அலைபேசி எண் தெரியாமல் நண்பரிடம் பேச வேண்டுமா...!

அலைபேசி எண் தெரியாமல் தெரியாமல் நண்பரிடம்  பேச வேண்டுமா...!




உங்களுடைய நண்பருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம். உங்களது அலைபேசி எண் தெரியாமல் அதாவது நீங்கள் தொடர்பு கொள்ளும் நபருக்கு யாருடைய எண் என தெரியாது . அதுவும் இலவசமாகஎப்படி என்கிறிர்களா?https://ievaphone.com/ என்ற இணைய தளத்தில் இருந்து தொடர்பு கொள்ளலாம். பதிவு செய்ய வேணாம்(NO REGISTRATION)..ஆண்ட்ராய்டு மென்பொருளும் பயன்படுத்திக் கொள்ளலாம்.country code உடன் மொபைல் எண்ணை பயன்படுத்தலாம். உதாரணமாக இந்தியாவிற்கு +91  மொபைல் (country code + mobile no ) என்னை கொடுத்து கால் செய்து பாருங்கள்..

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய்

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய்: ரூ.493 கோடி நஷ்ட ஈடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாக்குலின் பாக்ஸ் (வயது 62) இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஜாக்குலின் பாக்ஸ் இறந்தார்.

ஜான்சன் - ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களைப் பயன்படுத்தியதாலே அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறிய அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜான்சன்-ஜான்சன் நிறுவனம் அதனுடைய உற்பத்தி பொருளான முகப்பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் இருப்பதை நுகர்வோருக்கு தெரிவிக்க தவறிவிட்டது என தெரிவித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட ஜாக்குலின் குடும்பத்தாருக்கு, 72 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டனர். இதன் இந்திய மதிப்பு ரூ. 493.50 கோடி ஆகும். இது சம்பந்தமான சுமார் 1000 வழக்குகள் மிசவுரி மாநில நீதிமன்றத்திலும், சுமார் 200 வழக்குகள் நியூஜெர்ஸி கோர்ட்டிலும் நிலுவையில் உள்ளன.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர்களில் 'டால்கம்' பயன்படுத்தப்படுகிறது. இந்த டால்கம் பொருளால் புற்றுநோய் ஏற்படுகிறது என தெரியவந்ததையடுத்து, அமெரிக்காவில் பெரும்பாலான அழகுசாதனப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் டால்கம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன. எனினும், ஜான்சன் - ஜான்சன் நிறுவனம் தொடர்ந்து டால்கமை பயன்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில், ஜான்சன் - ஜான்சன் பவுடரை பயன்படுத்த இந்திய பெண்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

139 கால் பண்ணுங்க! ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுங்க :

139 கால் பண்ணுங்க! ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுங்க : புதிய வசதி அறிமுகம்


ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், தேவையில்லை என்றால் தங்கள் மொபைல் மூலமே அதை ரத்து செய்யலாம் என்று புதிய வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
salemtamil.blogspot.com
 
 
இதற்கு முன்பு ரயிலில் பயணம் செய்தவர்கள், அதை ரத்து செய்ய விரும்பினால் ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டும். அல்லது இணையதளத்தில் ரத்து செய்யவேண்டும்.
 
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதிபடி, உங்கள் பயணத்தை ரத்து செய்வதற்கு உங்கள் மொபைலில் இருந்து 139 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், உங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய ஒரு கடவுச்சொல்(பாஸ்வேர்டு) அளிக்கப்படும். அதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் டிக்கெட்டை ரத்து செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல்...!

salemtamil.blogspot.in

ஒவ்வொரு முறையும்

எதிர்நீச்சல் போடுவதாக

நினைத்து கொண்டு

முயல்கிறேன்....!

 
கரையைத்தொடும்

முயற்சியில்

தோற்றுப்போகும்

கடல் அலைகள்போல......!

 சி.பி.வெங்கட்

ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!!

ஆண்களுக்கும்.. பிரச்சினை
இருக்குங்க..!!

1, ஒரு ஆண் கடுமையா உழைச்சா.. பொண்டாடியை
கண்டுக்கமாட்றான்'னு.. மட்டம் தட்டுவாங்க..!!

2, பொண்டாடியை கவனிச்சுக்கிட்ட  ா.. அவளையே சுத்தி வாரான்..
பொண்டாட்டி தாசன்'னு கட்டம் கட்டுவாங்க..!!


3, அது போகட்டும்.. ஒரு பொண்ணை பார்த்து.. அழகா
இருக்கே'னு சொன்னா.. அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுறாங்க..!!
 

4, கண்டுக்காம போன.. அழகை ரசிக்க தெரியாத ஜடம்..ன்னு
அமுக்கி வைப்பாங்க..!! 

5, ஏதாச்சும் அழுதோம்..ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரு'னு
சொல்லுவாங்க..!! 


6, திடமா இருந்தா.. நெஞ்சில ஈவு இறக்கம் இல்லாத அரக்கன்'னு
வாருவாங்க..!! 


7, பொண்டாடியை கேட்டு முடிவெடுத்தா.. தானா முடிவு
எடுக்க தெரியாத.. முட்டாள்'னு பட்டம் கட்டுவாங்க..!!


8, சரி'னு நாமளே ஒரு முடிவெடுத்தா.. ஆம்பளை'ங்கற
அதிகாரம்..ன்னு திட்டுறாங்க..!!


9, ஏதாவது பிடிச்சத வாங்கிட்டு போய் கொடுத்தா.. என்னத்துக்கு
இப்போ காக்கா பிடிக்கிறிங்க..? அப்படி'னு ஒரு நக்கல்..!!


10, ஒன்னுமே வாங்கிட்டு போகலை'னா.. ஒரு முழம்
பூவு'க்கு கூட.. நான் விதியத்து போய்டேனா..ன்னு மூக்கை
சிந்திட்டு.. விக்கல் வேற..!!


11, ஒரு குறிக்கோளோடு உழைச்சா.. வேலையை
கட்டிக்கிட்டு.. மாரடிக்க வேண்டியது தானே.. எதுக்கு
உங்களுக்கு பொண்டாட்டி.. ன்னு
ஒரு ஏசல்..!!


12, சரி'ன்னு சினிமாவுக்கு அழைச்சிட்டு போனா.. அந்த
ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணும்'ங்க.. எப்படி உழைச்சி
முன்னேறி.. கார் பங்களா வாங்கி இருக்கான்.. பாத்தீங்களா..? ன்னு..
ஒரு பூசல்..!!


13, இதையெல்லாம் கேட்டு.. சகிப்பு தன்மை வந்து..
வாழ்க்கையே வெறுத்து.. தற்கொலை செய்து
கொள்ளலாம்'னு முடிவெடுத்தா.. இத பாரு.. வாழ்வதற்கு பயந்து
கொண்டு.. தற்கொலை செய்ய பாக்குறான்.. பயந்தா கொள்ளி பய..
ன்னு சொல்லுவாங்க..!!


14, சரி'ன்னு இது போல.. பூசல்களை கேட்டும் கேக்காமல்
தன் வழியே ஒரு ஆண் நடந்து போனா.. இதப் பாரு நாம பேசுற
பேச்சுக்கு.. இதே வேற எவனா இருந்தா தூக்குல தொங்குவான்..
இவன் ஒரு மானாங்கெட்ட பய..ன்னு சொல்லுவாங்க..!!
அன்பு நண்பர்களே...


இத பார்த்து நல்லா இருக்கு'னு எழுதினா.. ஆண் ஆதிக்க உலகம்
அப்படி'னு சொல்லுவாங்க..!! 


இது தப்பு பெண்கள் நல்லவர்கள்'னு எழுதினா.. உலகம்
தெரியாத பைத்தியகாரன்..ன ்னு
சொல்லுவாங்க..!!


பொதுவா ஆண்களுக்கு பிரச்சினை.. இருந்து கொண்டே
தான் இருக்கு..!!

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!


வீட்டு இணைப்புகளுக்கானது:-

முதல் நிலை:-

1-100 யூனிட் வரை ரூபாய் 1.00, நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)

இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50. நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
 (நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)

மூன்றாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00. (நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல்
உபயோகிக்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட்
வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம்  ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)

நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00

(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10
யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்
செலுத்தவேண்டும்)

அனைவரும் அறிய பகிருங்கள் நண்பர்களே..BY TNEB
============================================
 நன்றி குருஜி..

உலகின் விலை குறைந்த ஸ்மார்ட் போன்.



உலகின் விலை குறைந்த ஸ்மார்ட் போன்:
RINGING BELLS என்ற இந்திய நிறுவனம், ரூ.251 க்கு இந்த SMART  போனை அறிமுகம்.இந்த ஸ்மார்ட்போனுக்கு "ப்ரீடம் 251" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த குறைந்த விலை ஸ்மார்ட் போனை www.freedom251.com என்ற இணையதளத்தின் மூலம் பெறலாம்.
ப்ரீடம் 251 ல் சிறப் :
DISPLAY: 960x540 பிக்செல் திறன் கொண்ட 4 இன்ச் திரை.
MEMORY: 1GB RAM, 8GB INTERNAL MEMORY, 32 GB EXPANDABLE .
CAMERA: 3.2 MP . 0.3 FRONT CAMERA.
BATTERY: 1450 எம் ஏஹச் பேட்டரி.
* ஒரு வருட உத்தரவாதம். இதில் குறைபாடுகள் ஏற்பட்டால் சரி செய்வதற்காக நாடு முழுவதும் 650 சேவை மையங்களை ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது.

எனது கிறுக்கல்கள்..........


பங்குச் சந்தையில் ஜெயிக்க வாரன் பஃபெட்(Warren Buffet) சொன்ன எளிய உத்திகள்

பங்குச் சந்தையில் ஜெயிக்க வாரன் பஃபெட்(Warren Buffet) சொன்ன எளிய உத்திகள் : 

Investment Strategies from Warren Buffet;

Warren Buffet ஒரு long term trader. அவர் என்ன மாதிரியான கம்பெனியின் பங்குகளை வாங்குகிறார் என்று பார்ப்போமா?

IT Software companies,fibre obtics, biotech கம்பெனிகளில் முதலீடு செய்திருப்பார் என்றால் சுத்தமாக இல்லை. அவர் பார்வையில் இந்த கம்பெனிகள் எல்லாம் Sexy. அவர் விரும்புவதோ girl next door.
அவர் உத்திகளில் மிக முக்கியமானது new economy அல்லது cutting edge of technology கம்பெனிகளில் முதலீடு செய்தால் முதலில் முதலீடு செய்கிற முதலீட்டாளர்களுக்கு அதிகமான பலன் கிடைக்காது. எதெல்லாம் பரபரப்பாக இருக்கிற தொழிலாக இருக்கிறதோ அதெல்லாம் நீண்டகால அடிப்படையில் பார்த்தால் பலன் உள்ளதாகவே இல்லை என்கிறார். ஐந்து வருடங்க்குக்கான பலனை எதிர்பார்த்து முதலீடு செய்யாதீர்கள். 10 அல்லது 20 வருடங்களுக்கானதை யோசியுங்கள் என்கிறார்.

அவர் முதலீடு செய்த கம்பெனிகள் அமெரிக்காவில் என்ன என்ன உற்பத்தியில் ஈடுபட்டவை தெரியுமா?

செங்கல், பெயின்ட், கார்ப்பெட், மரசாமான்கள் – இந்தகம்பெனிகளில் முதலீடு செய்தார். சீனாவில் ஒரு சமையல் எண்ணெய் தயாரிக்கிற கம்பெனியின் பங்குகளில் அந்த கம்பெனியின் பங்குகள் பாதாளத்தில் வீழ்ந்தபோது முதலீடு செய்தார். Underwear கம்பெனியில் பணத்தைப் போட்டார்.

தொண்ணூறுகளில் வந்த .com கம்பெனிகளில் பணம் போட மறுத்து விட்டார். அப்போது எல்லா முதலீட்டாளர்களுக்கும் .com ஜூரம் பிடித்திருந்த்து. அவர் சொன்னது அங்கே assets எங்கே உள்ளது. அவைகள் மிகக் குறைந்த காலத்துக்கு வெற்றிகரமாக இயங்கும் என்றார்.

அவரின் வாதப்படி, அந்தக் கம்பெனிகளின் வருவாய் எந்த எந்த வழிகளில் வரும் என்று என்னால் கணிக்கவே இயலாது. எது என்னால் கணிக்க இயலாதோ அதில் முதலீடு செய்யமாட்டேன். இந்த discipline மிக முக்கியம். இதை குலைக்கும்படியாக , தூண்டக்கூடிய நிகழ்வுகள் பங்குச்சந்தையில் நடக்கும். அப்போதெல்லாம் ‘செயலின்மை’தான். கம்மென்று இருப்பது. மனக்கட்டுப்பாடு அவசியம்.

தினம் தினம் வியாபாரம் செய்பவன் கொழுத்த லாபம் பார்க்க இயலாது என்கிறார் Warren Buffet.

கடைசியில் சிறந்த Performer யார் என்று பார்த்தால் அவர் Sexy Companies என்று சொன்னவை அல்ல. Boring companies என்று வர்ணிக்கப்பட்ட செங்கல், பெயின்ட், கார்ப்பெட்,Underwear கம்பெனிகளே

முயலும் ஆமையும் கதையை அவர் ஞாபகப் படுத்துகிறார். மெதுவாக என்றாலும் ஆமை ஜெயிக்கும் என்கிறார். நாம் அத்தகைய நிறுவனங்களை அடையாளம் கண்டு கொள்வதெப்படி?

· உங்களுக்கு சரிவர விபரம் தெரியாத business ல் முதலீடு செய்யாதீர்கள்.

· ஆதிகாலத்து business செய்கிற கம்பெனிகள் (உதாரணத்திற்கு செங்கல், பெயின்ட், கார்ப்பெட்,Underwear இதுபோன்று நிறைய business செய்கிற கம்பெனிகள்) பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். ஞாபகம் இருக்கட்டும். இது மட்டுமே போதுமானது ஆகாது. இந்தப் பட்டியல் முதல் சுற்றுக்கு தகுதியானது.

· Great Company என்று பெயர் எடுக்க நீண்டகாலம் பிடிக்கிறது. முதல் வருடம் நன்றாக லாபம் காட்டிவிட்டு அப்புறம் கீழே இறங்குகிறவை நிறைய உண்டு

இவை முதல் சுற்றுக்கான பட்டியல். இதன் பின்பு இவற்றிலிருந்து நீக்கப் பட வேண்டியவைகள் உண்டு. எப்படி நீக்குவது? நிறைய விஷயங்கள் உண்டு.

அதற்கு முன்னால் இன்னொரு விஷயம்...

ஒரு trader ரொம்ப active ஆக இருக்கிறார். பங்குகளை வாங்குகிறார் பங்குகளை விற்கிறார் என்றால் அவர் லாபம் சம்பாதிக்கிறார் என்று அர்த்தமில்லை. Achievement ஐயும் activities ஐயும் குழப்பிக் கொள்ளாதீர்கள். அவர் busy ஆக இருக்கிறார் என்றே அர்த்தம்.

Trading பண்றேன் என்பதற்காகவே trading பண்ற கூட்டத்தில் நீங்களும் சேர்ந்து விடாதீர்கள் என்கிறார் Warren Buffet .

நீங்களே முடிவு செய்யுங்கள். யார் பேச்சைக் கேட்டு முடிவு செய்யாதீர்கள். நீங்களே முடிவு செய்ய உழைப்பு தேவைப்படுகிறது. சட்டென்று முடிவு எடுத்து வாங்கி, சட்டென்று விற்று...இது வேண்டாம் என்கிறார்.

Mutual fund –ல் முதலீடு செய்தால் அதற்கு transaction cost என்றெல்லாம் உண்டு. நீண்ட காலத்துக்கு பங்குகளை வைத்திருக்க நீங்களே முதலீடு செய்யுங்கள் என்கிறார்.

நிறைய கேள்வி கேளுங்கள்

Prospectus படியுங்கள் நிறைய கேள்வி கேளுங்கள்.

உங்களுக்கு சந்தேகம் வருகிறமாதிரி இருந்தால் முதலீடு செய்யாதீர்கள். ஏனெனில் பணம் போனால் போனதுதான். ஆனால் வாய்ப்பு போனால் பங்குச் சந்தையில் மறுபடியும் கண்டிப்பாக வரும். அங்கே அலைகள் Greed மற்றும் Fear இந்த இரண்டினால் மறுபடி மறுபடி வரும்.

குறுகிய கால பலன்களை கணிக்கிற ரிப்போர்ட்ஸ் எல்லாமே எதிர்காலத்தைப் பற்றிச் சொல்வதில்லை. எவன் ஒருவன் கணிக்கிறானோ அவனைப் பற்றிய விவரங்களே' என்கிறார்.

Short term forecasts of stock or Bond prices are uselss. he says they tell more aBout the forecaster not aBout the future.

அவர் சொல்கிற காரணம் எதுவெனில் இந்த reports எல்லாமே பங்குகள் எப்படி போகிறது என்பதன் அடிப்படையில். ஆனால் அந்த கம்பெனியின் business எப்படி கடந்த காலங்களில் perform செய்தது என்ற விவரங்கள் வேண்டும். அதன் அடிப்படையில் முடிவெடு. அது அரைமணிக்கொரு முறை மாறிக்கொண்டிருக்கிற share price மாதிரி business இருக்கவே இருக்காது.

அப்படி மாறிக் கொண்டிருக்கிற புள்ளி விவரங்களை வைத்து தயாரிக்கப் படுகிற reort பிரயோஜனமில்லை என்கிறார் Warren Buffet.

முதலீட்டு முடிவு எடுப்பதில் பங்கின் சந்தை விலை மிக மிக குறைந்த அளவிலான பங்கு வகிக்கிறது. மற்றவை அந்த கம்பெனியின் business performance அடிப்படையிலேயே இருக்கவேண்டும்.

வாழத் தெரிந்த மனிதர் வாரன் பஃபெட்...

வாழத் தெரிந்த மனிதர் வாரன் பஃபெட் (Warren Buffet)



நான் பணக்காரனாவேன் எனக்கு எப்போதுமே தெரிந்திருந்தது. அதைப்பற்றி ஒரு நிமிடம்கூட சந்தேகித்ததாக ஞாபகமில்லை – வாரன் பஃபெட்.
வாரன் பஃபெட்டைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு:
அதிகமில்லை வெறும் 31 பில்லியன் டாலர்தான் உலக மக்களின் நலனுக்காக நன்கொடையாக கொடுத்துள்ளார்.
பில்கேட்ஸ் இவரிடம் பேச அரைமணிநேரம் ஒதுக்கியிருந்தார்.   பஃபெட் பேச ஆரம்பித்த பின்னர் அந்த உரையாடல் 10 மணி நேரத்திற்கு நீண்டது.
பஃபெட்டின் சமீபத்திய கோரிக்கை – பணக்காரர்கள் தங்களது செல்வத்தில் பாதியை நன்கொடையாகத் தாருங்கள் என்பதே.
சி.என்.பி.ஸி தொலைக்காட்சி அவரிடம் எடுத்த பேட்டியின் சாராம்சம் இது.
வாரன் பஃபெட் தனது 11ம் வயதில் பங்குச் சந்தையில் தனது முதல் பங்கை வாங்கினாராம்.. ரொம்ப லேட்டாக முதலீடு செய்துவிட்டேன் என இப்போது வருந்துகிறார்.
பெரியவர்களுக்கு அவர் சொல்வது “குழந்தைகளை முதலீடு செய்ய ஊக்கப்படுத்துங்கள்.”
தனது 14வது வயதில் வீடுகளுக்கு பேப்பர் போடுவதில் சேமித்த தொகையைக்கொண்டு ஒரு பண்ணைவீட்டை வாங்கினார்.
அவர் சொல்வது சிறுகச் சிறுகச் சேர்த்தே பல பொருட்களை வாங்கிவிட முடியும்.
உங்கள் குழந்தைகளை ஏதேனும் ஒரு தொழில் செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
வாரன் பஃபெட் வசிப்பது மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டில். அதுவும் அதை அவர் 50 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனபோது வாங்கியது. அவர் அதில் அவருக்கு வேண்டிய எல்லா வசதியும் இருக்கிறது என்கிறார். வீட்டைச் சுற்றி கோட்டைச் சுவரோ அல்லது வேலியோ கிடையாது. ஒரு பணக்காரர் எப்படிப்பட்ட வீட்டில் இருக்கவேண்டும் என நாம் நினைக்கிறோமோ அதற்கு நேரெதிரான வீட்டில்.
அவர் சொல்வது உங்களது தேவைக்கு மேல் எதையுமே வாங்காதீர்கள். அதுபோன்றே உங்கள் குழந்தைகளை சிந்திக்கவும் செயல்படவும் வையுங்கள்.
தனது காரை தானே ஓட்டிச் செல்கிறார். ஓட்டுனர் வைத்துக்கொள்வதில்லை. பாதுகாப்பிற்கும் ஆள் வைத்துக்கொள்வதில்லை.

அவர் சொல்வது “ நீங்க நீங்கதான்” நம்மால ஓட்ட முடிஞ்சப்போ நமக்கு எதுக்கு டிரைவர்?
அவர் வெளியூர் செல்ல தனக்கென பிரைவேட் ஜெட் வைத்துக் கொள்வதில்லை. இதென்ன பிரமாதம் என்கிறீர்களா?
உலகின் மிகப்பெரிய ஜெட் கம்பெனியின் முதலாளி இவர்.
அவர் சொல்வது உங்கள் வேலைகளை எவ்வளவு சிக்கனமாக ஆக்கிக்கொள்ள முடியுமோ அப்படி வைத்துக்கொள்ளுங்கள்.
இவரது கம்பெனியின் பெயர் ”ஹாத்வே பெர்க்‌ஷையர்” 63 கம்பெனிகளைக் கொண்டது. இவர் அந்தந்த கம்பெனியின் மேலாளர்களுக்கு ஆண்டிற்கு ஒரே ஒருமுறை அடுத்த ஆண்டிற்கான வியாபாரக் குறிக்கோள்களைக் குறித்து கடிதம் எழுதுகிறார். மீட்டிங் போடுவதோ, அவ்வப்போது கூப்பிட்டுப்  பேசுவதோ இல்லை.
அவர் சொல்வது சரியான இடத்தில் சரியான ஆளைப் போடுங்கள். திருவள்ளுவர் இதை 2000 வருஷம் முன்னாடியே சொல்லிவிட்டார். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் அப்படின்னு.
அவரது கம்பெனியின் தலைமை செயல் அலுவலர்களுக்கு இரண்டே இரண்டு விதிமுறைகள்தான் கொடுத்துள்ளார்.
விதிமுறை ஒன்று: உங்கள் பங்காளர்களின் பணத்தை எப்போதும் இழக்காதே.
விதிமுறை இரண்டு : விதிமுறை ஒன்றை மறக்காதே.
அவர் சொல்வது, ஆட்களுக்கு குறிக்கோள்களைக் கொடுத்துவிடுங்கள். அவர்கள் அதன்மீதே கவனம் வைத்திருக்கிறார்களா என்பதை மட்டும் பாருங்கள்.
பெரிய மனிதக் கூட்டத்துடன் சேர்ந்திருப்பதில்லை. வீட்டிற்கு வந்ததும் அவரது பொழுதுபோக்கு பாப்கார்னைப் பொரித்துக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பதுதான்.
அவர் சொல்ல வருவது…பெருமை பீற்றிக்கொள்ளாதீர்கள். பெருமைக்காக உங்கள் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். நீங்கள் நீங்களாக இருங்கள், உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்.
வாரன் பஃபெட் மொபைல்போன் வைத்துக்கொள்வதில்லை, ஒரு கம்ப்யூட்டர்கூட கிடையாது அவரது அலுவலகத்தில்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் பணக்காரர் பில்கேட்ஸ், வாரன் பஃபெட்டைச் சந்திக்க அரை மணி நேரம் ஒதுக்கியிருந்தார். இருவருக்குள்ளும் ஒத்த விஷயங்கள் என எதுவும் கிடையாது என நினைத்துக் கொண்டு. ஆனால் அந்த சந்திப்பு  10 மணி நேரத்திற்கு நீண்டது. சந்திப்பு முடிந்தபோது பில்கேட்ஸ், கிட்டத்தட்ட வாரன் பஃபெட்டின் பக்தனாகிவிட்டார்.
இளம் வயதினருக்கு வாரன் பஃபெட் சொல்வது..
கடன் அட்டைகளிலிருந்து தூர விலகி இருங்கள்.. உங்களையே நீங்கள் முதலீடாக்கி நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது
1. பணம் மனிதனை உருவாக்கவில்லை, மனிதன்தான் பணத்தை உருவாக்கினான்.
2. எவ்வளவு எளிமையாய் வாழமுடியுமோ அவ்வளவு எளிமையாய் வாழுங்கள்.
3. மற்றவர்கள் சொல்வதைச் செய்யாதீர்கள், அவர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு உங்களுக்குச் சரியெனப்படுவதைச் செய்யுங்கள்.
4. பெரிய கம்பெனியின் தயாரிப்பு என்பதற்காக எதையும் வாங்காதீர்கள். உங்களுக்கு சௌகரியப்படும் பொருட்கள் எங்கு கிடைத்தாலும், எவ்வளவு விலையிலும் வாங்கி அணியுங்கள்.
5. தேவைப்படும் செலவுகளைத் தவிர வேண்டாத செலவுகளைச் செய்யாதீர்கள்…
6. இது உங்கள் வாழ்க்கை, இன்னொருவர் உங்களை ஆள ஏன் வாய்ப்புத்தரவேண்டும்?
மகிழ்ச்சியான மக்களிடம் எல்லா சிறந்தவைகளும் இருக்கவேண்டியதில்லை..அவர்கள் இருப்பதைக் கொண்டு மகிழ்வுடன் இருக்கிறார்கள்.
எளிமையான மற்றும் புத்திசாலித்தனமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்போம்.
எவ்வளவு ஈசியா இருக்கு?
 நன்றி.

கண்ணில் பட்டால் போதும்..


கண்ணில் பட்டால் போதும் 
ள்ள தனமாய் சிரிக்கிறாள்!

ஏனோ தெரியவில்லை?
எனக்கும் ஒன்றும் புரியவில்லை!

அவளை மறந்து விட்டதாக!!!...

 


உன் அண்ணன் அடித்து
உன் தம்பி உதைத்து
உன் அம்மா வசைபாடி!

ஊர் முன்னால் பஞ்சயத்தில் கட்டிவைத்து
நண்பர்களும்உறவினர்களும் 
 வேடிக்கை பார்த்து!

நாற்று பரிப்பவளுக்கும்
நடவு காரிகளுக்கும்
தலைப்பு செய்தியாகி!

சொந்தகளும்  சுற்றங்களும்
தள்ளி வைத்து!
ஊர் சனங்களும்,
எள்ளி நகைத்து

இப்படி எல்லாம் கேவலப்படுத்தி விட்டதால்
இந்த ஊர் சனம்  நினைத்து கொண்டிருக்கிறது!
 
அவளை மறந்து விட்டதாக!!!...


ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது



ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது
========
ஆண் என்பவன்...
கடவுளின் உன்னதமான படைப்பு
சகோதரிகளுக்காக, இனிப்புகளை  தியாகம் செய்பவன்
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்
காதலிக்கு  பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்
மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகுவைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன்
எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்
இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன்
அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்
அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம்
வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம்
குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம், கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம்
மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம், அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்
தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்; மனைவி சொல்வதை கேட்டால், 'பொண்டாட்டி தாசன்' என்போம்
ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.
இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும் பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்..!

Ibrahim Mohamed's photo.

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்..!
மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை.
மரணம் தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.
ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய மரணம் நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.
...
அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.
முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."
இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."
மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."
வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.
அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.
1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.
2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!
3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக.