புலிமங்கலம் என்பது புலியைக் கொன்ற வீரனுக்கு அக்காலத்தில்
எடுக்கப்பட்ட பாராட்டு விழா ஆகும். அவ்வீரனை புலிமேல் அமர்த்திப்
பல்லக்கில் ஊர்வலம் செய்து பூமாலைகளும்,பரிசுகளும் தந்து பாராட்டி விழா
எடுப்பர். புலியைக் கொன்ற காட்சிகள் வீரத்தின் வெற்றிச் சின்னங்களாக கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியங்களாக கிடைத்துள்ளன கிடைத்த இடங்கள் மல்லசந்திரம், மகராசாகடை அருகில் பூதிக்குட்டை, கந்திலி மலை,பாண்டவர் பண்டா போன்ற சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment