(பொ-ள்.)
சிறுமந்தி முற்பட்டதந்தையை நெற்றுக் கண்டன்ன விரலால் குற்றிஞெமிர்த்திட்டு
முற்றல் பறிக்கும் மலைநாட -இளங்குரங்கு, பயற்றங்காயின்
நெற்றைக்கண்டாற்போன்ற தன் விரல்களால் தன் எதிர்வந்ததந்தையின் கையைக் குத்தி
விரியச்செய்து அதுவைத்திருந்த கனியைப் பறித்துக் கொள்கின்றமலைகளையுடைய
நாடனே!, ஒற்றுமை கொள்ளாதார் நட்புஇன்னாது - அகங்கலந்த நேயங்கொள்ளாதாரது
நட்புதுன்பமுடையதாகும்.
(க-து.) உள்ளம் ஒன்றுபடாதகூடாநட்பினரோடு நேயங்கொள்ளலாகாது.
(வி-ம்.)
முற்றல் - செங்காய் -சிறுமந்தியென்றது ஈண்டுக் குரங்கின் குட்டியை ;மந்தி,
பெட்டையை உணர்த்தாமற் பொதுவினின்றது.தந்தை : பொதுப்பெயர். ஞெமிர்தல்
புறத்தில்மட்டுங் கலந்து அகங்கலவாத வேறு பாட்டியல்பைப்புலப்படுத்தும்
பொருட்டு ‘ஒற்றுமை கொள்ளாதா'ரென்றார். பரத்தலாதலின் ஈண்டு
விரித்தலெனப்பட்டது.1 "வான் ஞெமிர்ந்து"என்பது மதுரைக் காஞ்சி.
|
No comments:
Post a Comment