ஆளறிந்து அட்வைஸ் பண்ணு!


ஆளறிந்து அட்வைஸ் பண்ணு!
அட்வைஸ் செய்யும்போது யாருக்கு செய்கிறோம் என்பது முக்கியம். மிகவும் முரட்டுத்தனமாக இருப்பவர்களை 'பட்டு திருந்தட்டும்' என்று விட்டுவிடுவதுதான் நல்லது. இதை விளக்கும் ஒரு குட்டிக்கதை...
மழை சுழற்றியடித்துக்கொண்டிருந்த ஒரு நாளில், மரத்தடியில் ஒதுங்கியது ஒரு பெரிய குரங்கு. மரத்தில் கூடுகட்டியிருந்த ஒரு குருவி, மழையில் நனையும் குரங்கைப் பார்த்து வருந்தியது. அது குரங்கிடம் ''நான் சுறுசுறுப்பாக செயல்பட்டு கூடு கட்டியதால், இன்று மழையில் நனையாமல் சௌகரியமாக இருக்கிறேன். நீயும் சிரமத்தை பார்க்காமல் உழைத்து உனக்கான இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடாதா..!'' என்று கேட்டது. ஏற்கெனவே கஷ்டத்தில் இருந்த குரங்கு, 'குருவி எல்லாம் அட்வைஸ் பண்ணுதே' என்று மிகவும் கடுப்பானது.
``ஊசி மூஞ்சி மூடா... எனக்கா புத்தி சொல்கிறாய்! எனக்கு கூடு கட்டத் தெரியாது. ஆனால், கட்டிய கூட்டைக் கலைக்கத் தெரியும்'' என்ற குரங்கு, குருவிக்கூட்டை நாசம் செய்துவிட்டது. அட்வைஸ் செய்து அவதியில் சிக்கிய குருவி, ``இனிமேலாவது வாயைப் பொத்திக்கிட்டு இரு" என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டது.

No comments:

Post a Comment