
உன் அண்ணன் அடித்து
உன் தம்பி உதைத்து
உன் அம்மா வசைபாடி!
ஊர் முன்னால் பஞ்சயத்தில் கட்டிவைத்து
நண்பர்களும், உறவினர்களும்
வேடிக்கை பார்த்து!
நாற்று பரிப்பவளுக்கும்
நடவு காரிகளுக்கும்
தலைப்பு செய்தியாகி!
சொந்தகளும் சுற்றங்களும்
தள்ளி வைத்து!
ஊர் சனங்களும்,
எள்ளி நகைத்து
இப்படி எல்லாம் கேவலப்படுத்தி விட்டதால்
இந்த ஊர் சனம் நினைத்து கொண்டிருக்கிறது!
அவளை மறந்து விட்டதாக!!!...
No comments:
Post a Comment