ஆசையும், பயமும் தான் வாழ்க்கையில்
இரண்டு முக்கியமான உணர்ச்சிகளாம்!
பயம்தான் நிறைய எதிர்மறை
உணர்ச்சிகளுக்கு
தாய் மடின்னு சொல்லலாம்!
நான் ரொம்ப கோவமா இருக்கேன்னு
சொன்னாலே
அது உண்மையா கோவம் இல்ல?!
எதோ ஒரு பயம் தான்!
அதே போல தாங்க!
நான் ரொம்ப கவலையா இருக்கேன்கிறதும்!
நாம கவலைபட்டா எதுவோ ஆயிடும்னு
பயப்படறோம்!
பொறாமைய எடுத்துக்கோங்க!
அதன் மூலமே பயம் தாங்க!
நாம தாழ்ந்து இருக்கோமோ?
அப்படின்னுஒரு பயம்!
கோவம், பொறாமை, வருத்தம் கவலை
எல்லாமே பயத்தால் தாங்க வருது!
இந்த எதிர்மறை எண்ண்ங்கள்
இல்லாம சந்தோஷ்மா
நாம வாழனும்னா நம்ப பயத்துக்கான
உண்மையான காரணத்த
கண்டு பிடிக்கனும்!
இப்படி நம்பளோட பயத்தை
புரிஞ்சிகிட்டோம்னா
மத்தவங்கள குத்தம் சொல்ல மாட்டோம்!
அப்ப எல்லோரும் பயந்து தான்
வாழறாங்களா…
நிச்சயமா!
வேல போயிடுமோன்னு பயம்
குண்டா போயிடுமோன்னு பயம்
வயதான பின்னாடி தனியா
வாழ்னுமெங்கிற பயம்
சாகனும்னு பயம்
வியாதி வந்ததுன்னா பயம்!
பின்ன இந்த பயத்திற்கு எதுதான்
மருந்து
அப்படின்னா……..
அன்பு ஒன்னு தாங்க!
No comments:
Post a Comment