பிய செய்தியை மற்றவர் படித்தாரா எனும் நீல நிற குறி நீங்கள் அனுப்பிய செய்திகளுக்கும் இனி தெரியாது.
3. ஆனால் நீங்கள் Group Message செய்தீர்கள் என்றால் அதில் அனுப்பியவருக்கு நீல நிறக் குறி தெரியும்.
கண்ணுக்கு புலப்படாத குடை 2015 இல் புதிய தொழில்நுட்பம்
கண்ணுக்கு புலப்படாத குடை : 2015 இல் புதிய தொழில்நுட்பம்
எனினும் சீனாவைச்சேர்ந்த நிறுவனம் ஒன்று இச்சாதனத்தை உருவாக்கும் உக்தியை கண்டறிந்ததாக அறிவித்தது.
நேற்றையதினம், சீனாவைச்சேர்ந்த புதிய நிறுவனம் ஒன்று ஏற்கனவே திட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் 2015 இல் சாதனம் பாவணைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது!
இச்சாதனம், கீழ்ப்பகுதியால் காற்றை உறுஞ்சி மேல் பகுதியால் அதிவேகமாக வெளியிடும், அவ் வேகம் மழை நீரை புறம்தள்ளி வெற்றிடத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது.
நீண்டகாலமாக மாற்றமின்றி இருக்கும் குடைக்கு இது ஒரு புதிய மாற்றமாகும். காலப்போக்கில் தொப்பியில் இவ் நுட்பம் வரக்கூடும்.
வடக்கிருத்தல்
வடக்கிருத்தல் என்பது பண்டைய தமிழரின்
நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். இதனை ஆடவர் மேற்கொண்டனர்.
ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம்
உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் எனப் பழந்தமிழர்
கொண்டிருந்தனர். முற்காலத் தமிழகத்தில், போர்களின்போது முதுகிலே புண்பட்டவர்கள், அதை அவமானமாகக் கருதுவர். இதனால், அப் போர்க்களத்திலேயே வடக்கு நோக்கியபடி பட்டினி கிடந்து தமது உயிரைப் போக்கிக் கொள்வது உண்டு. கலைக் களஞ்சியம், வடக்கிருத்தலை 'உத்ரக மனம்' என்றும் ' மகாப் பிரத்தானம்' என்றும் கூறுகிறது. வடக்கிருந்து உயிர் துறந்தோருக்கு நடுகல் இட்டு நினைவுச் சின்னமாக வழிபடுவதும் உண்டு. வடக்கிருத்தல் இக்காலத்தில் வழக்கில் இல்லை.
சமண மதத்தில் வடக்கிருத்தல்
வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் சமண நோன்பு முறை
'சல்லேகனை' என்ப்படும். ஆயினும் இது வடக்கிருத்தலை விட வேறுபட்டது. இது ஆண்
பெண் இரு பாலருக்கும் பொதுவாகக் காட்டப்படுகிறது. மேலும் நோன்புக்குரிய
காரணியாக மன வேதனையைத் தரும் இடையூறு, தீராத நோய், மூப்பு, வற்கடம் ஆகியவை
அமைகின்றன. மேலும் 'சல்லேகனை ' வீடு பேறு பெறுவதற்காக நோன்பிருத்தலைக்
குறிக்கும்.
வடக்கிருத்தலின் அடிப்படைக் காரணிகள்
வடக்கிருத்தலின் அடிப்படைக் காரணியாக அமைவன மானம், வீரம், நட்பு,
தன்நோக்கம் நிறைவேறாமை என்பனவாக அமையலாம். வீரர், புலவர், மன்னர் ஆகியோர்
வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர்
துறப்பவர் துறக்கம் பெறுவர் எனப் பழந்தமிழர் நம்பினர். வடக்கிருந்து உயிர்
நீப்பவர் மறு பிறப்பில் மன்னராகப் பிறாப்பர் என சிறுபஞ்ச மூலம்
சுட்டுகிறது.நாணத்தகு நிலை நேர்ந்ததானால் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ்
நூல்கள் கூறுகின்றன.
வீரம் காரணமாக வடக்கிருத்தல்
பழங்காலத் தமிழகத்திலே போர்களுக்குக் குறைவு இருக்கவில்லை, முடியுடை மூவேந்தர்கள் எனக் குறிப்பிடப்படும் சேரர், சோழர், பாண்டியர் என்போரும், அவர்களுக்கு அடங்கிய குறுநில மன்னரும், ஒருவருடன் ஒருவர் போரில் ஈடுபட்டனர். வீரம்
என்பது ஆண்களுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகளில் ஒன்றாகக்
கருதப்பட்டது. புகழ் பெற்ற மன்னர்கள் பெரும் வீரர்களாக இருந்தார்கள்.
இத்தகைய வீரர்கள் பற்றிப் புலவர்கள்
புகழ்ந்து பாடினர். போர் வரும்போது புறமுதுகிடாமல் (பயந்து ஓடாமல்) முன்
நின்று போர் செய்வது வீரர்களுக்கும் அவர்களது ஆண்மைக்கும் அடையாளமாகக்
கருதப்பட்டது. மார்பிலே புண்பட்டு இறப்பது புகழுக்குரியது, முதுகிலே
புண்படுவது, வீரத்துக்குக் களங்கம் என்று கருதப்பட்டது. முதுகிலே
புண்படுவது புறமுதுகிட்டதன் விளைவாக இருக்கலாம் என்பதனால் இவ்வாறு
கருதப்பட்டது போலும்.
இலக்கியத்தில் வடக்கிருத்தல்
சங்க காலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் வரும் பாடல்கள் இரண்டில், சேர மன்னனான பெருஞ்சேரலாதன், கரிகால் சோழனுடன் ஏற்பட்ட போரின்போது முதுகில் புண் பட்டதனால் வடக்கிருந்து உயிர் துறந்தது பற்றிய செய்தி வருகிறது.அவ்வாறு
வடக்கிருந்து உயிர் விடுவதன் மூலம், வீரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட
களங்கத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது என்பதும், முதுகிலே அம்பெய்தவனுக்கு
அது ஒரு களங்கமாகக் கருதப்பட்டது என்பதும் இப்பாடல்கள் மூலம் தெரிய
வருகிறது.
மானமும் நட்பும்
தன் புதல்வர்கள் செயலுக்கு நாணிய கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்துதும் காணாமலே அவருடன் நட்புக் கொண்ட புலவர் பிசிராந்தையார் அவனுடன் வந்து வடக்கிருந்து உயிர் விட்ட நட்பின் மாட்சிமையும் புறநாற்றுப் பாடல்கள் மூலம் அறியப்படுகிறது.
துறவிகள்
மானம், நட்பு காரணமாக உண்ணாமல் வடக்கிருத்தல் சங்ககால வழக்கம். இந்தக்
கருத்து மருவி, உண்டும் உண்ணாமலும் இருக்கும் துறவிகளைக் குறிக்கவும்
'வடக்கிருந்தார்' என்னும் சொல் படன்படுத்தப்பட்டுள்ளது.
புலிமங்கலம்
புலிமங்கலம் என்பது புலியைக் கொன்ற வீரனுக்கு அக்காலத்தில்
எடுக்கப்பட்ட பாராட்டு விழா ஆகும். அவ்வீரனை புலிமேல் அமர்த்திப்
பல்லக்கில் ஊர்வலம் செய்து பூமாலைகளும்,பரிசுகளும் தந்து பாராட்டி விழா
எடுப்பர். புலியைக் கொன்ற காட்சிகள் வீரத்தின் வெற்றிச் சின்னங்களாக கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியங்களாக கிடைத்துள்ளன கிடைத்த இடங்கள் மல்லசந்திரம், மகராசாகடை அருகில் பூதிக்குட்டை, கந்திலி மலை,பாண்டவர் பண்டா போன்ற சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.
தகடூர்ப் போர்
தகடூர்ப் போர் என்பது அதியமானுக்கும் சேரனுக்கும் இடையில் நடந்த போராகும். தகடூர்ப் போர் பற்றிய நூலே தகடூர் யாத்திரை ஆகும் இந்நூல் நமக்கு முழுவதும் கிடைக்கவில்லை. சிலபாக்களே கிடைத்துள்ளன. திருக்கோவலூர்ப் போரில் அதியமானுன் ஏற்பட்டப் போரில் தோற்ற காரி சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையிடம்
தஞ்சமடைந்தான். இந்நிலையில் சேரமான் இரும்பொறையும், மலையமான் காரியும்
தகடூர் மீது படையெடுத்தனர். இப்போரில் சேரன் அடைந்த பெருவெற்றியைப் பதிற்றுப்பத்து விரிவாகக் கூறுகிறது.
வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும்
வில்பயில் இறும்பில் தகடூர் நூறி
முதல் போர்
தகடூர் முற்றுகை அஞ்சி காலத்திலும் சில காலத்துக்குப் பின் அவன் மகன் காலத்திலும் நடந்ததாக கருதப்படுகிறது. முதல் முற்றுகையில் அஞ்சி இறந்தான். இதை ஔவையார் பாடியுள்ளார். சேரமான் வெற்றிபெற்றாலும் நாடுநகரங்களை அழிக்கவில்லை. தகடூர் நாட்டை தன்னாட்டுடன் இணைத்துக்கொள்ளவில்லை.
இரண்டாம் போர்
முதல் போர் நடந்து கொஞ்ச காலத்திற்குப் பின் நடந்த இரண்டாம் போரின் போது
முதல் நாளில் கோட்டைக்கு வெளியே நடந்த போர் முடிந்துவிட்டது. தகடூர்
படைகள் பேரழிவுடன் கோட்டைக்குள் பின் வாங்கின. சேரவீரர்கள் காவல் காட்டை
அழித்து மறுநாள் கோட்டைக்குள் நுழைந்தனர். இந்த இரண்டாம் போரில் பொகுட்டெழினி
இறக்கிறான். இவன் மறைவுடன் சங்ககால அதியமான்களின் ஆட்சி முடிவுற்றது
எனலாம். பின்னர் அது சேரர்களின் நேரடி ஆட்சிக்குள் சில காலம்
உட்பட்டிருக்கலாம் தகடூர் வந்து வெற்றி பெற்றதன் நினைவாக தகடூர் எறிந்த
பெருஞ்சேரல் என்னும் பட்டத்தை சேரன் பெறுகிறான். தகடூர் அருகே இருந்த மலை
சேர அரையன் மலை ஆகிறது அதுவே இன்று சேர்வராயன் மலை என்று வழங்குகிறது
திருக்கோவலூர்ப் போர்
திருக்கோவலூர்ப் போர் என்ற போர் சங்ககாலத்தில் அதியமான் நெடுமான் அஞ்சிக்கும்,மலையமான் திருமுடிக்காரிக்கும் இடையில் நடந்த போராகும். குலமரபுப் போராக இதைக் கருதலாம். தகடூரில் இருந்து தமிழகத்தின் உட்பகுதிக்குச் செல்லும் ஒரு பெருவழியில் திருக்கோவலூர்
அமைந்துள்ளது.எனவே வணிகவழியினைக் கைப்பற்றும் காரணமாகவே இப்போர்
நிகழ்ந்திருக்கலாம். இப்போரில் திருமுடிக்காரியின் திருக்கோவலூர்
துகளாக்கப்பட்டது. இவ்வெற்றியினை ஔவையார் பெரிதும் புகழ்ந்து பாடியுள்ளார்.
..... .... ..... ...... இன்றும் பரணன் பாடினன் மற்கொல் மற்றுநீஇப்பாடலில் குறிப்பிடப்படும் பரணர் பாடிய பாடல் சங்கத் தொகுப்பில் இல்லை.
முரண்மிகு கோவலூர் நூறி நின்
அரண்அடு திகிரி ஏந்திய தோளே
கொல்லிப் போர்
கொல்லிப் போர் என்பது கொல்லிமலையில் நடந்த போராகும் இப்போர் ஓரிக்கும் காரிக்கும்
நடந்தது இப்போரில் காரி சேரமான் சார்பாக போரிட்டதாக கருதப்படுகிறது.
இப்போரில் வல்வில் ஓரியைக் கொன்று அந்த மலையை சேரமானுக்கு காரி வழங்கினான். ஓரி இறந்தபின்னும் கொல்லிமலையில் பெரும் போர் ஒன்று நடந்து என்பதை
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப் பல்வேல் தானை அதிகமானொடு
இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று
முரசும் குடையுங் கலனுங் கொண்டு
என்று பதிற்றுப்பத்து தெரிவிக்கிறது. இப்போரில் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையை எதிர்த்து அதியமான் நெடுமானஞ்சியும் இரு பெரும் வேந்தர்களாகிய சோழனும்,பாண்டியனும் இணைந்து போரிட்டனர். பெருஞ்சேரல் இரும்பொறை இம்மூவரையும் வென்று அவர்தம் முரசு,குடை,கலன் ஆகியவற்றைக் கைப்பற்றினான்.
நோபெல் பரிசு
நோபெல் பரிசு அல்லது நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள்
அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய
தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும்
பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு
மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770
நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப்
பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல்
என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில
ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும்,
குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு
அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயிலின்படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும்.
நன்னூல்
தொல்காப்பியத்தையும், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையையும் முதல்நூலாகக் கொண்ட வழிநூல். இது தொல்காப்பியம் கண்ட தமிழியலைப்
பின்பற்றி நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு
தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 கால இடைவெளிக்குப் பின்னர்
நிகழ்ந்த தமிழியல் பார்வை இது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தமிழ்மொழி இலக்கணநூல்களுள் தற்போது இருப்பனவற்றில் மிகப்பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்குக் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.
நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தமிழ்மொழி இலக்கணநூல்களுள் தற்போது இருப்பனவற்றில் மிகப்பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்குக் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.
நூலின் பகுதிகள்
நன்னூல் இரு அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தினை ஒட்டி எழுதப்பட்ட இந் நூலிலும் 5 அதிகாரங்கள் இருந்தன என்றும் பல காரணங்களுக்காக 3 அதிகாரங்கள் தொலைந்து போயிருக்கக்கூடும் எனவும் சான்றோர் கூறுவர். இவை:- பாயிரம்
- எழுத்ததிகாரம்
- சொல்லதிகாரம்
பாயிரம்
சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம் என இரு வகையாகவும் நூலின் முகவுரையாகவும் அமைந்துள்ளது சிறப்பு. நன்னூல் நூலுக்கு இலக்கணம் சொல்லத் தொடங்குகிறது. நூலுக்குப் பாயிரம் வேண்டும். நூலுக்குரிய இலக்கணங்கள் எவை, அதனை யார் செய்யவேண்டும். நூலைச் சொல்லும் ஆசிரியர், மாணாக்கர் ஆகியோரது தன்மை முதலானவை இதில் கூறப்படுகின்றன. தொல்காப்பியம் மரபியல் இறுதியில் இவை உள்ளன.- எழுத்து
- எழுத்து, பதம், புணர்ச்சி என்னும் பாகுபாட்டில் எழுத்து ஆராயப்பட்டுள்ளது. இவற்றில் தொல்காப்பியர் கூறிய கருத்துக்கள் உடன்பாட்டுடன் சேர்க்கப்பட்டுள்ளன. பதவியல் பகுதி புதுவரவு. எனினும் தொல்காப்பியம் கிளவியாக்கத்தில் வரும் பால்காட்டும் விகுதிகள் முதலானவை பதவியலுக்கான முன்னோடிகள். [ச], [சை], [சௌ] எழுத்துக்கள் மொழிமுதலாக வராது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுவதை மாற்றி வரும் எனக் காட்டுகிறார்.
- சொல்
- தொல்காப்பியம் ஒன்பது இயல்களில் கூறிய செய்திகள் நன்னூலில் நான்கு இயல்களில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
- தொல்காப்பியம் கூறியுள்ள பொருள் இலக்கணம் இதில் கூறப்படவில்லை.
பொதுப்பாயிரத்தின் உறுப்புகள்
- நூலினது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
- ஆசிரியனது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
- பாடஞ் சொல்லலினது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
- மாணாக்கனது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
- பாடங் கேட்டலின் வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
எழுத்ததிகாரம்
இவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:- எழுத்தியல்
- பதவியல்
- உயிரீற்றுப் புணரியல்
- மெய்யீற்றுப் புணரியல்
- உருபு புணரியல்
சிலேடை
ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் படும்படி அமைவது சிலேடை
எனப்படும். மொழிக்கு உரிய அணிகளுள் இதுவும் ஒன்று. செய்யுள்களிலும், உரை
நடையிலும், மேடைப் பேச்சுக்களிலும், சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. சில
அறிஞர்கள் சாதாரணமாக மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கூடச்
சிலேடையாகப் பேசுவதுண்டு. தமிழிலும் பல பிற மொழிகளிலும் சிலேடைப் பயன்பாடு
காணப்படுகின்றது.
"ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
தெரிதர வருவது சிலேடை யாகும்"
"அதுவே, செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்"
"ஒருவினை பலவினை முரண்வினை நியமம்
நியம விலக்கு விரோதம் அவிரோதம்
எனவெழு வகையினும் இயலும் என்ப"
ஒரு வகையில் பொருள்தரும் தொடர்ச் சொல், வேறு வகையில் பிரித்து எழுதும்போது வேறு பொருள் தருமாயின் அது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.
வேரகச் செட்டியாரே!
சமிபாடின்மையைப் போக்க வெங்காயம், வெந்தயம், பெருங்காயம் முதலியவைகளை இட்டு குழம்பு தயாரிப்பார்கள். இதில் வாங்கி வந்த வெங்காயமானது சுக்கைபோன்று உலர்ந்துபோய் விடுமாயின், வெந்தயம் இருந்தும் எந்தப் பலனும் இல்லை. எனவே அந்த சரக்குப் பொருட்கள் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. இவைகளால் கிடைக்கப்பெறும் பயனை சீரகத்தில் செய்யப்படும் இரசம் மூலம் பெறலாம். மேலும் சீரகமும் கெட்டுப்போகாத பொருளாகவே இருக்கிறது. எனவே சீரகத்தை எனக்குத் தந்தால், பெருங்காயம் எனக்குத் தேவையில்லை.
ஆனால், இந்தப் பாடலினுள் சிலேடையாக ஆழமான பொருளைப் புகுத்தியுள்ளனர். அந்தப் பொருளை இப்போது பார்ப்போம். இது திருவேரகம் என்று அழைக்கப்படும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் குடிகொண்டிருக்கும் இறைவனை நோக்கிச் சொல்வதாக வரும்.
வேரகத்துச் செட்டியாரே என்பது திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமானே!
முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்தடைய
ஓர் பெண் கொடிகாமத்தாள் அசைந்து
ஆனைக் கோட்டை வழி
கட்டுடை விட்டாள்
உடுவிலான் வர
பன்னாலையான் மிக உருத்தனன்
கடம்புற்ற மல்லாகத்தில்
இடை விடாது எனை அணையென
பலாலி கண் சோர வந்தாள்
ஓர் இளவாலையே
முழுமையான அர்த்தம்: இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன், முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்...... "நட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான், கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்" என்று, பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்.
தண்டியலங்கார ஆதாரம்
12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் சிலேடையணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:"ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
தெரிதர வருவது சிலேடை யாகும்"
"அதுவே, செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்"
"ஒருவினை பலவினை முரண்வினை நியமம்
நியம விலக்கு விரோதம் அவிரோதம்
எனவெழு வகையினும் இயலும் என்ப"
சிலேடையின் வகைகள்
தொடர்ச் சொல் பலபொருள் வெளிப்படுத்தும் விதத்தின் அடிப்படையில், சிலேடை இரண்டு வகைப்படும். அவை,- செம்மொழிச் சிலேடை
- பிரிமொழிச் சிலேடை
- சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்
ஒரு வகையில் பொருள்தரும் தொடர்ச் சொல், வேறு வகையில் பிரித்து எழுதும்போது வேறு பொருள் தருமாயின் அது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.
துணுக்கு
ஒரு சிலேடைச் சிறுவன் அவன். அன்று அந்திசாய்ந்த நேரம். மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. வீட்டாரின் நச்சரிப்பினால் மண்ணெய் வாங்கிவர, அருகிருந்த கடைக்குச் சென்றான். அங்கு கடைச்சொந்தக்காரனிடம், ஐயா, “கொஞ்சலாம்பெண்ணை தாருங்கள்“ என்றான். கடைக்காரன் மண்ணெய் கொடுக்க குவளையைக் கேட்டான். சிறுவன் மீண்டும் மீண்டும் அதனையே சொல்லிக் கொண்டிருந்தான். கடைசியில் கடைக்காரன் சீறிப்பாய, அவன் அமைதியாய் “மண்ணெய்யும் தாருங்கள், கொஞ்சலாம் பெண்ணையும் தாருங்கள்“ என்று போட்டானே ஒருபோடு.- லாம்பெண்ணை என்பது மண்ணெய்யைக் குறிக்கும் பேச்சுவழக்குச் சொல்லென்க.
எடுத்துக்காட்டுகள்
ஒரு வசனத்தில் சிலேடை
சென்னை வரவேற்கிறது என்பதை ஆம், சென்னை வர வேர்க்கிறது (வியர்க்கிறது என்பதன் பேச்சு வழக்கு) என்று சிலேடை மூலம் பகடியாகச் சொல்லலாம்.காளமேகப் புலவரின் பாடல் ஒன்று

பட்டி
0:00
வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே
இந்தப் பாடலை நேரடியாகப் பொருள் கொண்டால்: ஒரு பலசரக்குக் கடைக்காரரான
வேரகம் எனப்படும் செட்டியாரைப் பார்த்துச் சொல்வதுபோல் இருக்கிறது.வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே
வேரகச் செட்டியாரே!
சமிபாடின்மையைப் போக்க வெங்காயம், வெந்தயம், பெருங்காயம் முதலியவைகளை இட்டு குழம்பு தயாரிப்பார்கள். இதில் வாங்கி வந்த வெங்காயமானது சுக்கைபோன்று உலர்ந்துபோய் விடுமாயின், வெந்தயம் இருந்தும் எந்தப் பலனும் இல்லை. எனவே அந்த சரக்குப் பொருட்கள் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. இவைகளால் கிடைக்கப்பெறும் பயனை சீரகத்தில் செய்யப்படும் இரசம் மூலம் பெறலாம். மேலும் சீரகமும் கெட்டுப்போகாத பொருளாகவே இருக்கிறது. எனவே சீரகத்தை எனக்குத் தந்தால், பெருங்காயம் எனக்குத் தேவையில்லை.
ஆனால், இந்தப் பாடலினுள் சிலேடையாக ஆழமான பொருளைப் புகுத்தியுள்ளனர். அந்தப் பொருளை இப்போது பார்ப்போம். இது திருவேரகம் என்று அழைக்கப்படும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் குடிகொண்டிருக்கும் இறைவனை நோக்கிச் சொல்வதாக வரும்.
வேரகத்துச் செட்டியாரே என்பது திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமானே!
- வெங்காயம் என்பதில், காயம் என்பது உடம்பு, எனவே, வெங்காயம் என்பது வெறுமையான காயம், அதாவது, வெறுமையான இந்த உடம்பு,
- சுக்கானால், அதாவது சுக்கைப்போல வாடி வதங்கிப் போனால்,
- வெந்தயத்தால் ஆவதென்ன? வெந்த அயம் என்பது உயிர் தரிப்பதற்காக உண்ணப்படும் அயச் செந்தூரம் என்ற பொருளில் வரலாம் எனக் கூறப்படுகின்றது. எனவே உடம்பு கெட்டுப் போனால் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளும் இந்த அயச் செந்தூரத்தால் என்ன பயன்?
- இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை, அதாவது, அதன் பிறகு யார் இந்த உடலைச் சுமந்து கொண்டு இருக்க விரும்புவார்கள்?
- சீரகத்தைத் தந்தீரேல் என்பதில் சீர் + அகம், அதாவது சிறந்த மனத்தை அல்லது சிறந்த வீட்டை, அல்லது வீடுபேற்றைத் தருவீரேயானால்,
- வேண்டேன் பெருங்காயம், பெருங்காயம் என்பது பெரிய + காயம், அல்லது பெரிய உடம்பு, அதாவது, மீண்டும் மீண்டும் பிறந்து வினையினால் அவதிப்படும் இந்த பெரிய உடம்பைக் கேட்க மாட்டேன்..
யாழ்ப்பாணத்தின் ஊர்ப் பெயர்களைக் கொண்ட ஒரு சிலேடை
யாழ்ப்பாணத்திலுள்ள மாவட்டத்தின் ஊர் பெயர்களை வைத்து வரும் கவிதை வடிவிலான சிலேடை. இங்கே உள்ள ஊர்ப் பெயர்களில், வேறு அர்த்தம் பொதிந்திருக்கும். இதை எழுதியவர் யாரென்பது தெரியவில்லை.முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்தடைய
ஓர் பெண் கொடிகாமத்தாள் அசைந்து
ஆனைக் கோட்டை வழி
கட்டுடை விட்டாள்
உடுவிலான் வர
பன்னாலையான் மிக உருத்தனன்
கடம்புற்ற மல்லாகத்தில்
இடை விடாது எனை அணையென
பலாலி கண் சோர வந்தாள்
ஓர் இளவாலையே
- முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி
- முடிவிலாதுறை = முடிவற்று உறைந்திருக்கும், அல்லது குடி கொண்டிருக்கும்
- சுன்னாகம் = சுன் + நாகத்தான் = வெள்ளை மலை (இமய மலை = கைலயங்கிரி)
- வழி = வழியில் வந்தவன்
- முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்தடைய
- முந்தித் தாவடி = முன்னே தாவி வரும்
- கொக்குவில் மீது வந்தடைய
- கொடிகாமத்தாள் ஆனைக்கோட்டை வழி கட்டுடை விட்டாள்
- கொடி + காமத்தாள் = கொடி போன்றை இடையுடைய + ஆசை கொண்டவள்
- ஆனைக் கோட்டை வழி = பெரிய கோட்டை போன்ற மார்பகம் வழி
- கட்டுடை விட்டாள் = கண்ணீர் கட்டுடைந்து வழிய நின்றாள்
- உடுவிலான் வர பன்னாலையான் மிக உருத்தனன்
- உடு = நட்சத்திரம் /நிலவு
- பன்னாலை = கரும்பு
- உருத்தனன் = தொல்லை கொடுத்தான்
- கடம்புற்ற மல்லாகத்தில் இடைவிடாது எனை அணையென
- கடம்புற்ற = கடம்பு எனும் பூக்களாலான
- மல்லாகத்தில் = மார்பகத்தில்
- இடை விடாது = இடைவெளியெதுவுமில்லாது
- எனை அணையென = என்னை அணைத்துக் கொள்ளென்று
- பலாலி கண் சோர வந்தாள் ஓர் இளவாலையே
- பலாலி கண் = பல + ஆலி = பல கண்ணீர்த் துளிகள்
- சோர = சொரிந்து
- இளவாலை = இளம் வயதுடைய வாலைப் பெண் = குமரிப் பெண்
முழுமையான அர்த்தம்: இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன், முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்...... "நட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான், கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்" என்று, பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்.
இஸ்லாத்தில் சிலேடை
முகம்மது நபியின் தோற்றத்துக்கு முன்னர் அரபிகள் சிலேடையாகப் பேசுவதை உயர்வாகக் கருதியும் அதைத் தங்களது மொழிப் புலமை என்று கருதியும் வந்தனர். அவர்கள் நல்ல பொருளும் தீய பொருளும் கலந்து பேசி வந்தனர். யூதர்களும் அவ்வாறே சிலேடையாகப் பேசுவோராக இருந்தனர். ஒருவரை மேன்மையாகப் பேசுவது போலும் இழிவாக்குவதை மறைத்தும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தெளிவான பொருள் கொண்டு பேசுவதையே இஸ்லாம் ஆதரிக்கிறது. எனவே, சிலேடையாகப் பேசுவதை இஸ்லாம் தடை செய்தது.இரட்டைக்கிளவி
இரட்டைக்கிளவி என்பது
இரட்டைச் சொற்களாய்ச் சேர்ந்து ஒரு
தன்மைப் பட்டு
நின்று
வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள்
உணர்த்தி வருவதாகும். இது
இரட்டைச் சொல்லாகவே வரும்.
பிரித்தால் பொருள்
தராது.
எ.கா:
- நீர் சலசல என ஓடிற்று.
- மரம் மடமட என முறிந்தது.
- கசகச என வேர்வை, கசகச என மக்கள் பேசிக்கொண்டு
- கலகலப்பான பேச்சு
- கடகட என சிரித்தான்
- கமகம என மணந்தது முல்லை
- கரகரத்த குரலில் பேசினான்
- கிச்சுகிச்சு மூட்டினாள் பேத்தி
- கிசுகிசு ஒன்றை கேட்டேன்
- கிடுகிடு பள்ளம் பார்த்தேன்
- கிளுகிளு படம் பார்த்தாராம்
- கிறுகிறு என்று தலை சுற்றியது
- கீசுகீசு என குருவிகள் கத்தின
- குசுகுசு என்று அதை சொன்னார்
- குடுகுடு கிழவர் வந்தார்
- குபுகுபு என குருதி கொட்டியது
- கும்கும் என்றும் குத்தினார்
- குளுகுளு உதகை சென்றேன்
- குறுகுறுத்தது குற்ற நெஞ்சம்
- கொழகொழ என்று ஆனது சோறு
- கொழுகொழு என்று குட்டி
- சதசத என்ற சேற்றில் விழுந்தேன்
- சரசர என்று மான்கள் ஓடின
- சவசவ என்று முகம் சிவந்தது
- சாரைசாரையாக மக்கள் வந்தனர்
- சிலுசிலு என் காற்று வீசியது
- சுடசுட தோசைக் கொடுத்தாள்
- சொரசொரப்பான தாடி
- தகதக மின்னும் மேனி
- தடதட என் கதவைத் தட்டினான்
- தரதர என்று இழுத்து சென்றான்
- தளதள என்று ததும்பும் பருவம்
- திக்குதிக்கு என் நெஞ்சம் துடிக்கும்
- திடுதிடு என நுழைந்தான் (திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு” - திருப்புகழ் )
- திபுதிபு என மக்கள் புகுந்தனர்
- திருதிரு என விழித்தான்
- துறுதுறு என்ற விழிகள்
- தைதை என்று ஆடினாள்
- தொள தொள என சட்டை அணிந்தார்
- நங்குநங்கு எனக் குத்தினான்
- நணுகுநணுகு எனும் அளவில் அச்சம் மேலிட (இலக்கியம்)
- நறநற என பல்லைக் கடித்தான்
- நைநை என்று அழுதாள்
- நொகுநொகு (நெகுநெகு) என்று மாவை அரைத்தாள்
- பக்பக் என்று நெஞ்சு அடிக்கும்
- படபட என இமைகள் கொட்டும்
- பரபரப்பு அடைந்தது ஊர்
- பளபள என்று பாறை மின்னியது
- பிசுபிசுத்தது போராட்டம்
- பேந்தப்பேந்த விழித்தான்
- பொதபொத பன்றியின் வயிறு
- பொலபொல என வடித்தாள் கண்ணீர்
- மங்குமங்கு (மாங்கு மாங்கு) என்று வேலை செய்தால் போதுமா?
- மசமச என்று நிற்கவில்லை
- மடக் மடக் எனவும் குடித்தார்
- மடமட என நீரைக் குடித்தார்
- மலங்க மலங்க விழித்தான்
- மள மள என எல்லாம் நிகழ்ந்தது
- மாங்குமாங்கு என்று உழைப்பார்
- மினுகு மினுகு என்று செழிப்புற்றிருந்த மேனி (இலக்கியம்)
- முணுமுணுத்து அவர் வாய்
- மொச்சுமொச்சு என்று தின்றார் பாட்டன்
- மொசுமொசு என மயிர்
- மொலு மொலென்று அரிக்கிறது சிரங்கு
- மொழுமொழு என்று தலை வழுக்கை.
- மொறு மொறு என்று சுட்டாள் முறுக்கு
- லபக் லபகென்று முழுங்கினார்
- லபலப என்று அடித்துக் கொண்டாள்
- லபோலபோ என அடித்துக் கொண்டாள்
- லொடலொட என்றும் பேசுவாள்
- வடவட என வேர்த்தன கைகள்
- வதவத என ஈன்றன் குட்டிகள்
- வழவழ என்று பேசினாள் கிழவி (“வழ வழ என உமிழ் அமுது கொழ கொழ என ஒழிகி விழ” - திருப்புகழ்)
- விக்கி விக்கி அழுதது குழந்தை
- விசுவிசு என்று குளிர் அடித்தது
- விறுவிறுப்பான கதையாம்
- வெடவெட என நடுங்கியது உடல்
- வெடுவெடு என நடுங்கினாள்
- வெதுவெதுப்பான நீரில் குளித்தாள்
- வெலவெல என்று நடுங்கினேன்.
- ஜிகிஜிகு ராணி ஜில்ராணி
Subscribe to:
Posts (Atom)