அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும்
சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும்.
அணி பலவகைப்படும். அவற்றுள் சில,
- தன்மையணி
- உவமையணி
- உருவக அணி
- பின்வருநிலையணி
- தற்குறிப்பேற்ற அணி
- வஞ்சப் புகழ்ச்சியணி
- வேற்றுமை அணி
- இல்பொருள் உவமையணி
- எடுத்துக்காட்டு உவமையணி
- இரட்டுறமொழிதலணி
தன்மை நவிற்சி அணி என்பது எவ்வகைப் பொருளையும் அல்லது எச்செயலையும்
உண்மையான முறையில் உள்ளபடி உள்ளதாக விளக்கும் சொற்களால் அமைவது. இது இயல்பு
நவிற்சி அணி எனவும் கூறப்படும்.
இருந்து முகந் திருத்தி
ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப
வருந்தி ஆடினாள் பாடினாள்
ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத்தான்
இக்கவிதை வரிகளில் உருவக அணியோ அன்றி உவமை அணியோ இல்லாததைக் காண முடிகிறது.
No comments:
Post a Comment