"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித் தானா? " - இந்த வரிகளைப் பாடியவர் - இராமச்சந்திரக்கவிராயர்
இராமச்சந்திரக்கவிராயர் துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்.
சொற்பொருட்கள்
அல்லைத்தான் - அதுவும் அல்லாமல்
பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரமன்
குமரகண்ட வலிப்பு - ஒருவகை வலிப்பு நோய்
---
"பகுத்தறிவு கவிராயர்" என அழைக்கப்படுபவர் - உடுமலை நாராயணகவி
மாயாவரத்திற்கு அடுத்துள்ள ஒரூர் கொரநாடு என்ற பெயர் " கூறைநாடு" என்பது மருவி உருவானது.
நம்மாழ்வார் பிறந்த ஊர் - குருகூர் (தற்போது ஆழ்வார்த்திருநகரி)
மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சுரம் சிவாலயத்தைப் பற்றி திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்
திருவல்லிக்கேணி என்பது அல்லிக்கேணி என்பதன் மருவி உருவானதாகும். அல்லிக்கேணி என்றால் அல்லிக்குளம் என்று அர்த்தம்.
"ஊரும் பேரும்" என்ற நூலை எழுதியவர் - ரா.பி.சேதுபிள்ளை
"புரம்" என்னும் சொல் - சிறந்த ஊர்களைக் குறிப்பது
"பட்டினம்" என்னும் சொல் - கடற்கரையில் உருவாகும் நகரங்களைக் குறிப்பது ஆகும்.
"பாக்கம்" - கடற்கரைச் சிற்றூர்கள்
"புலம்" - நிலம் என்பதை குறிக்கும் .(மாம்புலம்)
"குப்பம்" - நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள்
--------
இலக்கணம்
மாத்திரை
கண் சிமிட்டும் நேரம்/ விரல் சொடுக்கும் நேரம் மாத்திரையின் கால அளவாகும்.
மெய்யெழுத்து - அரை மாத்திரை
உயிரெழுத்து (குறில்) - ஒரு மாத்திரை
உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை
உயிர்மெ (குறில்) - ஒரு மாத்திரை
உயிர்மெய் (நெடில் ) -இரு மாத்திரை
VERY GOOD
ReplyDelete