பயனுள்ள குறிப்புகள்...!!!
* வெங்காயத்தை நறுக்கும்போது நம் கண்ணுக்குப் புலப்படாத ஆவி வரும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண்கள் மீது படும்படி வைத்தால் விரைவில் புண் ஆறும். வெங்காயச் சாற்றில் அமிலத் தன்மை இருப்பதே இதற்குக் காரணம்.
* தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று வந்தால் தொண்டையில் சதை ஏற்படாமல் தடுக்கும். தொண்டைப்புண்ணும் ஆறும்.
* காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் சோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை.
* பெருங்காயத்தைத் தினமும் ஒருவேளையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாயுவை வெளியேற்றுவதில் பெருங்காயம் பெரும்பங்கு வகிக்கிறது.
* கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு மட்டும் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
* விவசாயிகளுக்கும், சலவைத் தொழிலாளிகளுக்கும் தண்ணீரில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும் சாதாரணமாக வரக்ககூடிய கால் நோயான சேற்றுப்புண்ணிற்கு கால்களை ஈரம் போகத் துடைத்துவிட்டு மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப்புண் ஆறும்.
* தோல் வியாதிகள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். கொத்துமல்லி இலையை நன்றாக அரைத்து சொரசொரப்பான இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே தோல் மிருதுவாகும்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.
* வாய்ப் புண் வந்தவருக்குப் பகை காரம். முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறுசிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி போக்கும். தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* துளசி நீர் மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடிய அபாரமான மருந்து. துளசி இலையை ஒரு டம்ளரில் போட்டு ஊற வைத்து அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
* தொண்டைப் புண்ணுக்குப் பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் முற்றிலும் குணமாகும்.
* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. சாப்பிட்டவுடனே பயனைக் காணலாம்.
* சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து அதில் நூறு மில்லி தேங்காய் எண்ணெய்யை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
* சொத்தை விழுந்த நகங்களில் மருதாணியை இலையைத் தொடர்ந்து அரைத்துப் பற்று போல் போட்டு வந்தால் சொத்தை மறையும்.
* நெல்லி இலை, மருதோன்றி இலை ஆகிய இரண்டு இலைகளில் ஏதாவது ஒரு இலையை எடுத்து ஒரு சட்டியிலே போட்டு தண்ணீர் விட்டு அவித்து அந்த நீரிலேயே அடிக்கடி வாய் கொப்பளித்து வரவேண்டும். வாய் வேக்காடு ஆவியாகி மறைந்துவிடும்.
* வெள்ளரிப் பிஞ்சில் எந்த வைட்டமின்களும் இல்லைதான். ஆனால் இதைச் சாப்பிடுகிறபோது இரைப்பையில் ஒருவித ரசம் உற்பத்தியாகிறது. இது ஜீரணத்தைத் தூண்டுகிறது.
* வெங்காயம் ஓர் அருமருந்து. பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீர்படும். வழக்கமாக வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் முடக்கு வாத நரம்பு நோய்கள் தாக்காமல் தடுக்கும்.
* வாழைப்பழங்களில் சோடியம், கால்ஷியம், பொட்டாஷியம் போன்ற பலவகைச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் இருதய அழுத்தம் ஏறாமல் சீராக நடைபெற்று வரும்.
* கறிவேப்பிலையில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் இதைப் பச்சையாகவே சாப்பிட்டு வரலாம். கறிவேப்பிலை இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டிவிடுகிறது. வயிற்று இரைச்சலையும் குறைக்கிறது.
* வயிற்றிலுள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் உண்டாகிறது. இந்தக் குடல் புண்தான் அல்சர் எனப்படுவது. இந்த அல்சர் குணமாக வேண்டுமானால் பச்சை வாழைப்பழத்தைச் சாப்பிட்டு வரவேண்டும். குடல்களில் பழுதுபட்ட மெலிசான சவ்வுத் தோல்களைச் சீக்கிரமாக வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடுகிறது பச்சை வாழைப்பழம்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.
* வாய்ப் புண் வந்தவருக்குப் பகை காரம். முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறுசிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி போக்கும். தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக் கிருமிகள் செத்துப் போகும். பற்கள் எனாமல் சிதையாமல் இருக்கும்.
* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.
* நுனா இலையோடு சிறிதளவு சீரகம், நெற்பொரி கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் நாவறட்சி அடங்கும்.
* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். மூளை உற்சாகத்துடன் இருக்கும்.
வெயில் காலத்தில் நாம் வீட்டில் தயாரிக்கும் ஜூஸ்க்கு பானை நீர் சேர்த்து ஜூஸ் தயாரிக்கவும். ஐஸ் மற்றும் ப்ரிட்ஜ் நீரை தவிர்க்கவும் ஏனெனில் இவை இரண்டும் குடிக்கும் பொழுது ஜில் என்றிருந்தாலும். உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்தக்கூடியது. பானை நீர் உடம்புக்கும் நல்ல குளிர்ச்சி தரும்.
ஜூஸ் அல்லது சர்பத் குடிக்கும்போது நமது உமிழ்நீரில் சுரக்கும் அமிலேஸும், பெட்டேஸும் ஐஸூடன் கலந்து அதன் சத்துக்களை முழுமையாக ஜீரணிக்க உதவுகிறது. ஆகவே ஜூஸைத் தண்ணீரைப் போன்று "மடமட' எனக் குடிக்காமல் மெதுவாக உறிஞ்சி உமிழ்நீருடன் கலந்து பருக வேண்டும்.
இளநீரை கண்ணைத் திறக்காமல் சீவி வாங்கிக் கொண்டு முதல் நாள் இடும் இரவில் தண்ணீரில் போட்டு வைத்து காலையில் சீவிக் குடித்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

தினமும், "வாக்கிங்' போனால், இருதய, சர்க்கரை நோய் வராது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால், "ஹாச்... ஹாச்' என்று தும்மல் முதல் ஜலதோஷம் வரை எதுவும் வராமல் இருக்கவும் "வாக்கிங்' இலவச மருந்தாக இருக்கிறது. அமெரிக்க, சியாட்டல் மாநிலத்தில் உள்ள, "ப்ரெட் ஹட்சிசன் புற்றுநோய் மருத் துவ ஆராய்ச்சி மையத்தின்' ஆராய்ச்சியாளர்கள் குழு, இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில், இந்த புதுத்தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்குழுவின் தலைவர் கார்னிலா உல்ரிச், தன் ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: எந்தவகையில் செய்தாலும் பரவாயில்லை. எந்த முறையாக இருந்தாலும், அவற்றால் நல்ல பலன்கள் உண்டு என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த வகை உடற்பயிற்சியாலும், சாதாரண ஜலதோஷம் முதல் காய்ச்சல் வரை எதையும் அண்டாமல் இருக்கச் செய்யலாம்.அதுபோல, தினமும், அரை மணி நேர "வாக்கிங்' போதும். சுறுசுறுப்பாக அரை மணி நேரம் நடந்தால், ஜலதோஷம் கண்டிப்பாக வரவே வராது. இதை நாங்கள் சிலரை வைத்து ஆய்வு செய்ததில் கண்டுபிடித்துள்ளோம். மாதவிடாய் இறுதியை நெருங்கும் பெண்கள், கண்டிப்பாக, "வாக்கிங்' போக வேண்டும். அதனால், பெண்களுக்கு பல பயன்கள் உள்ளன. மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதுடன், அத்தகைய பெண்களுக்கு வேறு எந்த பிரச்னையும் ஏற்படாமல் தடுக்கிறது. "வாக்கிங்' போகாத சிலரை தேர்வு செய்து, அவர்களை "வாக்கிங்' போக செய்ததில், அவர்களுக்கு ஒரு மாதத்தில், படிப்படியாக ஜலதோஷம் உட்பட தொற்றுக்கிருமிகள் பாதிப்பு குறைந்து வருவதை கண்டுபிடிக்க முடிந்தது. இவ்வாறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
சிறுநீரக கோளருகளுக்கு ஒரு வைத்தியம்
அருகம்புல்லை ஒரு கை பிடியளவு எடுத்து நீர் விட்டு காய்ச்சி வடித்து அதனுடன் சிறிது பால் சர்க்கரை சேர்த்து
அருந்தி வர சிறுநீரக சபந்தமான நோய்கள் மறையும். சிறுநீரகமும் பலமைடயும்.
அருகம்புல் 2 பங்கு கீழாநெல்லி ஒரு பங்கு எடுத்து அரைத்து தயிருடன் சேர்த்து சாபிட்டுவர சிறுநீரினால் வரும் எரிச்சல்
குணமடையும்.